|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 8:47 PM

ஜித்தா நீருற்று (Jeddah Fountain)

Filed Under () By SUFFIX at 8:47 PM


ஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - ‍சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:

உலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

சக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.

மணிக்கு 375 கிலோமீட்டர் வேகத்தில், வினாடிக்கு 1,250 லிட்டர் நீர் வெளியேறுகிறதாம். தரையிலிருந்து புறப்பட்டு நீர் அதிகபட்ச உயரம் வரை செல்லும் நீரின் எடை 18 டன்கள். இரவு நேரங்களில் ஒளியூட்ட 500 சக்தி வாய்ந்த மிண் விளக்குகள் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நீரூற்று, 1985ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு,இது வரை எந்த ஒரு பிரச்ணைகளும் இல்லையாம், வருடா வருடம் ஒரு முறை Planned Shutdownக்காக நிறுத்தி வைக்கபடுமாம்.

இந்த நீரூற்று கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்று இருக்காம்.

அப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது இந்த ஃபவுன்ட்டெயின், அப்போ நான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தால் சரி!!




ஆமா, நாம எல்லோரும் எறும்பு மாதிரி இருக்கணுமாம், குறுகுறு..துறுதுறுன்னு, இதை நான் சொல்லலை, பிரபல எறும்பியல் வல்லுணர் சொன்னதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். பாருங்க ஒருத்தர் எறும்பு பின்னாடியே போய் அதுக என்ன செய்யுதுன்னு பார்த்து, அதை எல்லாம் நமக்கு விளக்கமா சொல்லி இருக்கிறார். எறும்புங்களுக்கு நான்கு வகையான அபார குணம் இருக்காம். முதலாவது, அதுங்க எல்லாம் மேல ஏறும், கீழ இறங்கும், அப்படி போவும், இப்படி போவும், ஆமா, அது எங்க போகனும்னு நினைச்சுதோ அங்கே போயே தீரும், வச்ச குறி தப்பாது.

இரண்டாவது அதுங்க என்ன செய்யும்னா, கோடை காலத்தில குளிர் காலத்த்ற்க்கான‌ தயாரிப்புகள செய்யும், ஆமா எப்படியோ கோடை முடிஞ்சுறும், அப்புறம் குளிர் காலத்தில அவ்ளோ சுலபமா வெளிய போய் சுற்றித் திரிந்து சாப்பிட முடியாது, அதனால அதுங்க முன் கூட்டியே ரொம்ப சமத்தா யோசிச்சு குளிர் காலத்துக்காக தயார் ஆயிடுமாம்.

மூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம், அட எங்கே தான் இருக்கோ மூளை இதுங்களுக்கு, இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்குதய்யா!! இம்பூட்டு பெரிய மூளைய வச்சு நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கிங்க‌ளா? சரி, விஷயத்துக்கு வருவோம், ஆமாங்க, இந்த குளிர் காலம் சீக்கிரம் முடிஞ்சிடும்,அதனால் உள்ளேயே முடங்கி கிடக்காம, அப்ப்போ வெளிய வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போவுமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சா, குளிர் குறஞ்சி இருக்கான்னு ஆய்வு செஞ்சுக்கிட்டே இருக்குமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சது நம்மளுக்கு தெரியுதோ இல்லையோ, நம்ம எறும்புக்கு தெரிஞ்சு, தூங்க்கிட்டு இருக்கிற நம்ம பயபுல்லைங்க காலர்ல இழைஞ்சு வந்து எழுப்பிடும். அவ்ளோ உஷார்!!

நாலாவதும், முக்கியமானதும், இதையாவது கவனமா படிங்க, கோடை காலத்தில் எவ்ளோதான் அதுங்க சேர்த்து வைக்கும்? "எவ்ளோ கூடுதுலா முடியுமோ அவ்ளோ" ஆமா "All that possible they can".

பாருங்க ஒரு சின்ன எறும்பு சின்ன மூளைய வச்சு என்னனென்ன டகாலகடி வேலையெல்லாம் செய்யுது. நீங்க என்ன செய்யப் போறீங்க, ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு!!


டிஸ்கி : NEVER GIVE UP, LOOK AHEAD, STAY POSITIVE AND DO ALL YOU CAN!!


Posted on 10:36 AM

அப் 'பூ'

Filed Under () By SUFFIX at 10:36 AM





தென்றலாய் வீசி
சில‌ க‌ணம்
வில‌கியும் விடாமல்
படரும்
விய‌ப்பு!!

க‌ண்க‌ளில் ப‌ட்ட‌
க‌ண‌ப் பொழுதினில்
மின்னி ம‌றைந்த‌தில்
ஏதோ
த‌விப்பு!!

சில்ல‌ரையாய்
வ‌ந்த செவ்வொலி
கேட்டு ச‌ட்டென‌
எங்கும்
சிலிர்ப்பு!!

க‌ண்டும் காணாம‌லும்
க‌ன‌வில‌ற‌ங்கி
குளிர்ச்சியாய்
பல‌
க‌ணிப்பு!!

தித்திக்கும் நினைவு
திக‌ட்டாத‌
இன்பத்தேண்
அதன்
இனிப்பு!!

ம‌ன‌த்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!

உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!

அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!


இந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா? அப்படின்னா இத படிக்காதீங்க!!
--------------------------------------------------


  • நீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
  • ஏதாச்சும் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்!!
  • நீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.
  • நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு!!
  • நீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா? ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.
  • பாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.

  • நீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.

  • நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!


  • நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.

  • நீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.

சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?, வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:

  • வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).

  • எதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).

  • தலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).

  • தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).

  • நான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).

  • தனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள‌ உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).

  • ஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பணியினைச் செய்வார் (Appreciation).

  • திறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).

  • த‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொறுப்புக்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து, அவ‌ர்க‌ளின் ஒத்துழைப்பின் அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ வேண்டும் (Share the goals).

  • சலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).

ஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு‌. GOOD LUCK!!

மூன்று நாளைக்கு முன்னாடி, கேஸ் சிலின்டருக்கு வீல் உள்ள ஸ்டான்டு வாஙகனும்னு என் மேல இறக்கப்பட்டு தங்கமணி சொல்ல, (ஆமாங்க இல்லாட்டி ஹாலில் இருந்து, கிச்சன் வரை உருட்டியோ, தள்ளியோ கொண்டு போய் வைக்கனும், குடும்பத்தலைவன்னா சும்மாவா), ஒரு கடைக்கு போய் அவங்களே வாங்கி வந்துட்டாங்க, கடைல இரண்டு விதமான‌ ஸ்டான்ட் வச்சு இருந்தாங்களாம், வழக்கம்போல எது விலை கூடுதலோ அதையே வாங்கியாச்சு, விலை கூடுதலா இருந்தா தரமும் கூடுதலா இருக்குமாமே? ஸ்டான்டுல வீல் இருக்குன்னு சொன்னவுடன், அதுக்கு கியர் இருக்கா, பிரேக் இருக்கா, மைலேஜ் எவ்வளவு, இது மாதிரி குசும்புத்தனமாவெல்லாம் கேட்கக்கூடாது.

வீட்டிற்க்கு வ‌ந்து ச‌ந்தோஷ‌த்தில் சிலின்ட‌ர‌ தூக்கி ஸ்டான்டு மேல‌ வ‌ச்ச‌துதான் தாம‌த‌ம், "கிளிக்கு" "க‌ட‌க்" ச‌த்த‌ம், ஒரு ப‌க்க‌ம் வெல்டிங் உடைஞ்சிடுச்சு, அட‌க் கொடுமையே!!

உடனே நம்மளோட அலப்பரைய தொடங்கியாச்சு, வாய்ப்ப விடுவோமா, இது மாதிரி கூடுதல் டெக்னிக்கான மேட்டருக்கு என்னோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் செலக்ட செஞ்சே, உலோகத்தில‌ எத்தனை குவாலிட்டி இருக்கு, அவங்க என்ன உலோகத்தில‌ இத செஞ்சாங்களோ, என்ன முறையில வெல்டிங் வச்சாங்களோ, ஒரு வழியா ஓவரா பில்டப் கொடுத்து, ஒரு ஸீன் போட்டாச்சுல்ல.

சரி இப்போ என்ன செய்வது, கடையில திருப்பி கொடுத்திட வேண்டியதுதான். அடுத்த நாள் அவங்க கொடுத்த அதே பையில் போட்டு, கொண்டு போய் கொடுத்து, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியாச்சு, கடைக்காரரோ அதல்லாம் முடியாது, நீங்க கண்டபடி இழுத்துருப்பிங்க அதனால தான் உடஞ்சிடுச்சு, விடுவோமா ஸ்டாண்டோட வீல பாருங்க, அதுல ஏதாச்சும் அழுக்கு இருக்கா, நாங்க இழுத்து இருந்தா அது அழுக்கா இருக்கும்ல (அடடா என்ன ஒரு வேலிட் பாயின்ட்!!). கடைசியா, வழிக்கு வந்து, நான் இங்கே வேலை செய்கிறவன் தான், முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சு வருவார், அப்பொ வந்து பேசுங்கன்னார், இதுக்காக வந்து அலைஞ்சுக்கிட்டெல்லாம் இருக்க முடியாதுங்க‌, நீங்களே அவரிடம் எடுத்து சொல்லுங்க, நான் நாளைக்கு வருகிறேன், அப்படியும் அவர் மாற்றித் தர மறுத்தால், அவருக்கு கஸ்டமர் பற்றி அக்கறையில்லை, என்னை மாதிரி நல்ல கஸ்டமர இழக்க நேரிடும்னு சொல்லுங்க!!

அடுத்த நாள் வீட்டிலிருந்து போகும்போதே, என்ன வசனம் பேசுவது, பிரபல பதிவரா வேறு இருக்கோம், மரியாதைய காப்பாத்திக்கணும், இப்படி பல‌ எண்ண் ஓட்டங்கள், ஒரு வழியா கடைக்கு வந்து, "சிலின்டர் வீலு எந்த ஆயி?" ஆங்..சாரே, புதிய ஸ்டான்டு, அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!!
அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!

டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!!



அப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று சிந்திப்போமே!!


  1. வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.

  2. எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.

  3. மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.

  4. புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.

  5. தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.

  6. கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.

  7. வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.

  8. காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.

  9. நேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம்!! பணப்புழக்கம் காரணமோ? அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.

  10. பிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல்? நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த சகோதரிகள் திருமதி. பாய்ஜா அவர்களுக்கும், ஜலீலா அவர்களுக்கும் நன்றி, இதோ தங்களுடன் பகிர்ந்து கொள்ள அ முதல் ஃ!!



ன்பு - ஆக்சிஜன்

ரோக்கியம் - மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என்றும் முழுமையாக நிலைத்திட ஆவல், பிராத்தணைகள்.

ன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.

கை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.

ழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை

ர்வம்பு - கால விரயம்

திர்பார்ப்பினை குறைத்து மாற்றத்தினை தவிர்க்கலாம்.

ங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து

ற்றுமை எப்பொழுதும் எவருடனும்.


ய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது.


ஒளடதம் : அழகிய‌ புன்னகை


ஷ‌பி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!

இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.