|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 2:53 PM

<>32ல் நான்

Filed Under () By SUFFIX at 2:53 PM

என்னையும் இந்த 32 கேள்விகள் வலைக்குள் மாட்டி விட்ட சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!! இதோ........1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னுடைய பெயர் 'ஷஃபி', இது எனது தாத்தா எனக்கு வைத்த பெயராம்.


அப்புறம் 'ஷஃபிக்ஸ்' எப்படி? பள்ளி நாட்களில் ஆங்கில‌ ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் வகுப்பில் ஒரு நாள் suffix & prefix நடத்தினார், அந்த நாள் முதல் நன்பர்கள் suffixயே எனக்கும் வைத்து அழைத்த‌னர். அது தற்பொழுது வலைப்பதிவு பெயராகி விட்டது.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?


இய‌ற்கையின் சீற்றத்தின் இன்னல்களுக்கிடையே மனிதர்கள் மடிவது ஒரு புறம், மனிதனும் தன் பங்குக்கு மதம், இனம், நாடு எனும் ஆண‌வ‌த்தால், தவறேதும் செய்யாது தன் சக மனிதர்களை தண்டிக்கும் இழிச்செயல் ம‌றுபுற‌ம். இதனைக் கண்டு மனம் பல முறை அழுவதுண்டு.3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?


பிடிக்கும். பள்ளி நாட்களில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளை கரும்பலகைகளில் ஆசிரியர்கள் என்னை எழுதச் சொலவார்கள். அதனைப் பின் தொடர்ந்து வகுப்பில் உள்ளவர்கள் எழுதுவர், அதனால் மற்றவர்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கின்றேன்.


4.பிடித்த மதிய உணவு என்ன?


சைவம் : தக்காளி குழம்பு + கீரை பொறிய‌ல்


அசைவம் : மீன் குழம்பு + வறுவ‌ல்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?


உடன்? கொஞ்சம் யோசிச்சு, அதுக்கு அப்புறம் தான்!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?


ஆறு!! எங்களூரில் இர‌ண்டு ஆறுகளிலும் பள்ளி நாட்களில் அடிக்கடி குளிப்பது உண்டு. தற்போது நீச்சல் குளம் தான், என்ன செய்ய குளோரின் அருந்தி குளிக்க வேண்டியதன் கட்டாயம்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


உடை!! விலை உயர்ந்த ஆடையாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை, எளிமையிலும் முழுமையான உணர்வை தர முடியும். ஒரு ஆளோட ரசனை அவருடைய ஆடைகளில் ஓரளவு வெளிப்படும்னு நினைக்கின்றேன்.


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


பிடித்த விஷயம் : எதையும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்வது, பல நேரங்களில் அப்படியே நடந்து விடுவதும் உண்டு, அதில் ஒரு மகிழ்வு இருக்கத்தான் செய்கிறது.


பிடிக்காத விஷயம் : அப்படி நடக்காவிடில் அப்செட் ஆகி, ஏதாவது காரணம் கண்டுபிடிச்சு அதுக்கப்புறம் தான் அப்பாடான்னு ஒரு திருப்தி ஆவது (சில சமயம் நம்மள நாமளே ஏமாத்திக்குறோமோன்னு தோணும், ஆனால் மனதிற்க்கு ஒரு நிறைவு, அது ரொம்ப முக்கியம்னு கருதுகிறேன்)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?


பிடித்த விஷயம் : பொறுமை


பிடிக்காத விஷயம்: அந்தப் பொறுமையை வெல்ல முயலும் எந்த முயற்சியும்


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?


எனது பள்ளித்தோழர்கள் அனைவரையும். சிலரை சந்தித்தாலும், ஒரே இடத்தில் வைத்து அனைவரையும் சந்திக்க வேண்டுமென ஆசை.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?


ஆலிவ் பச்சை நிற முழுக்கை சட்டை, சாம்பல் நிற கால் சட்டை


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?


பார்ப்பது : அலுவலகத்தில் மேசை மேலிருக்கும் அழகான சிறிய செடி.


கேட்பது: அலுவலகத்தில்......அரபி, மளையாலம், ஹிந்தி என பல மொழிகள் காதில் விழுகிறது, அதனிடையே எனது தட்டச்சு சத்தம்.


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?


