|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!தினமும் காலைப்பொழுதில் மட்டும் மகளை பள்ளியில் கொண்டுவிடுவது சமீபகாலமாக என்னுடைய பொறுப்பில் வந்து விட்டது, அந்த ஐந்து நிமிடத்திற்குள் தினமும் ஒரு சில நிகழ்வுகளை சொல்லி வைத்தாற்போல் கடந்து செல்வது வழக்கம்.

வீட்டைவிட்டு இறங்கியவுடன் எதிரே ஒரு வயதான பங்க்ளாதேஷி, தனது ஆளுகையின் (ஆமாம், இங்கே ஹாரிஸ் என அழைக்கப்படும் வாட்ச்மேனுக்கு தான் அவ்ளோ அதிகாரமும்) கீழ் தங்கியிருப்பவர்களின் அனைத்து வாகன்ங்களை துடை துடையென பளபளப்பாக்கும் மும்முரத்தில் இருப்பார், காலை வேளையிலேயே அவருடைய உழைப்பின் தளர்ச்சி தென்படும்.

சாலை திருப்பத்தில் உள்ள் குப்பைத்தொட்டியில் உப்யோகமான பொருட்கள் எதுவும் கிடைக்காதா என ஒரு குச்சியால கிண்டி கிளரி ஒரு தள்ளுவண்டியுடன் நிற்கும் சோமாலியப் பெண், பெரும்பாலும் அவ்வண்டி நிறைந்தே காணப்படும், துச்சமென தூக்கி எரியும் பல பொருட்கள் பயனுள்ளதாக மாறுவது மகிழ்ச்சியே..

இரண்டு வீடு தள்ளி, ஒரு ஆஃப்கானியச் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒரு வேன், அவன் என்றுமே தாமதப் பேர்வழி போல், அவனை அரபியில் திட்டி தீர்க்கும் எகிப்திய ஓட்டுனர். அந்த வாகனத்தினுள் உற்று நோக்கினால், உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்.

சற்று தூரத்தில் தனது வீட்டின் பங்க்ளாதேஷ் காவளாளியை கை பிடித்தபடி பள்ளிக்குச் செல்லும் மலேசிய சிறுமி.

ஒரு சில மாதங்களேயான கைப்பிள்ளையை தனது இரு கைகளாலும் இருக்கிப் போர்த்தியபடி ஒரு தாய், மூண்றாவது கைவேண்டி அவரின் முந்தானையை பிடித்து, அங்கும் இங்கும் பராக்கு பார்த்தபடி முதுகினில் மூட்டையை சுமந்து பள்ளிக்குச் செல்லும் அவரது ஒன்றாம் வகுப்பு மகள்.

தனது மூன்று பெண் குழந்தைகள் பின் தொடர, இரண்டு கைகளிலும், முதுகிலும் அவர்களின் பைகளை சுமந்தபடி ஒரு பாக்கிஸ்த்தானி, அவருடைய உயரமும், அவர் சுமந்து செல்லும் விதமும் ஏதோ மலை ஏறச் செல்வது போனற காட்சி..

இன்று வியாபாரம் சூடு பிடிக்கும் என நம்பிக்கையில் வாசல், படிகளை நன்றாக கூட்டி பெருக்கி, வியாபாரத்தை பெருக்க தயாராக நிற்கும் ’கொச்சி பஷீர் காக்கா’.

நீச்சள் குளம், ஏரோபிக்ஸ் இன்னும் பலவகையறாக்களில், சேர்த்து வைத்துள்ளதை குறைப்பதறகாகவும், உள்ளதை உள்ளபடியே வைத்துக் கொள்ளவும், பெண்களுக்கான மையம், சாலையை அடைத்தபடி அதன் முன் டாம்பீக வாகனங்கள்.

சரி பிள்ளைகளை பள்ளியில் விட்டாச்சு, விட்டிற்கு போகும் முன், அன்றைய செய்திகளை அப்டேட் செய்தபடி பள்ளி வாயில் முன் சிறு வட்டஙகளாய் அம்மாக்கள்.

அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்.

54 comments

Jaleela on February 24, 2010 at 9:55 AM  

அட அங்கும் இதே தான் கீழே ஒரு பாக்கிஸ்தானி எல்லா காரையும் துடை துடையென தொடச்சி கொண்டு இருப்பார்.

