என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த தேனம்மை அக்கா அவர்களுக்கு நன்றி, வேலை பளு காரணமாக சுடச்சுட இட வேண்டிய பதிவு, இவ்வளவு நாள் தாமதத்தி வந்தமைக்கு மன்னிக்கவும்.
நண்பர்களின் எல்லா பதிவுகளிலுமே இந்த பத்துக்கு பத்து வலம் வந்து விட்டது, பரவாயில்லைன்னு இதையும் படிச்சுடுங்க.
1) சில நாட்களுக்கு NPRல் ஷீனா ஐயங்காருடைய பேட்டியை கேட்க நேர்ந்தது, இவருடைய ஆராய்ச்சி, அவர் எழுதிய படைப்புகளை விவரித்த விதம், மேலும் தெரிந்து கொள்ளலாம் என வலையில் தேடிய போது, விடயங்கள் மிகவும் சுவாரஸ்யம்.
அவர் சோசியல் சைக்காலஜி துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார், நம்முடன் என்றும் சுழன்று கொண்டிருக்கும் தேர்வு செய்தல் பற்றி சமீபத்தில் The Art of Choice எனற அவரது புத்தகம் வெளிவந்துள்ளது. உதாரணமாக வீட்டைவிட்டு செல்லும் முன் இந்தக் கலர் போன் தான் வாங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு போவோம், ஆனால் கடைக்கு சென்றதும் வேறு ஒன்றை வாங்கி வந்து விடுகிறோம், இது போல நாம் தெரிவு செய்யும் நட்பு, நபர்கள், என அடுக்கிக் கொண்டு போகலாம்.
இன்றைய போட்டி நிறைந்த ரீடெயில் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்களின் மன நிலையை அறிந்து வியாபாரத்தில் ஈடுபடுவது, நிறுவாகத்திறனை ஒருமுகப்படுத்த, உறவுகள் மேம்படவும் இது போன்ற ஆக்கங்கள் உதவக்கூடும். இவரது இன்னும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இவரைப் பற்றி மேலும் அறிய http://www.columbia.edu/~ss957/book.shtml.
2) தனது மருமகளை, மகளாய் நினைக்கும் மாமியார்கள், இந்த உறவிற்குள் கீறல்கள் விழுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆழ யோசித்தால் பெரும்பாலும் பிரச்னை எளிதானதாகவே இருக்கும்.
3) எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஆண்கள் பிரிவிலும் அதற்கு கீழ் பெண்கள் பிரிவிலும் சேர்த்து இருந்தார்கள், ஆனால் இந்த ஆண்டு முதல் மூன்றாம் வகுப்பையும் பெண்கள் பிரிவுடன் சேர்த்து விட்டார்கள், காரணம், இந்த சிறார்களை சமாளிக்க முடியவில்லையாம். ஆம், அந்தப் பொறுமையும் பொறுப்பும் பெண் ஆசிரியைகளுக்கே உரித்தான ஒன்று.
4) சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பணிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள். அவர்கள் பேருந்துக்காக காத்திருந்து, இடிபாடுகளுக்கிடையே பயணித்து, அலுவலக வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் சுமந்து செல்லும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
5) சினிமா பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை, ஆனால் பாடல்கள் கேட்பதுண்டு. பிடித்த பாடகிகள் (லிஸ்ட் பெரிசாயிடுச்சு):
தமிழ் : சித்ரா & அணுராதா ஸ்ரீராம்
ஆங்கிலம் : செலின் டியோன் & ஸ்விஃப்ட் டைலர்
ஹிந்தி : அல்கா யாக்னிக் & அணுராதா படுவால்
6) தொழில் அதிபர் : கிரன் மஜும்தார் - சாதாரன ட்ரைனியாக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று பயோகான் நிறுவனத்தை செம்மையாக நடத்தி வருகிறார்.
7) டென்னிஸ் வீராங்கனை : ஸ்டெஃபி கிராஃப்
8) குடும்பத்தலைவி : சோனியா காந்தி
9) அரசியல்வாதி : ஜெயலலிதா
10) பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.
42 comments
சூப்பர்ர்!! சில அறிமுகங்கள் அருமை!!
ஷீனா ஐயங்கார் பற்றிய தகவல் அருமை, மற்றவர்களில் 4 வதாக சொன்ன பென்களை பிடிக்கும்
அட இங்கயுமா..... எங்கபாத்தாலும் பத்துக்கு பாத்தா இருக்கு...?? எது எப்டியோ... ரொம்ப நாள் கழிச்சு back to the form...
//10) பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள் //
கும்மிகளை தவிர்க்க புது வழியா??? ha ha நடத்துங்க நடத்துங்க.... ஆனாலும் இதுக்குலாம் அசர்ர ஆள் ஹுஸைனம்மா இல்ல ;-).... ஹி ஹி....
//வேலை பளு காரணமாக சுடச்சுட இட வேண்டிய பதிவு, இவ்வளவு நாள் தாமதத்தி வந்தமைக்கு மன்னிக்கவும்.//
இப்பவும் சுடச்சுடத்தான் இருக்கு :)
அறியாத பலரை அறிய முடிந்தது.