மெட்டாலிக் கருப்பு நிறம் அதில் பளிச்சுடும் வெள்ளை கற்கள் பதித்து இருந்தால் ராயலோ ராயல்!!


14.பிடித்த மணம் ?


மலர்களில் லேவன்டர், இலைகளில் மின்ட், வாசனைத் திரவியங்களில் ஜோவன் மஸ்க்!!15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


டூ லேட்!! என்னுடைய பதிவுலக நன்பர்கள் அனைவரும் இந்த 32 மழையில் ஏற்க்கனவே நனைந்தவர்கள்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?


சகோதரி சுமஜ்லா, இவருடைய எந்தப்பதிவானாலும், அவருடைய கடின உழைப்பு, எதைப்பற்றியும் அலசி ஆராயும் தன்னம்பிக்கை, கற்க்கவும் கற்றுக்கொடுக்க்வும் அவர் காட்டும் ஆர்வம், நகைச்சுவை உணர்வு, அனைத்தும் வெளிப்படும்


17.பிடித்த விளையாட்டு?


பாட் மின்ட்டன் மற்றும் நீச்சல், தற்பொழுது நீச்சல் மட்டுமே. கிரிக்கெட் ஒரு நாள் ஆட்டம் மட்டும் காணப்பிடிக்கும்


18.கண்ணாடி அணிபவரா?


ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அணியத்தொடங்கியது இன்னும் தொடர்கிறது.


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


திரைப்படம் என்பது ஒரு நல்ல பொழுது போக்காக இருக்க வேண்டும். வன்முறைகளாலும், தேவையற்ற காட்சிகளாலும் சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு சாதனமாக மாறி வருகிறது. சினிமா தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் சற்று சிந்தித்தால் நலம்.


20.கடைசியாகப் பார்த்த படம்?


பள்ளி, கல்லூரி நாடகளில் உள்ள ஆர்வம், நேரம் இப்போது இல்லை, சில நேரங்களில் நைல் சேட்டில் வைத்து ரிமோட்டை அழுத்தி விளையாடும்போது TWO WEEKS NOTICE காணும் வாய்ப்பு கிடைத்தது. பழைய படந்தான் ஆனால் நல்ல ரொமான்டிக் படம்.


21.பிடித்த பருவ காலம் எது?


மழைக்காலம். அதுவும் மழைக்கு முன் தவழும் சில்லென்ற காற்று, ஒரு இன்பச்சிலிர்ப்பு.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?


நிறைய படிப்பதுண்டு, இது தான் என்று சொல்லத்தெரியவில்லை. நெட்டில் நிறைய மேய்வதுண்டு. எது படித்தாலும் அதில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவன்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


அலுவலகத்தில் : எப்பொழுதும் அதே வின்டோஸ் ஸ்டேன்டர்ட் படம். வீட்டில் : மகனுக்காக‌ அவனுக்கு பிடித்தவற்றை தேடி அடிக்கடி மாற்றுவதுண்டு.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?


பிடித்த சத்தம் : அமைதியான தோட்டம், பறவைகளின் விதவிதமான சத்தங்கள், அருகில் ஒரு நீரோடையும் இருந்தால் இன்பம் அலாதிதான்


பிடிக்காத சத்தம் : மனதை புண்படுத்தும் பேச்சு சத்தம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


மலேசியா, தற்பொழுது சவூதி அரேபியா


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


அப்படி இருப்பதாக எதுவும் தெரியவில்லை, பல நேரங்களில் பல பேர் பலதும் சொல்வதுண்டு! அது அவரவர் பார்வைகளில்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


நம்பிக்கை துரோகம்


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


சில நேரங்களில் நாம் நினைத்தது நடந்தே ஆக‌ வேண்டும் என் எதிர்ப்பார்ப்பது.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


ஊட்டி


30.எப்படி இருக்கணும்னு ஆசை?


வீட்டின் மகிழ்வே, நாட்டின் மகிழ்வு. அதனால் வீட்டிற்க்கு உபயோகமுள்ள ஒரு ஜீவனாக இருக்க வேண்டும். எனது நட்புக்களுக்கு நல்ல நன்பனாகவும் இருக்க வேண்டும்.


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?


சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் (எப்பவாவது ஒரு தடவை இப்படி ஒரு அட்வென்ட்ச்சர் அட்டெம்ப்ட் செய்வதுண்டு)


32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?


வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!