தினம் இங்கும் இதே காட்சிகள் தான்


Anonymous on February 24, 2010 at 9:57 AM  

//வயதான பங்க்ளாதேஷி, தனது ஆளுகையின் (ஆமாம், இங்கே ஹாரிஸ் என அழைக்கப்படும் வாட்ச்மேனுக்கு தான் அவ்ளோ அதிகாரமும்) கீழ் தங்கியிருப்பவர்களின் அனைத்து வாகன்ங்களை துடை துடையென பளபளப்பாக்கும் மும்முரத்தில் இருப்பார், காலை வேளையிலேயே அவருடைய உழைப்பின் தளர்ச்சி தென்படும்.//

முதியவரிம் உழைப்பு பாராட்ட வேண்டியதும் நாம் அறிந்துக் கொள்ளவேண்டியதும் கூட,,,,


Jaleela on February 24, 2010 at 10:00 AM  

ஆமாம் இன்று காலை கூட என் மாமியார் அந்த அந்த குப்பை தொட்டியில் இருந்து குச்சிய விட்டு அதில் இருக்கும் கேன்,கார்ட்டன் எல்லாத்தையும் எடுக்கிறரே என்று, ஆமாம் இங்கு இப்படி தான். அவர்கள் பொழப்பு என்றேன்


Anonymous on February 24, 2010 at 10:00 AM  

//சாலை திருப்பத்தில் உள்ள் குப்பைத்தொட்டியில் உப்யோகமான பொருட்கள் எதுவும் கிடைக்காதா //

அங்குமுண்டா இப்பணி?


Jaleela on February 24, 2010 at 10:01 AM  

தமிழரசி வேலைக்கு போய் சம்பாதிபப்வரை விட சுற்று முற்றும் உள்ள எலல காரையும் துடைக்கும் வாட்ச் மேன் தான் பெரிய பணக்காரன். தெரியுமா?


Anonymous on February 24, 2010 at 10:02 AM  

//துச்சமென தூக்கி எரியும் பல பொருட்கள் பயனுள்ளதாக மாறுவது மகிழ்ச்சியே..//

யெஸ் உண்மையே..அதான் புரியவும் இல்லை நமக்கு பயன்படாத ஒன்று அவர்களுக்கு பயன்படுகிறது...
/


goma on February 24, 2010 at 10:02 AM  

அடக்கமான அப்பாவா பிள்ளைங்களை கூட்டிச் என்று விட்டீர்கள்...
அடக்கமில்லாத அப்பாவா ஆஃபீஸ் எப்படிப் போவீர்கள் ?அதையும் சொல்லுங்களேன்


Jaleela on February 24, 2010 at 10:03 AM  

//அன்றைய செய்திகளை அப்டேட் செய்தபடி பள்ளி வாயில் முன் சிறு வட்டஙகளாய் அம்மாக்கள்//

இந்த பசாத்தையும் ஒட்டு கேட்டாச்சா?


Anonymous on February 24, 2010 at 10:05 AM  

goma said...
அடக்கமான அப்பாவா பிள்ளைங்களை கூட்டிச் என்று விட்டீர்கள்...
அடக்கமில்லாத அப்பாவா ஆஃபீஸ் எப்படிப் போவீர்கள் ?அதையும் சொல்லுங்களேன்

சரியான கேள்வி பதில் அவசியம் வேணும்..


Anonymous on February 24, 2010 at 10:06 AM  

Jaleela said...
தமிழரசி வேலைக்கு போய் சம்பாதிபப்வரை விட சுற்று முற்றும் உள்ள எலல காரையும் துடைக்கும் வாட்ச் மேன் தான் பெரிய பணக்காரன். தெரியுமா?

அட இது நிஜமா? கார் துடைக்கும் வேலைக்கு தமிழரசி தயார்....


Jaleela on February 24, 2010 at 10:09 AM  

தமிழரசி எங்க பில்டிங்க சுற்றி எபப்டியும் பத்து பில்டிங் இருக்கு ஒரு 50 கார் தேரும்.
எதிர் வீட்டு காட்டரபி வீட்டில் அவனுக்கு எத்தனை பொண்டாட்டின்னு தெரியல,பிள்ளைகள் பொண்ட்டாடி எல்லாம் சேர்த்து அவர்களிடமே ஒரு பத்து கார் இருக்கும், உங்களுக்கு வேண்டுமானால் 5 கார் ரிசேர்வ் செய்து வைக்கட்டா?


Jaleela on February 24, 2010 at 10:11 AM  

//அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்//.

