|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!


இந்தியப் பிரதமர் சவூதி வருகை

சில தினங்களுக்கு முன் நமது இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சவூதி அரேபிய தலை நகர் ரியாத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருந்தார், முப்பது வருடங்களுக்கு முன்னர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ச்வூதி அரேபிய பயணத்திற்கு பின் தற்பொழுது வருகை தரும் நமது பிரதமரை சவூதி மன்னரும், அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் வெகு விமர்சையாக வரவேற்றனர். நான் ஜித்தாவில் இருந்தாலும் மூன்று நாட்களும் இங்குள்ள் நாளேடுகளில் அவரது பயணம் குறித்து விரிவான செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.

கல்வி, பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதினோறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் அலுவலகம் இந்தியாவில் தொடங்குவது, இங்குள்ள அரசு பள்ளிகளுக்கு டாடா பேருந்துகள் வாங்குவது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பத்திரிக்கை துறை செயல்பாடுகள், கணினித்துறையில் கூடுதல் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இங்குள்ள் பல்கலை கழகத்துடன் இந்தியப் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டன். வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

நில நடுக்கம் ஹைத்தி/சிலி:

சென்ற மாதம் ஹைத்தியிலும் அதனையடுத்து சிலியிலும் பயங்கர நில நடுக்கம், சிலியில் (8.8) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, இருந்தாலும் அங்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர், ஆனால் சிலியில் ஆயிரத்திற்கும் குறைவானோரே இறந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? பொருளாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.

சிலியின் பெரும்பாலான கட்டிடங்கள் நில நடுக்கத்தை தாங்கவும், இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு தரப்பட்டது. ஆனால் ஹைத்தியில் அவர்கள் இடிபாடுகளிக்கிடையே சிக்கி, கான்க்ரீட் கற்கள் மேலே விழும்போது, பாதுகாப்பாக அங்கிருந்து ஓடவோ, தற்காத்துக் கொள்ளவோ அவர்களுக்கு பயிற்சியளிக்கப் படவில்லை, அச்சத்தால் அங்கெங்கும் சிதறி ஓடி மரித்தவர்களே ஏராளம்.

Money is not everything, but it is something.

டிப்ஸ்:

மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா, இதோ சில குறிப்புகள்:
1. குறைந்தது ஆறு மணி நேரம் உறக்கம்.
2. உணவில் கட்டுப்பாடு
3. தினமும் அரைமணி நேரமாவது வேக நடை பயிற்சி (brisk walking)





31 comments

goma on March 7, 2010 at 4:59 PM  

என்னதான் பயிற்சி அளிக்கப் பட்டாலும் ,மனிதன் ஆபத்து சூழும் சமயம் நிலை குலைந்துதான் போகிறான்.
எல்லோருக்கும் மரணம் என்பதன் வடிவமும் நாளும் தேதியும் நேரமும் துல்லியமாகக் குறிப்பீட்டு நடத்தப் படும் போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்துவதென்பது இயலாத காரியம்


நட்புடன் ஜமால் on March 7, 2010 at 5:09 PM  

yes, it's something but forces to feel like everything ...


SUFFIX on March 7, 2010 at 5:21 PM  

//goma said...
என்னதான் பயிற்சி அளிக்கப் பட்டாலும் ,மனிதன் ஆபத்து சூழும் சமயம் நிலை குலைந்துதான் போகிறான்.
எல்லோருக்கும் மரணம் என்பதன் வடிவமும் நாளும் தேதியும் நேரமும் துல்லியமாகக் குறிப்பீட்டு நடத்தப் படும் போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்துவதென்பது இயலாத காரியம்//

முற்றிலும் சரியான கருத்து, இவ்வுலகில்வாழும் வரை முன்னெச்சரிக்கையுடனும், ஆரோக்கியத்துடனும் வாழவேண்டுமல்லவா?அதான் செய்தியுடன்கீழே தரப்பட்டுள்ள சிறு குறிப்பும்.


SUFFIX on March 7, 2010 at 5:24 PM  

//நட்புடன் ஜமால் said...
yes, it's something but forces to feel like everything ...//

ம்ம்ம்..:)


ஜெய்லானி on March 7, 2010 at 6:44 PM  

கோமதி அவர்களின் பதில்தான் என் பதிலும்.


ஸாதிகா on March 7, 2010 at 7:05 PM  

// வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது./// நல்ல தகவல் சொல்லி இருக்கின்றீர்கள் சகோ ஷஃபி.நீங்களும் கொத்துப்பரோட்டா கொத்த ஆரம்பித்தாயிற்றா?


Prathap Kumar S. on March 7, 2010 at 7:16 PM  

நானும் கோமாக்காவை வழிமொழிகிறேன். பீதியில் என்ன செய்கிறோம் என்றுதெரியாமல் மாட்டி இறந்துவிடுகிறார்கள்.