58 comments

sakthi on July 26, 2009 at 5:42 AM  

அனைத்து பதில்களும் அருமை


sakthi on July 26, 2009 at 5:43 AM  

ஒரு நாள் suffix & prefix நடத்தினார், அந்த நாள் முதல் நன்பர்கள் suffixயே எனக்கும் வைத்து அழைத்த‌னர். அது தற்பொழுது வலைப்பதிவு பெயராகி விட்டது.

ஹ ஹ ஹ

நல்ல பெயர்


SUMAZLA/சுமஜ்லா on July 26, 2009 at 7:07 AM  

//சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் //

கொடுத்து வெச்சவங்க உங்க ஒய்ஃப்!

//மலர்களில் லேவன்டர், இலைகளில் மின்ட், வாசனைத் திரவியங்களில் ஜோவன் மஸ்க்!!//

நல்ல ரசனை!

//மெட்டாலிக் கருப்பு நிறம் அதில் பளிச்சுடும் வெள்ளை கற்கள் பதித்து இருந்தால் ராயலோ ராயல்!!//

சூப்பர் டேஸ்ட்!

அழகான பதில்கள்; அத்தோடு எனக்கான பாராட்டுக்கும் நன்றி!


நட்புடன் ஜமால் on July 26, 2009 at 8:20 AM  

தங்களை அறியதந்தமைக்கு நன்றி.

அழகான பதில்கள்.

அதிலும் வாழ்க்-கை பற்றி சொன்னது மிக அருமை.


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:34 AM  

அதுக்குள்ளே போட்டாச்சா. சரிதான். இருங்க பார்த்துட்டு வர்றேன்


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:37 AM  

பள்ளி நாட்களில் ஆங்கில‌ ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் ஒரு நாள் suffix & prefix நடத்தினார்,

என்னோட ஃபேவரைட் அவர்தான். அவரைப்பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:40 AM  

பிடித்த மதிய உணவு என்ன?

அசைவம் : மீன் குழம்பு + வறுவ‌ல்

Same Blood


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:45 AM  

என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பார்ப்பது : அலுவலகத்தில் மேசை மேலிருக்கும் அழகான சிறிய செடி.
கேட்பது: அலுவலகத்தில்......அரபி, மளையாலம், ஹிந்தி என பல மொழிகள் காதில் விழுகிறது,

എന്താ സാറേ കൊറച്ചു പണി എടുക്കു. ഇങ്ങന വരാതെ ഇരുക്കിറത്തു

मेरे भाई कुछ काम बी करेगा या ऐसेही टाइमपास करेगा

کاتو کرو ایسے بیٹے بیٹے کیا تھمے پسس کررہے ہو تم

இந்த மாதிரிதான் ஏதாவது கேட்டுகிட்டே இருக்கும் இல்ல!!


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:48 AM  

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
வீட்டின் மகிழ்வே, நாட்டின் மகிழ்வு. அதனால் வீட்டிற்க்கு உபயோகமுள்ள ஒரு ஜீவனாக இருக்க வேண்டும். எனது நட்புக்களுக்கு நல்ல நன்பனாகவும் இருக்க வேண்டும்.

வெளிப்படையான பிடித்த பதில்.


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:49 AM  

வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!

ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க ஹபீபி. சூப்பர்


S.A. நவாஸுதீன் on July 26, 2009 at 8:51 AM  

மொத்தத்தில் எல்லா பதில்களும் அருமை.