8வது பதிலை கவனமாக கையாண்டு இருக்கிறீர்கள்.
நல்லாயிருக்கு ஷஃபி.
10 முத்து.
well said..
நல்லாருக்கு... என்னதுத அனுராதா +ஸ்ரீராமை பிடிக்குமா...??? முடில
நாஞ்சில் பிரதாப் said...
நல்லாருக்கு... என்னதுத அனுராதா +ஸ்ரீராமை பிடிக்குமா...??? முடில
\\
அனுராதா ஸ்ரீராமோட நிறுத்திட்டாங்கனு சந்தோஷம் படுங்கப்பா
) சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பணிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள். அவர்கள் பேருந்துக்காக காத்திருந்து, இடிபாடுகளுக்கிடையே பயணித்து, அலுவலக வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் சுமந்து செல்லும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்
\\
super
//
நீங்க சொன்ன அனைவரும் 10அரை மாற்றுத் தங்கங்கள்.
அருமை.
///10) பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள் ///
..........நல்ல உபயோகமான (?) தகவல்கள் உள்ள பதிவு.
ஹா,ஹா,ஹா,.......
பிடித்த பத்து பெண்களில் என்னை மட்டும் விட்டுவிட்டீர்களே.எனக்கு ரொம்ப கோபம்.
நல்லா இருக்கு :-)
boss neenga 10 out of 10 vaangiteenga .v.Good keep it up :)
நல்ல தேர்ந்தெடுப்பு சகோ ஷஃபி.///தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.
///இடையில் ஒரு கேள்விக்குறி போட்டு இருக்கின்றீர்களே?ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? :)
//வேலை பளு காரணமாக சுடச்சுட இட வேண்டிய பதிவு, இவ்வளவு நாள் தாமதத்தி வந்தமைக்கு மன்னிக்கவும்.//
நீங்களும் போட்டாச்சா பத்து பெண்களை, ஏன் லேட்டு இந்த சாக்கு எல்லாம் சொல்ல கூடாது, ஏறு பெஞ்சு மேல ஏறி நில்லுங்க (அட என்ன பண்றீங்க உஙக் விசுவாசம் புரிய்து , நான் சொன்னேன் என்று இப்படியா ஏறி நிற்பது, ஆபிஸில் எல்லோரும் ஒன்றும் புரியாம முழிக்கிறாங்களாமே//
சரி சரி உட்காருங்க...
மற்ற படி வேலைக்கு கூட்டத்தில் சொல்லும் பெண்கள் சரியான தேர்வு,
நானும் ஆசிரிய பெண்களை குறிப்பிட்டு இருக்கேன். அதுவும் சரியான தேர்வு, சின்ன பிள்ளைகளிடம் பேசி அவர்களுக்கு கற்று கொடுக்க அவர்களிடம் தான் பொருமை ஜாஸ்தி, வாங்க இதையும் படிஙக்/
http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_16.html
லேட்டா பதிவு போட்டதற்கு அன்னம்மா 10 out of 10 கொடுத்துட்டாஙக்ளாமே
?/??
நல்ல பதிவு சில அறிமுகங்கள் மிகவும் அருமை...!
/// தனது மருமகளை, மகளாய் நினைக்கும் மாமியார்கள், இந்த உறவிற்குள் கீறல்கள் விழுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆழ யோசித்தால் பெரும்பாலும் பிரச்னை எளிதானதாகவே இருக்கும்.///
உண்மைதான் ...! அதே சமயம் மாமியார் மருமகள் ஒற்றுமையாய் இருந்துவிட்டால் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் போல தோன்றுகிறது ..!
நமக்கும் பொழுது போகனுமில்ல...! ;;))
எவரையும் விட்டுக் கொடுக்காமல் பெண்களின் எல்லா பரிமானங்களையும் அழகா கணித்து சொல்லியிருக்கீங்க...எல்லா நிலையிலும் பெண்களின் பணியை சிறப்பாக சொல்லியிருக்கீங்க ஷஃபி
எப்படியோ சமாளிச்சிட்டீங்க :-)
நிறைய புதியவர்கள் அறிமுகம் நன்றி
//பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.//
நிச்சயமா? நிறைய சில/பல பயனுள்ள அறியாத தகவல் திரட்டிகள்
லேட் வருகைக்கு ஸாரி. எனது நேரத்தை உபயோகமான வழியில் செலவிட்டு, பல பயனுள்ள தகவல்களை தந்து கொண்டிருப்பதனால், இங்கு வரத் தாமதமாகிவிட்டது. (என்னா சிரிப்பு???)
ஷீனா ஐயங்கார் - புது அறிமுகம், நன்றி.
சொன்னதுபோல, தொடக்கப்பள்ளி ஆசிரியைகளை ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். ஒண்ணு, ரெண்டை சமாளிக்கவே தலையால தண்ணி குடிக்கவேண்டியிருக்கு, இவங்க 30, 40 ஐ ஒரே நேரத்தில எப்படி சமாளிக்கிறாங்களோன்னு!!