இங்க‌ தான் இடிக்குது ந‌ம்ப‌வே முடிய‌லையே


இராகவன் நைஜிரியா on February 24, 2010 at 10:19 AM  

ரொம்பவே நல்லா அவதானிக்கின்றீர்கள் ஷஃபி.


Anonymous on February 24, 2010 at 10:20 AM  

Jaleela said...
தமிழரசி எங்க பில்டிங்க சுற்றி எபப்டியும் பத்து பில்டிங் இருக்கு ஒரு 50 கார் தேரும்.
எதிர் வீட்டு காட்டரபி வீட்டில் அவனுக்கு எத்தனை பொண்டாட்டின்னு தெரியல,பிள்ளைகள் பொண்ட்டாடி எல்லாம் சேர்த்து அவர்களிடமே ஒரு பத்து கார் இருக்கும், உங்களுக்கு வேண்டுமானால் 5 கார் ரிசேர்வ் செய்து வைக்கட்டா?

ப்ளீஸ்பா..செய்ப்பா... நான் விசாக்கு ரெடி பண்றேன்


இராகவன் நைஜிரியா on February 24, 2010 at 10:20 AM  

அடக்கமான அப்பாவாகவா? ஹை... பொய் சொல்லக்கூடாது...

அடக்கமான கணவராக... எங்க சொல்லுங்க... அடக்கமான கணவராக


Anonymous on February 24, 2010 at 10:21 AM  

Jaleela said...
//அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்//.

இங்க‌ தான் இடிக்குது ந‌ம்ப‌வே முடிய‌லையே

இதைத் தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்...


Anonymous on February 24, 2010 at 10:22 AM  

இராகவன் நைஜிரியா said...
அடக்கமான அப்பாவாகவா? ஹை... பொய் சொல்லக்கூடாது...

அடக்கமான கணவராக... எங்க சொல்லுங்க... அடக்கமான கணவராக

அண்ணா தம்பி உங்க மாதிரிதான்..ஆனால் ஹாரம் மட்டும் இன்னும் வாங்கலை


இராகவன் நைஜிரியா on February 24, 2010 at 10:22 AM  

// தமிழரசி said...
Jaleela said...
தமிழரசி எங்க பில்டிங்க சுற்றி எபப்டியும் பத்து பில்டிங் இருக்கு ஒரு 50 கார் தேரும்.
எதிர் வீட்டு காட்டரபி வீட்டில் அவனுக்கு எத்தனை பொண்டாட்டின்னு தெரியல,பிள்ளைகள் பொண்ட்டாடி எல்லாம் சேர்த்து அவர்களிடமே ஒரு பத்து கார் இருக்கும், உங்களுக்கு வேண்டுமானால் 5 கார் ரிசேர்வ் செய்து வைக்கட்டா?

ப்ளீஸ்பா..செய்ப்பா... நான் விசாக்கு ரெடி பண்றேன் //

விசா எல்லாம் நீங்க ரெடி பண்ணக்கூடாது. அப்படி பண்ணீங்கன்னா உள்ள புடிச்சு போட்டுடுவாங்க..


Anonymous on February 24, 2010 at 10:23 AM  

இராகவன் நைஜிரியா said...
இன்றைக்கு மாட்டியவர் ஷஃபியா தங்கச்சி தமிழ் அவர்களே?

உங்கள் அன்பு தங்கக்கம்பி தான் அண்ணா..


SUFFIX on February 24, 2010 at 10:25 AM  

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி....நடத்துங்க!!


ஹுஸைனம்மா on February 24, 2010 at 10:42 AM  

//இங்கே ஹாரிஸ் என அழைக்கப்படும் வாட்ச்மேனுக்கு தான் அவ்ளோ அதிகாரமும்//

இங்க நாத்தூர்னு சொல்வாங்க. பில்டிங் ஓனர்மாதிரிதான் நடந்துக்குவாங்க சிலர்.

பொது இடங்கள்ல கார் கழுவக்கூடாதுன்னு இங்க ரூல்ஸ். மீறி கழுவின எங்க பில்டிங் வாட்ச்மேனைப் போலீஸ் பிடிச்சு உடனே ஊருக்குப் பேக் பண்ணிட்டாங்க. இப்ப புது வாட்ச்மேன், பில்டிங் சுத்தம் செய்வதே இல்லை!! :-((


நாஞ்சில் பிரதாப் on February 24, 2010 at 10:56 AM  

//நீச்சள் குளம், ஏரோபிக்ஸ் இன்னும் பலவகையறாக்களில், சேர்த்து வைத்துள்ளதை குறைப்பதறகாகவும், உள்ளதை உள்ளபடியே வைத்துக் கொள்ளவும், பெண்களுக்கான மையம்,//

ஹஹஹஹ சூப்பராச்சொன்னீங்க... அது ஏன் ஆண்கள் மையம் உங்க கண்ணுக்கு படமாட்டுது...
ரொம்ப குறும்புங்க உங்களுக்கு...


