|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

Google Buzz (கூகிள் பஸ்)

சமீபத்தில் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்ககூடிய புதிய சமூக கட்டமைப்பு பிணையம் (Social Networking). நமக்கு பிடித்த படங்கள், வாசகங்கள், எண்ணங்கள் இவற்றை நண்பர்களுடன் எளிதாக‌ (பேஸ் புக்கை போல‌) பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டதே இந்த பஸ். நல்ல முயற்சி தானே, பிறகு ஏன் சர்ச்சை? கூகிள் அறிமுகப்படுத்திய விதம் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. ஆம், அதுவாகவே ஊடுருவி, தனது அஞ்சல் பெட்டிக்குள் வந்தமர்ந்தது, உரிமை கொண்டாடுவது போன்ற உணர்வு. இதுவே தனி செயலியாக (application) இருந்திருந்தால் இத்தனை விவாதங்கள் இருந்திருக்காதோ?

சரி, பேஸ் புக்கை இந்த புதிய பஸ் முந்தி விடுமா? தற்போதைய புள்ளி விபரப்படி, பேஸ் புக் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 400 மில்லியன்க‌ள், ஜீமெயில் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 176 மில்லியன்களே, கூகிள் தனது ஆர்வலர்களை கவர்ந்திழுக்க பல சர்க்கஸ்களை செய்யும் என்பது பலரது கணிப்பு. தேடு பொறி (Search Engine) நுணுக்கத்திலும் அவர்கள் முன்னோடியாக இருப்பதால், காலப்போக்கில் இந்த பஸ் வெற்றி நடை போடும் என்பது வல்லுனர்களின் கருத்து.

நமது தளத்தில் வந்தமர்ந்து விட்டது, என்னவென்று தான் பார்த்துவிடுவோமே என இப்பொழுதே இதனை பலர் உப்யோகிக்கத் தொடங்கி விட்டார்கள், பேஸ்புக், ட்விட்டர், லின்க்‍இன் என பத்தோடு பதினோன்றாக இந்த பஸ்ஸும் வலம் வரும். ஓ.கே போலாம் ரைட்...

----------------
Parallel Parking (இணையாக-நிறுத்தல்)

வாகன‌ங்களை இணையாக தரிப்பிடத்தில் (Parallel Parking)சரியான முறையில் நிறுத்துவது தனி திறமையே, அவரவர் விவேகத்தை பொருத்து ஒரு சில வினாடிகள் முதல் பல நிமிடங்கள் வரை ஆகும். வரலாறு முக்கியம்ங்கிற மாதிரி நமது அன்றாட வாழ்விலும் கணக்கும் பிணைந்து முக்கியத்துவம் பெறுகிறது, லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு ஆய்வாளர் இதனை ஃபார்முலா மூலம் விளக்கியுள்ளார், ஆக நமது வாகனத்தை நிறுத்தும் போது வ‌ட்டம், கோடு போன்ற வடிவவியல் (Geometry) காரணிகளை பின்பற்றுகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் மிகவும் உபயோகமாக இருக்கும், எப்படி, எந்த இடத்தில் சரியாக வளைத்தால், சரியாக நிறுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது.


------------------

Biscuits (பிஸ்கோத்து)

சென்ற வாரம் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடையில் அரபி, ஆங்கில மொழிகளால் எழுதப்பட்டு அடுக்கி வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளில் நடுவில் கண்ணை கவர்ந்தது தமிழ் மொழியில் 'சூப்பர் கிறீம் கிறக்கர்' என‌ எழுதப்பட்ட இந்த பிஸ்கெட் பாக்கெட், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். நல்லா இருக்கு.

------------


Source: The Geometry of Perfect Parking by Simon R. Blackburn
Credit: Alyson Hurt, NPR

34 comments

Adirai Express on February 18, 2010 at 9:52 AM  

கூகிள் (BUZZ) பஸ்,பார்க்கிங்கை பற்றிய தகவல் ரொம்ப நன்றாக இருந்தது,


Adirai Express on February 18, 2010 at 9:58 AM  
This comment has been removed by the author.