நன்றி @ Mrs.Menagasathia (தங்களது தொகுப்பும் அருமை)
நன்றி @ Adirai Express (ம்ம்..ஒ.கே)
நன்றி @ அன்புத்தோழன் (ஆமாம், இடைல கொஞ்சம் பிசி, திருந்திட்டாங்களோ?)
நன்றி @ அக்பர் (மிக்க மகிழ்ச்சிப்பா)
நன்றி @ நட்புடன் ஜமால் (சரி ஜமால்)
நன்றி @ இராகவன் நைஜிரியா (அண்ணே வெல் எப்போ சொன்னார், நான் தானே சொன்னேன்)
நன்றி @ நாஞ்சில் பிரதாப் (சேர்த்து வச்சத ஏனய்யா பிரிச்சு வைக்கிறீங்க)
நன்றி @ rose (ஹலோ ரோஸ், எங்கேப்பா போய்ட்டீங்க, வருஷங்களாச்சு பதிவுகள் பக்கம் பார்த்து)
நன்றி @ NIZAMUDEEN (மகிழ்ச்சி நிஜாம்)
@ Chitra (உண்மையான(?) சொன்னதற்கு நன்றி)
நன்றி @ malarvizhi (உங்க பேரை போட்டு விட்டால், மத்த 9 பேருக்கும் இடம் கிடைக்காதே...:)
நன்றி @ ஜெய்லானி (மகிழ்ச்சிப்பா)
நன்றி @ Annam (நல்ல பொண்ணு)
நன்றி @ ஸாதிகா (ரொம்ப யோசிக்கிற மாதிரி காரணமெல்லாம் இல்லைங்க, ஜஸ்ட் சும்மா தான்)
நன்றி @ Jaleela (மகிழ்ச்சி டீச்சரக்கா)
நன்றி @ தமிழ் அமுதன் (தலைவரே இப்படி ஒரு ஆசையா)
நன்றி @ தமிழரசி (ஆமாம் அரசி, மகிழ்ச்சிப்பா)
நன்றி @ "உழவன்" (ஹா..ஹா..ஆமாம்ப்பா)
நன்றி @ அபுஅஃப்ஸர் (ம்ம்..மகிழ்ச்சி)
நன்றி @ ஹுஸைனம்மா (ஆமாம், உண்மைதான், அண்மையில் வெளிவருகின்ற தங்களது இடுகைகள் சொல்கிறதே)
நான் கிறுக்குவதௌ என் கணினிக்கே பிடிக்க வில்லையோ என்னவோ....வைரஸ்ஸில் படுத்து விட்டது....ரெண்டுநாளா ..நானே அனாசின் ஆஸ்ப்ரோ க்ரோசின்னு டைப் பண்ணி பார்த்தேன் ...பிறகு கணிணி டாக்டர் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பிழைக்க வைத்திருக்கிறார்..அதான் லேட்
பெண்பதிவாளிகள் சார்பில் நன்றி
நன்றி @goma (அப்படியா,கணினிப்பையல் எழுந்து உக்காந்தாச்சா, மகிழ்ச்சி)
SUFFIX said...
\\
(ஹலோ ரோஸ், எங்கேப்பா போய்ட்டீங்க, வருஷங்களாச்சு பதிவுகள் பக்கம் பார்த்து)
//
ஒரு வருஷமா இந்தியாவுல இல்லை அண்ணா
//
//
சூப்பர்
#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.
########
அச்சோ அச்சோ அக்கா சொன்னாங்கன்னெல்லாம் பெஞ்சில நிக்காதீங்கண்ணா.
நானேலேட்டா வந்துட்டேனேன்னு இருக்கும்போது நீங்க இறங்குங்க நான் நிக்கிறேன் அண்ணாவுக்கா தங்கை எப்புடி.
பத்தும் படு சூப்பர்..
தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.
http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html
புதிய அறிமுகங்கள் சூப்பர்...
நன்றி @ அம்மு மது (மிக்க மகிழ்ச்சி)
நன்றி @ ஜெய்லானி
நன்றி @ ஸாதிகா (இருவரின் விருதுக்கும் மிக்க நன்றி, ஒரு வாரம் துபாய் பயணம், அதான் லேட்டு)
நன்றி @ அன்புடன் மலிக்கா (பாசம் நெகிழ வைத்தது தங்கச்சி..ஹி..ஹி)
நன்றி @ அஹமது இர்ஷாத் (தொடருட்டும் ஆதரவு)
பிடித்த பெண் பதிவாளர்கள் என்று சொல்லி ஸ்கோரை ஏற்றி விட்டீர்கள் ஷஃபி..... அருமை
வித்தியாசமான 10 பெண்கள் பதிவு.. உங்க பதிவுகள படிக்க டைம் கிடைக்க மாடேங்குது... இப்போ தான் இந்த பதிவ பார்த்தேன். லேட் விஸிட்டுக்கு மன்னிக்கவும்.
சூப்பர்ர்
Post a Comment