ஜீவன்(தமிழ் அமுதன் ) on February 24, 2010 at 11:05 AM  

தமிழன் ,இந்தியன் என்ற எல்லையை தாண்டி எழுதப்பட்ட பதிவு ...!
இவன் பங்களா தேசி ,இவன் பாகிஸ்தானி ,அவன் ஆப்கானிஸ்தான்
என்று ஒவ்வொரு நாட்டவரை பற்றிய கருத்துகள் ,அல்லது அவர்களை பற்றிய அபி மானங்கள், அவதானிப்புகள் நம் மீது திணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால்..! அடிப்படையில் உலகமக்கள் அனைவரும் ஒன்றுதான் என உணர்த்துகிறது பதிவு ..! நன்றி ...!


Jaleela on February 24, 2010 at 11:47 AM  

//விசா எல்லாம் நீங்க ரெடி பண்ணக்கூடாது. அப்படி பண்ணீங்கன்னா உள்ள புடிச்சு போட்டுடுவாங்க//இராகவன் ஆஹா இது தெரியாம தமிழரசிக்கு விசா ரெடி பண்ணிட்டேனே?


அபுஅஃப்ஸர் on February 24, 2010 at 12:04 PM  

//தினமும் காலைப்பொழுதில் மட்டும் மகளை பள்ளியில் கொண்டுவிடுவது//

என்னா ப(பொ)ருப்பு ஷஃபி


அபுஅஃப்ஸர் on February 24, 2010 at 12:05 PM  

//குப்பைத்தொட்டியில் உப்யோகமான பொருட்கள் எதுவும் கிடைக்காதா என ஒரு குச்சியால கிண்டி கிளரி //

அவருக்கு பொழப்பு அங்கெ


நட்புடன் ஜமால் on February 24, 2010 at 1:31 PM  

ஐந்து நிமிட நிகழ்வுகளா இது

ஐந்து நிமிஷத்துள இம்பூட்டு கவணிக்கிறீங்க ...


நட்புடன் ஜமால் on February 24, 2010 at 1:32 PM  

ஹாரீஸ் என்பது பெயரா ?

அமீரகத்தில் நாத்தூர் தான் பில்டிங் டேமேஜர்

அலுவலகங்களில் டீ பாய் தான் டேமேஜர்

இருவரையும் பகச்சிகிட்டு இருக்க இயலாது


நட்புடன் ஜமால் on February 24, 2010 at 1:33 PM  

உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்.]]


மிகவும் இரசித்தேன் ஷஃபி ...


நட்புடன் ஜமால் on February 24, 2010 at 1:35 PM  

மூண்றாவது கைவேண்டி அவரின் முந்தானையை பிடித்து, அங்கும் இங்கும் பராக்கு பார்த்தபடி ]]


அருமை அருமை


நட்புடன் ஜமால் on February 24, 2010 at 1:36 PM  

படிகளை நன்றாக கூட்டி பெருக்கி, வியாபாரத்தை பெருக்க ]]


ஹா ஹா ஹா

யாரோட சகவாசம் :P


நட்புடன் ஜமால் on February 24, 2010 at 1:38 PM  

அன்றைய செய்திகளை அப்டேட் செய்தபடி பள்ளி வாயில் முன் சிறு வட்டஙகளாய் அம்மாக்கள். ]]

ஹா ஹா ஹா

ஷஃபிக்கு நல்லா கோல் போடுறீங்க


"உழவன்" "Uzhavan" on February 24, 2010 at 1:49 PM  

பல நாட்டுக்காரர்களுக்கு மத்தியில் வாழ்வதே ஒரு தனி அனுபவம் தான். அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லையே.


SUFFIX on February 24, 2010 at 2:45 PM  

தமிழரசி said...
//முதியவரிம் உழைப்பு பாராட்ட வேண்டியதும் நாம் அறிந்துக் கொள்ளவேண்டியதும் கூட,,,//

இது போன்றோர்களின் நிலை இங்கே பெரும்பாலும் பரிதாபமானதே!!