Anonymous on July 26, 2009 at 9:34 AM  

1.அப்ப நான் தாத்தான்னு கூப்பிடவா...
2.சமுகத்திற்கு கண்ணீர் சிந்தும் சிந்தனை மகிழ்ச்சி
3.அதை நாங்க சொல்லனும் அப்பு
4. நீ வேஸ்ட்பா இதுக்கெல்லாம் நம்ம அபு தான்
5.அடப்பாவி என்கிட்ட யோசிக்கவேயில்லை உடனே உங்கிட்ட நட்பாயிட்டேன்னு சொன்னது பொய்யா?
6.எப்படியோ குளிச்சா சரி
7.வெரி நைஸ் லைக் மீ நாங்க கண்களையும் பார்ப்போம்
8. நீங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னது எல்லாம்....?
9.பின்ன உங்களை பொருத்துக்கிறது என்பது சாதாரண விஷயமா என்ன?
10. நான்னு எங்கிட்ட சொன்னதா நினைவு
12. எப்பவும் பார்கிறதை தான் பார்த்துக் கொண்டு இருக்கீங்க
13. நல்ல டேஸ்ட்
22. கண்டதையும் படிச்ச அப்படித்தான்....
26.உங்களை நாடு கடத்திய போதே தெரியும் திறமையேதும் இல்லையென்று..
28. நீங்களே அதான் உள்ளவேறையா நாடு தாங்காது சாமி..
30. நல்ல குடிமகனுக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் எல்லாமிருக்கு..
31.பொய் எப்பவுமே அண்ணாத்த தான் கிச்சன் கில்லாடி
32. சரி சரி அழவேண்டா ரொம்ப அழவச்சிடேன்...சூப்பர் பதில் சீ நிஜமாச் சொன்னேன் பா...


Anonymous on July 26, 2009 at 9:39 AM  

32ல் நான்னு படிச்சதும் அசந்துப் போயிட்டேன் வயசத்தான் சொல்லார்ன்னு....கேள்வி பதிலா?


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:18 AM  

// sakthi said...
அனைத்து பதில்களும் அருமை//

நன்றி சக்தி


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:20 AM  

//SUMAZLA/சுமஜ்லா said...
//சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் //

கொடுத்து வெச்சவங்க உங்க ஒய்ஃப்!

//மலர்களில் லேவன்டர், இலைகளில் மின்ட், வாசனைத் திரவியங்களில் ஜோவன் மஸ்க்!!//

நல்ல ரசனை!

//மெட்டாலிக் கருப்பு நிறம் அதில் பளிச்சுடும் வெள்ளை கற்கள் பதித்து இருந்தால் ராயலோ ராயல்!!//

சூப்பர் டேஸ்ட்!

அழகான பதில்கள்; அத்தோடு எனக்கான பாராட்டுக்கும் நன்றி!//

இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தற்க்கு மிக்க நன்றி சகோதரி!!


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:21 AM  

//நட்புடன் ஜமால் said...
தங்களை அறியதந்தமைக்கு நன்றி.

அழகான பதில்கள்.

அதிலும் வாழ்க்-கை பற்றி சொன்னது மிக அருமை.//

நன்றி ஜமால்.


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:22 AM  

// S.A. நவாஸுதீன் said...
அதுக்குள்ளே போட்டாச்சா. சரிதான். இருங்க பார்த்துட்டு வர்றேன்//

இன்னக்கி பயனம் போறோம்ல, எதுக்கு கிடப்பில் வைப்பானேன்னு அவசரமா தட்டி போட்டுட்டேன்


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:25 AM  

// S.A. நவாஸுதீன் said...
பள்ளி நாட்களில் ஆங்கில‌ ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் ஒரு நாள் suffix & prefix நடத்தினார்,

என்னோட ஃபேவரைட் அவர்தான். அவரைப்பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு//

சென்ற விடுமுறையில் அவரை சந்தித்தேன், மகிழ்ச்சியாக இருந்தது.


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:26 AM  

//S.A. நவாஸுதீன் said...
பிடித்த மதிய உணவு என்ன?

அசைவம் : மீன் குழம்பு + வறுவ‌ல்

Same Blood//

ஹா ஹா. அது சரி!!


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:26 AM  

//S.A. நவாஸுதீன் said...
மொத்தத்தில் எல்லா பதில்களும் அருமை.//

மிக்க மகிழ்ச்சி நவாஸ்


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:41 AM  

தமிழரசி said...
//1.அப்ப நான் தாத்தான்னு கூப்பிடவா...//
போட்டிக்கு பாட்டியா?


//2.சமுகத்திற்கு கண்ணீர் சிந்தும் சிந்தனை மகிழ்ச்சி//
நன்றி.. நான் ரொம்ப நல்லவன்னு இப்பொ தெரியுதா?