சவுதியிலிருக்கும் இந்திய கைதிகளை கைம்மாறுவது குறித்தும் ஏதோ ஒப்பந்தம் செய்யப்பட்டதாக படித்த நினைவு.

நீங்க கொடுத்த டிப்ஸ்ல நான் பண்றது முதல் டிப்ஸ் மட்டும்தான் அதுவும் அளவுக்கு அதிகமா... மத்த இரண்டும் சான்சே இல்ல... முயற்சி பண்ணுறேன்...


சிநேகிதன் அக்பர் on March 7, 2010 at 8:56 PM  

அருமை ஷஃபி.

அப்படியே இந்திய தூதரகத்தையும் செயல்படும் தூதரகமாக மாற்றினால் நன்றாக இருக்கும்.

நில நடுக்கத்தால் இறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்.


இராகவன் நைஜிரியா on March 8, 2010 at 12:03 AM  

//ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் சிலியில் (8.8) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, //

அர்த்தம் மாறி வருகின்றது... சரி பாருங்கள்.

சிலி நில நடுக்கத்திற்கு பிறகு வந்த படங்களில், கட்டங்களில் அவ்வளவாக சேதம் காணப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

விசா பற்றிய செய்தி சந்தோஷம் அளிக்கிக்கின்றது.


Annam on March 8, 2010 at 7:56 AM  

tips sonnathuku tips kudukanuma boss:)


Annam on March 8, 2010 at 7:56 AM  

naa thaan firataa??? 2 vaati naa firstaakum:) 11 commentu naney


SUFFIX on March 8, 2010 at 8:32 AM  

//ஜெய்லானி said...
கோமதி அவர்களின் பதில்தான் என் பதிலும்.//

அப்போ அக்காவுக்கு அளித்த பதில் தான் உஙகளுக்கும் ;)


SUFFIX on March 8, 2010 at 8:34 AM  

//ஸாதிகா said...
நல்ல தகவல் சொல்லி இருக்கின்றீர்கள் சகோ ஷஃபி.நீங்களும் கொத்துப்பரோட்டா கொத்த ஆரம்பித்தாயிற்றா//

டிரங்கு பெட்டி, அஞ்சறைப் பெட்டின்னு மாதிரி...


SUFFIX on March 8, 2010 at 8:39 AM  

//நாஞ்சில் பிரதாப் said...

நீங்க கொடுத்த டிப்ஸ்ல நான் பண்றது முதல் டிப்ஸ் மட்டும்தான் அதுவும் அளவுக்கு அதிகமா... மத்த இரண்டும் சான்சே இல்ல... முயற்சி பண்ணுறேன்...//

ஒரு நாளைக்கு அரை மணி நேரம் தானே, முயற்சி செய்யுங்கள் நண்பா, பலன் நிச்சயமாக உண்டு!!


SUFFIX on March 8, 2010 at 8:48 AM  

//அக்பர் said...

அப்படியே இந்திய தூதரகத்தையும் செயல்படும் தூதரகமாக மாற்றினால் நன்றாக இருக்கும்.//

மற்ற நாடுகளில் உள்ள தூதரகங்களைக் காட்டிலும் இங்கே செயல்பாடுகள் குறைவு தான், இங்கே நமது தூதரகத்தின் பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


SUFFIX on March 8, 2010 at 8:50 AM  

//இராகவன் நைஜிரியா said...
//ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் சிலியில் (8.8) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, //

அர்த்தம் மாறி வருகின்றது... சரி பாருங்கள்.

சிலி நில நடுக்கத்திற்கு பிறகு வந்த படங்களில், கட்டங்களில் அவ்வளவாக சேதம் காணப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.//

நன்றி அண்ணா, மாற்றிவிட்டேன்.


SUFFIX on March 8, 2010 at 8:54 AM  

//Annam said...
tips sonnathuku tips kudukanuma boss:)//


naa thaan firataa??? 2 vaati naa firstaakum:) 11 commentu naney//

111ம் நீயே இருந்துக்கோமா..


Chitra on March 8, 2010 at 10:02 AM  

அஞ்சரை பெட்டி, பரோட்டா என்றுதான் இருக்கணுமா? உங்களின் தாம்பூல பை நல்லா இருக்குங்க. சூப்பர்.


ஹுஸைனம்மா on March 8, 2010 at 10:05 AM  

முப்பது வருடங்களில் ஜனாதிபதி அல்லது மத்திய கேபினட் அமைச்சர்கள் கூட வந்ததில்லையா?

சவூதி அரசர் இந்தியாவுக்குச் சில வருடங்கள் முன்பு சென்றிருந்தார் இல்லையா?

//ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, இருந்தாலும் அங்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர், //

இதற்கு நீங்கள் கூறிய காரணங்களும் சரியே. ஆனால், பூகம்பத்தின் “எபிசென்டர்” (epicenter - the area prone to more damage) ஹைத்தியில் நகரத்தில் இருந்தது; சிலியில் கடலில் இருந்தது; அதனாலும் இருக்கலாம் என்பது என் அனுமானம். சரியா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


SUFFIX on March 8, 2010 at 10:12 AM  

//Chitra said...
அஞ்சரை பெட்டி, பரோட்டா என்றுதான் இருக்கணுமா? உங்களின் தாம்பூல பை நல்லா இருக்குங்க. சூப்பர்.//

தாம்பூல பை.......இது கூட நல்லா இருக்கே!!


SUFFIX on March 8, 2010 at 10:20 AM  

// ஹுஸைனம்மா said...

இதற்கு நீங்கள் கூறிய காரணங்களும் சரியே. ஆனால், பூகம்பத்தின் “எபிசென்டர்” (epicenter - the area prone to more damage) ஹைத்தியில் நகரத்தில் இருந்தது; சிலியில் கடலில் இருந்தது; அதனாலும் இருக்கலாம் என்பது என் அனுமானம். சரியா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.//

எபி செண்டரிலிருந்து 200 கி.மி. தொலைவில் இருந்த சிலியின் தலை நகர் சாண்டியாகோ அத்தனை பாதிப்புக்குள்ளாகலையாம்!! இறைவன் அனவரையும் பாதுகாக்கட்டும்.


அன்புடன் மலிக்கா on March 8, 2010 at 11:41 AM  

டிப்ஸ்:


மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா, இதோ சில குறிப்புகள்:
1. குறைந்தது ஆறு மணி நேரம் உறக்கம்.
2. உணவில் கட்டுப்பாடு
3. தினமும் அரைமணி நேரமாவது வேக நடை பயிற்சி (brisk walking)..//


நல்ல டிப்ஸ் ஷஃபியண்ணா.பதிவும் சிந்திக்கக்கூடியது..


Abu Khadijah on March 9, 2010 at 12:24 AM  

//குறிப்பாக மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் அலுவலகம் இந்தியாவில் தொடங்குவது,//
நல்ல செய்தி, மேலும் கச்சா என்னெய் ஏற்றுமதியையும் அதிகரிப்பதாக கேள்விபட்டேன்.

நீங்க சொன்ன டிப்ஸ்ல முதல் இரண்டுத்தான் பாலோ பன்ன முடியுது..


Thenammai Lakshmanan on March 9, 2010 at 7:35 AM  

ஷஃபி ஹெல்த் டிப்ஸும் சித்ரா சொன்ன தாம்பூலப் பையும் அருமை


Thenammai Lakshmanan on March 12, 2010 at 11:15 AM  

ஷஃபி உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கேன்..

வந்து என்னோட பதிவைப்பாருங்க


Jaleela Kamal on March 13, 2010 at 10:43 AM  

ஷபி, என்ன (டிப்ஸ்)தீடீருன்னு உஜாலாவிற்கு மாறிட்டீங்க...


முன்று முத்தான‌ டிப்ஸும் சூப்ப‌ர்...

அட சித்ரா சொன்னதும் நல்ல இருக்கே, தாம்பூல பை.


Jaleela Kamal on March 13, 2010 at 10:47 AM  

இந்திய பிரதமர் சவுதி வருகை //

வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.//


ரொம்ப சந்தோஷமான செய்தி


Jaleela Kamal on March 13, 2010 at 11:00 AM  

ஹத், சிலி நில நடுக்கச்செய்தி அறிந்து மிகவும் மன வருத்தம், இறைவன் அனைவருக்கும் நல் கிருபை புரிவனாக.


அ. முஹம்மது நிஜாமுத்தீன் on March 21, 2010 at 7:43 PM  

இந்தியப் பிரதமரின் ரியாத் பயண நடவடிக்கைகைள்
விரிவாய் கொடுத்தீர்கள்.
ஹைத்தியிலும் சிலியிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்
சேதாரங்களை, அதன் காரணங்களோடு தெளிவாய்
விளக்கினீர்கள்.
பயனுள்ள டிப்ஸ்!


SUFFIX on March 22, 2010 at 1:22 PM  

நன்றி @தேனம்மை (தொடர் பதிவு போட்டாச்சுக்கா)

நன்றி@ஜலீலா

நன்றி@நிஜாமுதீன்


smilzz on December 27, 2010 at 6:19 AM  

Preventation is better than cure,so everyone should have prevention by exercises,yoga and avoiding fried foods to avoid stress and diseases.Thanks for your valuable tips.