SUFFIX on February 24, 2010 at 2:51 PM  

//Jaleela said...
தமிழரசி வேலைக்கு போய் சம்பாதிபப்வரை விட சுற்று முற்றும் உள்ள எலல காரையும் துடைக்கும் வாட்ச் மேன் தான் பெரிய பணக்காரன். தெரியுமா?//

பணம் சம்பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும் இவர்கள் ஓய்வு, உறக்கம் இருக்குமா எனத் தெரியவில்லை, எப்பொதும் முழு உழைப்பிலேயே காலத்தை கடத்துவது ஆச்சர்யம் தான்.


SUFFIX on February 24, 2010 at 2:53 PM  

//goma said...
அடக்கமான அப்பாவா பிள்ளைங்களை கூட்டிச் என்று விட்டீர்கள்...
அடக்கமில்லாத அப்பாவா ஆஃபீஸ் எப்படிப் போவீர்கள் ?அதையும் சொல்லுங்களேன்//

வேணாம்க்கா அடக்குத்துக்கே இங்கே ஆயிரத்தெட்டு குட்டு, இதிலே அடக்கிமில்லன்னா....?


SUFFIX on February 24, 2010 at 2:54 PM  

//இராகவன் நைஜிரியா said...
ரொம்பவே நல்லா அவதானிக்கின்றீர்கள் ஷஃபி.//

மகிழ்ச்சி அண்ணா!!


SUFFIX on February 24, 2010 at 3:00 PM  

//ஹுஸைனம்மா said...


இங்க நாத்தூர்னு சொல்வாங்க. பில்டிங் ஓனர்மாதிரிதான் நடந்துக்குவாங்க சிலர்.

பொது இடங்கள்ல கார் கழுவக்கூடாதுன்னு இங்க ரூல்ஸ். மீறி கழுவின எங்க பில்டிங் வாட்ச்மேனைப் போலீஸ் பிடிச்சு உடனே ஊருக்குப் பேக் பண்ணிட்டாங்க. இப்ப புது வாட்ச்மேன், பில்டிங் சுத்தம் செய்வதே இல்லை!! :-((//

அவரவர் பில்டிங்கில் உள்ள ஹாரிஸ் அந்தந்த கார்களை கழுவுவார், அதற்கு தனியாக மாதம் 100 ரியால்கள் கொடுக்கணும்.


SUFFIX on February 24, 2010 at 3:03 PM  

//நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹஹ சூப்பராச்சொன்னீங்க... அது ஏன் ஆண்கள் மையம் உங்க கண்ணுக்கு படமாட்டுது...
ரொம்ப குறும்புங்க உங்களுக்கு//

கண்ணுல படாம இருந்திருக்கும்போல..


SUFFIX on February 24, 2010 at 3:06 PM  

நன்றி @ ஜீவன்(தமிழ் அமுதன் )
“அப்பாடா நான் எதை மனதில் நினைத்து எழுதினேனோ அதை சரியாக பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஜீவன், மிக்க மகிழ்ச்சி”


SUFFIX on February 24, 2010 at 3:12 PM  

//நட்புடன் ஜமால் said...
ஐந்து நிமிட நிகழ்வுகளா இது

ஐந்து நிமிஷத்துள இம்பூட்டு கவணிக்கிறீங்க ...//

ஆமாம் ஜமால், தினமும் கண்டு, வீட்டிலும் சொல்வதுண்டு, இதை நம்முடன் பகிரலாம் எனத் தோண்றியது

நட்புடன் ஜமால் said...
//ஹாரீஸ் என்பது பெயரா ?//

வாட்ச்மேனுக்கு அரபியில் ஹாரிஸ், ஆர்மியில் இருக்கும் படை வீரனுக்கும் இதே சொல் தான்.

//அலுவலகங்களில் டீ பாய் தான் டேமேஜர் //

முற்றிலும் உண்மை


SUFFIX on February 24, 2010 at 3:16 PM  

//நட்புடன் ஜமால் said...
உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்.]]


//மூண்றாவது கைவேண்டி//

//படிகளை நன்றாக கூட்டி பெருக்கி, வியாபாரத்தை பெருக்க //

வாவ்...ஜமால் இவைகளை கவனிக்க வேண்டும் என மனதில் ஓடியது முற்றிலும் உண்மை!! மகிழ்ச்சிப்பா.