//3.அதை நாங்க சொல்லனும் அப்பு//
நீங்களும் அதையே தான் சொல்லுவீங்க‌

//4. நீ வேஸ்ட்பா இதுக்கெல்லாம் நம்ம அபு தான்//
ஆமாம் ரென்டு சகனும் பத்தாது அந்த கோஷ்டிங்களுக்கு

//5.அடப்பாவி என்கிட்ட யோசிக்கவேயில்லை உடனே உங்கிட்ட நட்பாயிட்டேன்னு சொன்னது பொய்யா?//
இது எப்போ? நான் ஏதாவது உளறி இருப்பேன்

//6.எப்படியோ குளிச்சா சரி//
ஆமாம் ஆமாம்

//7.வெரி நைஸ் லைக் மீ நாங்க கண்களையும் பார்ப்போம்//
சீ...வெட்கமா இருக்கு!!

//8. நீங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னது எல்லாம்....?//
நம்பிட்டீங்களா?

9.பின்ன உங்களை பொருத்துக்கிறது என்பது சாதாரண விஷயமா என்ன?
//10. நான்னு எங்கிட்ட சொன்னதா நினைவு//
உங்க கிட்டேயும் சொல்லிட்டேனா?

12. எப்பவும் பார்கிறதை தான் பார்த்துக் கொண்டு இருக்கீங்க
13. நல்ல டேஸ்ட்
22. கண்டதையும் படிச்ச அப்படித்தான்....
26.உங்களை நாடு கடத்திய போதே தெரியும் திறமையேதும் இல்லையென்று..//
இருங்க வச்சுக்குறேன்!!

28. நீங்களே அதான் உள்ளவேறையா நாடு தாங்காது சாமி..
//30. நல்ல குடிமகனுக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் எல்லாமிருக்கு..//
இது மனசாலே அரசி சொல்றதுன்னு நான் நம்புகிறேன்
//31.பொய் எப்பவுமே அண்ணாத்த தான் கிச்சன் கில்லாடி//
ஷ்..ஷ்........
32. சரி சரி அழவேண்டா ரொம்ப அழவச்சிடேன்...சூப்பர் பதில் சீ நிஜமாச் சொன்னேன் பா...

மிக்க மகிழ்ச்சி அரசி!! கன்னாபின்னாவென்று பின்னியதற்க்கு.


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:43 AM  

//தமிழரசி said...
32ல் நான்னு படிச்சதும் அசந்துப் போயிட்டேன் வயசத்தான் சொல்லார்ன்னு....கேள்வி பதிலா?//

அது இருக்கட்டும் அக்கான்னு கூப்பிடவா, பாட்டின்னு கூப்பிடவா?


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 11:43 AM  

////வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'//

அருமை தோழா, நம்பிக்கை இறைமேல் வை.....பெயர் வந்த விதம் SUPER (whoz that prefix?)


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:47 AM  

//அ.மு.செய்யது said...
//வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//

இந்த பதில்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!!

வாழ்த்துக்கள் ஷஃபிக்ஸ்..

உங்க‌ளுக்கு ஒரு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறேன்.பாருங்க‌ள்.//

நன்றி செய்யது, தாங்களின் மின்னஞ்சல் படித்தேன், பிழைகளை திருத்து விட்டேன். தங்களின் ஊக்கம் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 11:53 AM  

//அபுஅஃப்ஸர் said...
////வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'//

அருமை தோழா, நம்பிக்கை இறைமேல் வை.....பெயர் வந்த விதம் SUPER (whoz that prefix?)//

நன்றி அபூ, Prefix இனிதான் யாருக்காவது வைக்கனும். உஙகளுக்கு வைக்கலாம்னு இருந்தேன், ஆனால் அரசி வேறு ஏதோ பெயர் வைத்திருப்பதாக அரசியின் பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது.


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:11 PM  

இந்த 32 க்கு ஓய்வே இல்லியா

ஆஅவ்வ்வ்

ஷ‌ஃபிக்ஸ் உங்களை பற்றி தெரிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி

நிறைய உண்மைகளை சொல்லிருக்கீங்க‌


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:11 PM  

//பள்ளி நாட்களில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளை கரும்பலகைகளில் ஆசிரியர்கள் என்னை எழுதச் சொலவார்கள்//

கட்டுரை அவரவர் கட்டுரை நோட்டுகளில்தானே எழுதனும்

எங்க வாத்தியார் சொன்னது அப்படிதான்


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:12 PM  

//மீன் குழம்பு + வறுவ‌ல்
//

ஆஹா கிளம்பிட்டியலா போட்டிக்கு


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:13 PM  

//அந்த பொறுமயை வெல்ல முயலும் எந்த முயற்சியும்//

அந்த முயற்சியில் வெற்றிப்பெற சப்பாத்தி கட்டை பறக்குமாமுலே அப்படியா


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:14 PM  

//....அரபி, மளையாலம், ஹிந்தி என பல மொழிகள் காதில் விழுகிறது//

உங்க அலுவலகம் மீன் மார்கெட்லேயா இருக்கு????


