என்னுடைய பெயர் 'ஷஃபி', இது எனது தாத்தா எனக்கு வைத்த பெயராம்.
அப்புறம் 'ஷஃபிக்ஸ்' எப்படி? பள்ளி நாட்களில் ஆங்கில ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் வகுப்பில் ஒரு நாள் suffix & prefix நடத்தினார், அந்த நாள் முதல் நன்பர்கள் suffixயே எனக்கும் வைத்து அழைத்தனர். அது தற்பொழுது வலைப்பதிவு பெயராகி விட்டது.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இயற்கையின் சீற்றத்தின் இன்னல்களுக்கிடையே மனிதர்கள் மடிவது ஒரு புறம், மனிதனும் தன் பங்குக்கு மதம், இனம், நாடு எனும் ஆணவத்தால், தவறேதும் செய்யாது தன் சக மனிதர்களை தண்டிக்கும் இழிச்செயல் மறுபுறம். இதனைக் கண்டு மனம் பல முறை அழுவதுண்டு.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். பள்ளி நாட்களில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளை கரும்பலகைகளில் ஆசிரியர்கள் என்னை எழுதச் சொலவார்கள். அதனைப் பின் தொடர்ந்து வகுப்பில் உள்ளவர்கள் எழுதுவர், அதனால் மற்றவர்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கின்றேன்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சைவம் : தக்காளி குழம்பு + கீரை பொறியல்
அசைவம் : மீன் குழம்பு + வறுவல்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடன்? கொஞ்சம் யோசிச்சு, அதுக்கு அப்புறம் தான்!
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஆறு!! எங்களூரில் இரண்டு ஆறுகளிலும் பள்ளி நாட்களில் அடிக்கடி குளிப்பது உண்டு. தற்போது நீச்சல் குளம் தான், என்ன செய்ய குளோரின் அருந்தி குளிக்க வேண்டியதன் கட்டாயம்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
உடை!! விலை உயர்ந்த ஆடையாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை, எளிமையிலும் முழுமையான உணர்வை தர முடியும். ஒரு ஆளோட ரசனை அவருடைய ஆடைகளில் ஓரளவு வெளிப்படும்னு நினைக்கின்றேன்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : எதையும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்வது, பல நேரங்களில் அப்படியே நடந்து விடுவதும் உண்டு, அதில் ஒரு மகிழ்வு இருக்கத்தான் செய்கிறது.
பிடிக்காத விஷயம் : அப்படி நடக்காவிடில் அப்செட் ஆகி, ஏதாவது காரணம் கண்டுபிடிச்சு அதுக்கப்புறம் தான் அப்பாடான்னு ஒரு திருப்தி ஆவது (சில சமயம் நம்மள நாமளே ஏமாத்திக்குறோமோன்னு தோணும், ஆனால் மனதிற்க்கு ஒரு நிறைவு, அது ரொம்ப முக்கியம்னு கருதுகிறேன்)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் : பொறுமை
பிடிக்காத விஷயம்: அந்தப் பொறுமையை வெல்ல முயலும் எந்த முயற்சியும்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
எனது பள்ளித்தோழர்கள் அனைவரையும். சிலரை சந்தித்தாலும், ஒரே இடத்தில் வைத்து அனைவரையும் சந்திக்க வேண்டுமென ஆசை.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ஆலிவ் பச்சை நிற முழுக்கை சட்டை, சாம்பல் நிற கால் சட்டை
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பார்ப்பது : அலுவலகத்தில் மேசை மேலிருக்கும் அழகான சிறிய செடி.
கேட்பது: அலுவலகத்தில்......அரபி, மளையாலம், ஹிந்தி என பல மொழிகள் காதில் விழுகிறது, அதனிடையே எனது தட்டச்சு சத்தம்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மெட்டாலிக் கருப்பு நிறம் அதில் பளிச்சுடும் வெள்ளை கற்கள் பதித்து இருந்தால் ராயலோ ராயல்!!
14.பிடித்த மணம் ?
மலர்களில் லேவன்டர், இலைகளில் மின்ட், வாசனைத் திரவியங்களில் ஜோவன் மஸ்க்!!
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
டூ லேட்!! என்னுடைய பதிவுலக நன்பர்கள் அனைவரும் இந்த 32 மழையில் ஏற்க்கனவே நனைந்தவர்கள்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
சகோதரி சுமஜ்லா, இவருடைய எந்தப்பதிவானாலும், அவருடைய கடின உழைப்பு, எதைப்பற்றியும் அலசி ஆராயும் தன்னம்பிக்கை, கற்க்கவும் கற்றுக்கொடுக்க்வும் அவர் காட்டும் ஆர்வம், நகைச்சுவை உணர்வு, அனைத்தும் வெளிப்படும்
17.பிடித்த விளையாட்டு?
பாட் மின்ட்டன் மற்றும் நீச்சல், தற்பொழுது நீச்சல் மட்டுமே. கிரிக்கெட் ஒரு நாள் ஆட்டம் மட்டும் காணப்பிடிக்கும்
18.கண்ணாடி அணிபவரா?
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அணியத்தொடங்கியது இன்னும் தொடர்கிறது.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
திரைப்படம் என்பது ஒரு நல்ல பொழுது போக்காக இருக்க வேண்டும். வன்முறைகளாலும், தேவையற்ற காட்சிகளாலும் சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு சாதனமாக மாறி வருகிறது. சினிமா தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் சற்று சிந்தித்தால் நலம்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
பள்ளி, கல்லூரி நாடகளில் உள்ள ஆர்வம், நேரம் இப்போது இல்லை, சில நேரங்களில் நைல் சேட்டில் வைத்து ரிமோட்டை அழுத்தி விளையாடும்போது TWO WEEKS NOTICE காணும் வாய்ப்பு கிடைத்தது. பழைய படந்தான் ஆனால் நல்ல ரொமான்டிக் படம்.
21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். அதுவும் மழைக்கு முன் தவழும் சில்லென்ற காற்று, ஒரு இன்பச்சிலிர்ப்பு.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நிறைய படிப்பதுண்டு, இது தான் என்று சொல்லத்தெரியவில்லை. நெட்டில் நிறைய மேய்வதுண்டு. எது படித்தாலும் அதில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவன்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அலுவலகத்தில் : எப்பொழுதும் அதே வின்டோஸ் ஸ்டேன்டர்ட் படம். வீட்டில் : மகனுக்காக அவனுக்கு பிடித்தவற்றை தேடி அடிக்கடி மாற்றுவதுண்டு.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : அமைதியான தோட்டம், பறவைகளின் விதவிதமான சத்தங்கள், அருகில் ஒரு நீரோடையும் இருந்தால் இன்பம் அலாதிதான்
பிடிக்காத சத்தம் : மனதை புண்படுத்தும் பேச்சு சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மலேசியா, தற்பொழுது சவூதி அரேபியா
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படி இருப்பதாக எதுவும் தெரியவில்லை, பல நேரங்களில் பல பேர் பலதும் சொல்வதுண்டு! அது அவரவர் பார்வைகளில்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சில நேரங்களில் நாம் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என் எதிர்ப்பார்ப்பது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
வீட்டின் மகிழ்வே, நாட்டின் மகிழ்வு. அதனால் வீட்டிற்க்கு உபயோகமுள்ள ஒரு ஜீவனாக இருக்க வேண்டும். எனது நட்புக்களுக்கு நல்ல நன்பனாகவும் இருக்க வேண்டும்.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் (எப்பவாவது ஒரு தடவை இப்படி ஒரு அட்வென்ட்ச்சர் அட்டெம்ப்ட் செய்வதுண்டு)
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!