SUFFIX on February 24, 2010 at 3:18 PM  

//"உழவன்" "Uzhavan" said...
பல நாட்டுக்காரர்களுக்கு மத்தியில் வாழ்வதே ஒரு தனி அனுபவம் தான். அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லையே.//

அக்கரைக்குஇக்கரை பச்சை உழவரே. கருத்துக்கு நன்றி.


Chitra on February 24, 2010 at 4:22 PM  

////////சரி பிள்ளைகளை பள்ளியில் விட்டாச்சு, விட்டிற்கு போகும் முன், அன்றைய செய்திகளை அப்டேட் செய்தபடி பள்ளி வாயில் முன் சிறு வட்டஙகளாய் அம்மாக்கள்.

அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்.////////


.........."சிறு வட்டஙகளாய் அம்மாக்கள்" - அவர்களை கூட அடக்கமாய் "கவனித்த" அடக்கமான அப்பா.................. !!


Adirai Express on February 24, 2010 at 7:44 PM  

ஸ்ஷ்ஷ்ஷப்பா, இப்பொவே கண்ணா கட்டுதே, கொஞ்ச லேட்டா வந்து பார்த்ததுக்குள்ளே இவ்ளோ கும்மியா! அடிச்ச கும்மியப்பார்த்தா இவரு எப்படா மாட்டுவார்ன்ன மாதிரில்ல இருக்கு.

//மூண்றாவது கைவேண்டி அவரின் முந்தானையை பிடித்து, அங்கும் இங்கும் பராக்கு பார்த்தபடி//

அருமையான வரிகள், மிகவும் ரசித்தேன்.

வயதான அந்த ஹாரிஸின் ஓய்வில்ல உழைப்பில் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது,

தினமும் இங்கு அல்லல்படும் இந்த ஆப்ரிக்கர்களை நிலையை நான் இங் எப்படி விவரிப்பது.


ஸாதிகா on February 27, 2010 at 9:39 AM  

அனுபவம் அலாதியானது.அம்மிணிகள் இந்த கும்மு கும்மி விட்டார்களே?:-(
///மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி....நடத்துங்க!!/// நல்ல பெருந்தன்மைதான்!


அன்புத்தோழன் on February 27, 2010 at 2:57 PM  

//அந்த வாகனத்தினுள் உற்று நோக்கினால், உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்//

ரசிக்க வைக்கும் கற்பனை வளம்.


தியாவின் பேனா on February 28, 2010 at 8:34 PM  

நல்லாருக்கு


enrum on March 1, 2010 at 4:27 PM  

இதுவே அம்மா குழந்தையைக் கூட்டிக்கொண்டு போனால் அந்த குழந்தைக்கு ஆயிரத்தெட்டு அட்வைஸ் கிடைத்திருக்கும்...மற்ற பசங்களுடன் சண்டை போடாதே...சாப்பாடை காலி செய்ய வேண்டும் என்று...அப்பாவை அனுப்பி வைத்தால் பராக்கு பாக்கிறதுதான் நடக்கும்...நல்ல அடக்க ஒடுக்கமான அப்பா...

""மூண்றாவது கைவேண்டி அவரின் முந்தானையை பிடித்து

""உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்.

போன்ற வரிகள் அருமை.


malarvizhi on March 2, 2010 at 7:25 PM  

"அடக்கமான அப்பாவாய்" !!!!!!!!!!!!
நம்ப முடியவில்லை .......வில்லை ..............லை.!!!!!!!!!!!!!!!!!!!


Annam on March 3, 2010 at 9:08 AM  

//அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்/

boss ungalukku comedy nalalveyy varuthu:))))))))))))))))


அன்புடன் மலிக்கா on March 3, 2010 at 2:56 PM  

அடக்கமான அப்பாவாகவா?//

என்ன எல்லாரும் எங்க அண்ணாதயை கிண்டல் பண்ணுறீங்க. நெசமா அவுக அடக்கமான அப்பாதான் இல்லண்ணா..

அடடா கார் துடைக்க போட்டியா கிடக்கே! காசேதான் கடவுளப்பா பாட்டு நெனப்புள வருதுங்கோ..


மைதிலி கிருஷ்ணன் on March 3, 2010 at 7:29 PM  

ஆமாம்.. மனிதர்கள் பலவிதம்.. every one has a unique character. நல்லா இருக்கு உங்க பதிவு.


Bogy.in on March 7, 2010 at 2:26 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in