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:15 PM  

//டூ லேட்!! என்னுடைய பதிவுலக நன்பர்கள் அனைவரும் இந்த 32 மழையில் ஏற்க்கனவே நனைந்தவர்கள்.
//

ஹப்பா யாரையும் கூப்பிடலியே தப்பிச்சோம்


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:18 PM  

//சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி //

3x7 நாட்களும் அண்ணாத்தேதான் சமயலாம்...ஊருக்காட்டுக்குள்ளே கேள்விப்பட்டோமுங்கோ


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:34 PM  

//அபுஅஃப்ஸர் said...
இந்த 32 க்கு ஓய்வே இல்லியா

ஆஅவ்வ்வ்

ஷ‌ஃபிக்ஸ் உங்களை பற்றி தெரிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி

நிறைய உண்மைகளை சொல்லிருக்கீங்க‌//

நம்பியதற்க்கு நன்றிப்பா


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:36 PM  

// அபுஅஃப்ஸர் said...
//பள்ளி நாட்களில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளை கரும்பலகைகளில் ஆசிரியர்கள் என்னை எழுதச் சொலவார்கள்//

கட்டுரை அவரவர் கட்டுரை நோட்டுகளில்தானே எழுதனும்

எங்க வாத்தியார் சொன்னது அப்படிதான்//

அய்யோ, புரியாவிட்டால் நவாஸிடம் விளக்கம் கேட்டுக்கோங்க, வழக்கம்போல!!


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:37 PM  

/அபுஅஃப்ஸர் said...
//மீன் குழம்பு + வறுவ‌ல்
//

ஆஹா கிளம்பிட்டியலா போட்டிக்கு//

இதுக்கே இப்படியா...?


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:40 PM  

//அபுஅஃப்ஸர் said...
//அந்த பொறுமயை வெல்ல முயலும் எந்த முயற்சியும்//

அந்த முயற்சியில் வெற்றிப்பெற சப்பாத்தி கட்டை பறக்குமாமுலே அப்படியா//

அதையும் நாங்க பொறுமையோட ஹேன்டில் பன்னுவோம்ல‌


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:42 PM  

//அபுஅஃப்ஸர் said...
//டூ லேட்!! என்னுடைய பதிவுலக நன்பர்கள் அனைவரும் இந்த 32 மழையில் ஏற்க்கனவே நனைந்தவர்கள்.
//

ஹப்பா யாரையும் கூப்பிடலியே தப்பிச்சோம்//

ஒரு நன்றி விசுவாசம்


அபுஅஃப்ஸர் on July 26, 2009 at 2:42 PM  

//ஷ‌ஃபிக்ஸ் said...
//அபுஅஃப்ஸர் said...
//அந்த பொறுமயை வெல்ல முயலும் எந்த முயற்சியும்//

அந்த முயற்சியில் வெற்றிப்பெற சப்பாத்தி கட்டை பறக்குமாமுலே அப்படியா//

அதையும் நாங்க பொறுமையோட ஹேன்டில் பன்னுவோம்ல‌
//

நிறைய பேத்துக்கு பாடம் எடுக்கவேண்டியிருக்காம், ஆன்லைன் குரூப் டிஸ்கசன் ஆரம்பிங்க நல்ல வருமானம் பாக்கலாமாம்


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:47 PM  

//அபுஅஃப்ஸர் said...
//சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி //

3x7 நாட்களும் அண்ணாத்தேதான் சமயலாம்...ஊருக்காட்டுக்குள்ளே கேள்விப்பட்டோமுங்கோ//

ஐந்து கறி சோறு எப்படி இருந்ததுன்னு நவாஸிடம் கேளுங்கள்


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 2:53 PM  

//அபுஅஃப்ஸர் said...
//....அரபி, மளையாலம், ஹிந்தி என பல மொழிகள் காதில் விழுகிறது//

உங்க அலுவலகம் மீன் மார்கெட்லேயா இருக்கு????//

எங்களோட திறமையால அலுவலகத்தையும் அந்த ரேஞ்சுக்கு கொன்டுவந்துடுவோம்ல‌


ஜெஸ்வந்தி on July 26, 2009 at 2:59 PM  

உங்கள் பதில்கள் இயல்பாக இருக்கின்றன
.//வாழ்க்கை, இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//
இது மிகவும் பிடித்தது.