Chitra on February 18, 2010 at 9:59 AM  

"Buzz" off பண்ணிட்டேன். no problem.
parallel parking - good one.
கிறக்கர் - நல்ல முறுமுறு செய்தி.


ஹுஸைனம்மா on February 18, 2010 at 10:15 AM  

//எப்படி, எந்த இடத்தில் சரியாக வளைத்தால், சரியாக நிறுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது//

அப்ப ஒவ்வொருக்க பார்க் பண்ணும்போதும், இறங்கி அளவெடுத்து, இந்த ஃபார்முலா வச்சு கணக்குப் பாத்து, அப்புறம் பார்க பண்ணனுங்களா?


ஹுஸைனம்மா on February 18, 2010 at 10:17 AM  

//சூப்பர் கிறீம் கிறக்கர்'//

சாப்பிட்டா ரொம்ப கிறக்குமோ?


நாஞ்சில் பிரதாப் on February 18, 2010 at 10:38 AM  

பார்க்கிங் விசயத்துல இவ்ளோ பெரிய கால்குலேஷன் இருக்கா??? ஒரு சிறந்த ஓட்டுனரால் வெறும் கண்ணாலேயே இந்த கால்குலேஷனை போட்டுவிட முடியும்...

//அப்ப ஒவ்வொருக்க பார்க் பண்ணும்போதும், இறங்கி அளவெடுத்து, இந்த ஃபார்முலா வச்சு கணக்குப் பாத்து, அப்புறம் பார்க பண்ணனுங்களா?//

ஆமாங்க...வண்டி வாங்கும்போது ஒரு அளக்குற டேப்பையும் கூட வாங்கி வச்சுக்கனும்...
எப்படி ஹுசைனம்மா இந்த மாதிரில்லாம் கேட்கத்தோணுது...


இராகவன் நைஜிரியா on February 18, 2010 at 10:50 AM  

சூப்பர்...

பஸ்ஸில் ஆரம்பிச்சு.... பார்க்கிங்க் போய் ....பிஸ்கட் வாங்குவதில் முடிஞ்சு இருக்கு...


அன்புடன் மலிக்கா on February 18, 2010 at 12:38 PM  

மிக அருமையான விளக்கத்துடன் இருக்கிறது ஷபியண்ணா..


பா.ராஜாராம் on February 18, 2010 at 1:21 PM  

அருமையான பகிர்வு,சபி!


அபுஅஃப்ஸர் on February 18, 2010 at 2:09 PM  

அமீரகத்துலே கார் லைசன்ஸ் எடுக்கயிலே பிராக்டிகலா படத்துலே ரெட் மார்க் உள்ளதுப்போல் குச்சி நட்டு வெச்சு ஒவ்வொரு அசைவும் கணக்கில் கொண்டு, எத்தனி முறை ஸ்டீரிங் எந்தப்பக்கம் திருப்ப வேண்டும் என்பது முதற்கொண்டு சொல்லித்தந்து அதன்படி காரை பார்க் செய்தால் அழகாக உட்காரும். இப்போதான் தெரியுது ஒருவேளை இந்த ஃபார்முலாவைதான் இவர்கள் கையாளுகிறார்கள் என்று


"உழவன்" "Uzhavan" on February 18, 2010 at 2:40 PM  

நல்ல தகவல்கள் பாஸ் :-)


MAK on February 18, 2010 at 2:58 PM  

வண்டி பார்க் பண்றதுக்கு கூட கணக்கா... ரைட்டு..


நட்புடன் ஜமால் on February 18, 2010 at 3:19 PM  

கலந்து கட்டி அடிச்சிறுக்கீங்க

ஷஃபி.

அருமை

இதைத்தான் டைமிங் சென்ஸுன்னு சொல்லுவாங்களோ ...