ஷ‌ஃபிக்ஸ் on July 26, 2009 at 3:04 PM  

//ஜெஸ்வந்தி said...
உங்கள் பதில்கள் இயல்பாக இருக்கின்றன
.//வாழ்க்கை, இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//
இது மிகவும் பிடித்தது.//

நன்றி ஜெஸ்


Jaleela on July 28, 2009 at 3:52 PM  

அசைவம் : மீன் குழம்பு + வறுவ‌ல்

//என‌க்கும் இதான் பிடிக்கும்//


சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் (எப்பவாவது ஒரு தடவை இப்படி ஒரு அட்வென்ட்ச்சர் அட்டெம்ப்ட் செய்வதுண்டு)


//வாவ் சூப்ப‌ர் இத‌ ப‌டிக்க‌வே காதுக்கு இனிமையா இருக்கு//
எங்க அத்தானும் சொல்வார் முடியலையா உன்னையார் செய்ய‌ சொன்னா அதுக்கென்ன‌ வெளியில் வாங்கிக்கொள்ள‌லாம். டீ ம‌ட்டும் சில‌ ச‌ம‌ய‌ம் போட்டு கொடுப்பார். ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்கும் , அது ஒன்னு தான் தெரியும் அவ‌ருக்கு


வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!
// ரொம்ப‌ அருமை//


எனக்கும் 32 க்கு அழைப்பு வந்துவிட்டது, இது பெரிய புராஜெக்ட் இப்ப முடியாது


அக்பர் on July 28, 2009 at 4:40 PM  

// வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//

நச்!


சிங்கக்குட்டி on July 30, 2009 at 3:18 PM  

//பிடிக்காத விஷயம்: அந்த பொறுமயை வெல்ல முயலும் எந்த முயற்சியும்//
அருமையான கருத்து :-))


ஷ‌ஃபிக்ஸ் on August 1, 2009 at 9:16 AM  

//Jaleela said...
அசைவம் : மீன் குழம்பு + வறுவ‌ல்

//என‌க்கும் இதான் பிடிக்கும்//

எல்லோருமே மீன் விரும்பிகள் தான் போலிருக்கு!!


சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் (எப்பவாவது ஒரு தடவை இப்படி ஒரு அட்வென்ட்ச்சர் அட்டெம்ப்ட் செய்வதுண்டு)


//வாவ் சூப்ப‌ர் இத‌ ப‌டிக்க‌வே காதுக்கு இனிமையா இருக்கு//
எங்க அத்தானும் சொல்வார் முடியலையா உன்னையார் செய்ய‌ சொன்னா அதுக்கென்ன‌ வெளியில் வாங்கிக்கொள்ள‌லாம். டீ ம‌ட்டும் சில‌ ச‌ம‌ய‌ம் போட்டு கொடுப்பார். ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்கும் , அது ஒன்னு தான் தெரியும் அவ‌ருக்கு//

மிக்க மகிழ்ச்சி!!


வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!
// ரொம்ப‌ அருமை//


//எனக்கும் 32 க்கு அழைப்பு வந்துவிட்டது, இது பெரிய புராஜெக்ட் இப்ப முடியாது//

மிக்க ஆவலுடன் காத்திருக்கோம்! உஙக பதிலகளில் உப்பு, காரம் மற்றும் இனிப்பு தூக்கலாகவே இருக்கும்!! ஹா ஹா.


ஷ‌ஃபிக்ஸ் on August 1, 2009 at 9:17 AM  

//அக்பர் said...
// வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//

நச்!//

நன்றி அக்பர்


ஷ‌ஃபிக்ஸ் on August 1, 2009 at 9:19 AM  

//சிங்கக்குட்டி said...
//பிடிக்காத விஷயம்: அந்த பொறுமயை வெல்ல முயலும் எந்த முயற்சியும்//
அருமையான கருத்து :-))//

நன்றி சிங்கம் (யப்பா பேரு.......)