Mrs.Menagasathia on February 18, 2010 at 3:39 PM  

நல்ல தகவல்கள் சகோ!!


goma on February 18, 2010 at 3:47 PM  

நீங்கள் சொன்னது போல் நாம் ஓகே ரைட் ,சொல்லாமலேயே தானாகவே buzz கிளம்பியிருக்கிறது.....
இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு....
அதுவும் அந்த பஸ்ஸுக்குள்ளே ...தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு ஒரு கூட்டமே கும்மி வேற அடிக்குது....
-----
கார் ட்ரைவிங்ல ...நான் மார்க போட்டால்,இந்த இணைகோட்டு நிறுத்தம் குறைந்த எண்ணிக்கையில் முன் பின் எடுத்து நிறுத்துபவர்களுக்கு ,கண் அள்வில் வட்டம் போட்டு ஒரே டேக்கில் யூ திருப்பம் செய்பவர்களுக்கும்,தாராளமாக அள்ளிப் போட்டு விடுவேன்
------
கிறக்கர் பரவாயில்லை,பாளையங்கோட்டை செல்லும் வழியில் பழைய TVS அலுவலகத்துக்கு எதிரே ஸ்னேக் பார்[snack bar]பார்த்திருக்கிறேன்


அக்பர் on February 18, 2010 at 4:48 PM  

பிஸ்கோத்து அருமை.

பல விசயங்களை எளிமையா அருமையா சொல்லியிருக்கீங்க ஷஃபி.


Annam on February 19, 2010 at 12:00 PM  

boss evlo space vittu comment pannanumnu sonneengana....nalla irukum:)


Annam on February 19, 2010 at 12:01 PM  

gud infn:)keep it up boss


thenammailakshmanan on February 20, 2010 at 8:11 AM  

ஆமாம் ஷஃபி கூகுள் பஸ் அட்டகாசம்தான் தாங்க முடியல ஸ்டேட்டஸ் மெசேஜை எல்லாம் ஏத்திக்கிட்டுப் போயிடுது


ஸாதிகா on February 20, 2010 at 7:44 PM  

நல்ல தகவல்!இலங்கையில் தயாரிக்கும் அனைத்துப்பொருட்களுக்கும் அநேகமாக தமிழிலும் பெயர் போடுவது மகிழ்ச்சிக்குறிய விஷயம்தான்


SUFFIX on February 21, 2010 at 9:38 AM  

நன்றி @ அதிரை எக்ஸ்ப்ரெஸ்

நன்றி @ சித்ரா மேடம்

நன்றி @ ஹுசைனம்மா (ஆமா வழக்கம் போல அங்கேயும் கணக்கில தப்பு பண்ணிடாதிங்க, அப்புறம் அடுத்த வண்டியில இடிச்சிடும்)

//ஹுஸைனம்மா said...

சாப்பிட்டா ரொம்ப கிறக்குமோ?//

அது பிஸ்கட்டு தானே :)


SUFFIX on February 21, 2010 at 9:40 AM  

நன்றி @ நாஞ்சில் பிரதாப் (ஆமாம், இது ஒரு கான்சப்ட் தான், அனுபவத்தில் அத்துப்படி ஆயிடுது)

//அப்ப ஒவ்வொருக்க பார்க் பண்ணும்போதும், இறங்கி அளவெடுத்து, இந்த ஃபார்முலா வச்சு கணக்குப் பாத்து, அப்புறம் பார்க பண்ணனுங்களா?//

//ஆமாங்க...வண்டி வாங்கும்போது ஒரு அளக்குற டேப்பையும் கூட வாங்கி வச்சுக்கனும்...
எப்படி ஹுசைனம்மா இந்த மாதிரில்லாம் கேட்கத்தோணுது...//

ஒரே ஊரு, உங்களுக்கு தெளிவா தெரியும், இடையில நான் வேற சொல்லணுமா.


SUFFIX on February 21, 2010 at 9:51 AM  

நன்றி @ இராகவன் நைஜிரியா (வாவ் இது கூட நல்லா இருக்கே)

நன்றி @ அன்புடன் மலிக்கா (மிக்க மகிழ்ச்சி சகோ.)

நன்றி @ பா.ராஜாராம் (நன்றி அண்ணே)

நன்றி @ அபுஅஃப்ஸர் (அப்படியா, எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்குல)


SUFFIX on February 21, 2010 at 9:56 AM  

நன்றி @ "உழவன் -:)

நன்றி @ MAK (ஓ.கே ரைட்டு)

நன்றி @ நட்புடன் ஜமால் (ஹா..ஹா..மிக்க மகிழ்ச்சிப்பா)

நன்றி @ Mrs.Menagasathia -:)


SUFFIX on February 21, 2010 at 10:00 AM  

நன்றி @ goma (ஆமா அக்கா, நான் இந்த பஸ்ஸை தற்போதைக்கு ஓரமா நிறுத்தி வச்சிட்டேன்)


SUFFIX on February 21, 2010 at 10:08 AM  

நன்றி @ அக்பர் (மிக்க மகிழ்ச்சி -:)

நன்றி @ Annam (நல்ல டவுட், அத உங்க தமிழ் டீச்சர் கிட்டே கேட்டுக்கோமா)

நன்றி @ thenammailakshmanan (அதான் நான் நிறுத்தி வச்சுட்டேன்)

நன்றி @ ஸாதிகா (ஆமாம் மகிழ்ச்சிக்குறிய விடயம், அந்த கிறக்கர் என படிக்கும்போது, கொஞ்சம் நகைச்சுவையாகவும் இருந்தது)


அன்புத்தோழன் on February 21, 2010 at 10:14 AM  

ஏற்கெனவே நாம கணக்குல வீக்கு இதுல இப்டிலாம் கணக்கு போட சொன்ன எப்டி பிரதர்....

நல்லா கெளப்றீங்க பிரதர் பீதிய.... ha ha ;-)


வேலன். on February 21, 2010 at 5:39 PM  

நான் அந்த பக்கமே போகலை...பிஸ்கட் சூப்பரோ...
வாழ்க வளமுடன்.
வேலன்.


Jaleela on February 22, 2010 at 3:44 PM  

அப்பப்பா என்ன ஒரு நுனுக்கமான இடுகை.

பஸ் அடுத்து பார்க்கிங், அடுத்து இலங்கை பிஸ்கோத்து,

எல்லா இடுகையும் ரொம்ப நல்ல இருக்கு,
"சென்ற வாரம் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடையில்" அங்கேயும் ஊர் நாட்டாங்கடை வந்துடுச்சா.....

நீங்க கீரிம் கிறாககர் என்றதால் தான் ஹுஸைனாம்மாவுக்கு ஒரு வேளை இத சாப்பிட்டா கிறக்கிட்டு (மயக்கமா) வருமோன்னு நினைத்து இருப்பாங்க


தமிழ் பிரியன் on February 23, 2010 at 12:57 PM  

ஜமால் அண்ணன் சொன்ன மாதிரி பஸ்ஸை நிறுத்தியாச்சு... :-)

பார்க்கிங்... வாணாம்... இப்ப தான் லைசன்ஸ் எடுக்க டிரைனிங் போய்கிட்டு இருக்கேன்... நான் ஸ்கூலில் படித்த போது வாங்கிய திட்டுக்கள் அனைத்தும் கடந்த சில நாட்களில் வாங்கி விட்டேன்.. :(

பிஸ்கட்... ம்ம்ம்


SUFFIX on February 23, 2010 at 1:53 PM  

நன்றி @ அன்புத்தோழன் (பீதிய பாதியா ஆக்கிடுவோம்)

நன்றி @ வேலன் (முதல் வருகக்கும் கருத்துக்கும்)

நன்றி @ ஜலீலா (ஆமா கிறக்கர் சாப்பிட்டா கிறக்கம் வருமாம் ஹூசைனம்மாவின் கண்டுபிடிப்பு)

நன்றி @ தமிழ் பிரியன் (சவூதி லைசன்ஸ் அங்கிட்டு செல்லாதோ?)


Anonymous on February 23, 2010 at 2:07 PM  

புரியலைன்னு சொன்னேன் விடாமல் தலையில் கொட்டி புரியும் வரை படிக்க விட்ட ஷ்ஃபி வாழ்க்...தொந்தரவு செய்யும் பஸ் ஒழிக....


SUFFIX on February 23, 2010 at 2:36 PM  

நன்றி @ தமிழரசி (அரசியின் அரசியல் மேலும் வளர்க)


'ஒருவனின்' அடிமை on February 25, 2010 at 9:03 AM  

சூப்பர்..