சப்ராஸ் அபூ பக்கர் on August 1, 2009 at 10:37 AM  

///பிடித்த விஷயம் : பொறுமை///

என்னுடைய ஒவ்வொரு நண்பனிடமும் நான் எதிர் பார்க்கிற விடயம்... உங்க கிட்ட இருப்பதிலையும் ரொம்ப சந்தோஷமா இருக்குது.....


ஷ‌ஃபிக்ஸ் on August 1, 2009 at 3:06 PM  

//சப்ராஸ் அபூ பக்கர் said...
///பிடித்த விஷயம் : பொறுமை///

என்னுடைய ஒவ்வொரு நண்பனிடமும் நான் எதிர் பார்க்கிற விடயம்... உங்க கிட்ட இருப்பதிலையும் ரொம்ப சந்தோஷமா இருக்குது.....//

நன்றி சர்ஃப்ராஸ்


முனைவர்.இரா.குணசீலன் on August 2, 2009 at 7:52 AM  

அப்புறம் 'ஷஃபிக்ஸ்' எப்படி? பள்ளி நாட்களில் ஆங்கில‌ ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் வகுப்பில் ஒரு நாள் suffix & prefix நடத்தினார், அந்த நாள் முதல் நன்பர்கள் suffixயே எனக்கும் வைத்து அழைத்த‌னர். அது தற்பொழுது வலைப்பதிவு பெயராகி விட்டது. /

பெயர்க்காரணம் வித்யாசமாகவுள்ளது.


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 4:10 PM  

//முனைவர்.இரா.குணசீலன் said...
அப்புறம் 'ஷஃபிக்ஸ்' எப்படி? பள்ளி நாட்களில் ஆங்கில‌ ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் வகுப்பில் ஒரு நாள் suffix & prefix நடத்தினார், அந்த நாள் முதல் நன்பர்கள் suffixயே எனக்கும் வைத்து அழைத்த‌னர். அது தற்பொழுது வலைப்பதிவு பெயராகி விட்டது. /

பெயர்க்காரணம் வித்யாசமாகவுள்ளது.//

நன்றி முனைவர் குணா, தங்களையும் இந்த பெயர்க்காரணம் கவர்ந்ததில் மகிழ்ச்சி


Rifaj Aslam on September 7, 2009 at 2:16 PM  

வாழ்க்கை, இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'

great replies dear brother


PEACE TRAIN on September 8, 2009 at 9:47 AM  

அஸ்ஸலாமு அலைக்கும் ஷபிய்,எப்படி இருக்கிறீர்கள்.நம்ம ஸ்கூல்ல படிச்ச காலத்துக்கு கொண்டு போய்ட்டியல மாப்ள.யாருன்னு தெரியுதா,தெரிஞ்சா சொல்லுங்க, பார்ப்போம். க்ளூ:நான் உங்கக் கிளாஸ் மேட்டு(ஊர்ல)


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 4:14 PM  

//Rifaj Aslam said...
வாழ்க்கை, இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'

great replies dear brother//

நன்றி ரிஃபாஜ்


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 4:17 PM  

//PEACE TRAIN said...
அஸ்ஸலாமு அலைக்கும் ஷபிய்,எப்படி இருக்கிறீர்கள்.நம்ம ஸ்கூல்ல படிச்ச காலத்துக்கு கொண்டு போய்ட்டியல மாப்ள.யாருன்னு தெரியுதா,தெரிஞ்சா சொல்லுங்க, பார்ப்போம். க்ளூ:நான் உங்கக் கிளாஸ் மேட்டு(ஊர்ல)//

வஅலைக்குமுஸ்ஸலாம், யாருப்பா இந்த அமைதி ரயில், அந்த நாட்களில் வகுப்பில் இருந்து கம்பன் ரயிலைத்தான் பார்த்தேன், கூட இருந்த இந்த ரயிலையும் பார்த்து இருப்பேன், தயவு செய்து மின்னஞ்சல் கொடுங்களேன் shafiahmedm@gmail.com நன்றி.


PEACE TRAIN on September 15, 2009 at 7:39 AM  

மாப்ள மெயில் அனுப்பி இருக்கேன்.


அன்புடன் மலிக்கா on September 15, 2009 at 1:41 PM  

//வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//

வாழ்க்கையை பற்றிய உங்களின் கருத்துக்கள் மிக அருமை

அனைத்தும் பதில்களும் சிறப்பு