சுழலும் வீடு
இது ஒரு புது மாதிரியான வீடு, ஆஸ்திரேலியாவில், வின்காம், பகுதியில் இந்த சுழலும் வீடு புதுசா கட்டியிருக்காங்க. சூரியன் எந்த திசையில போகுதோ, அந்த ப்க்கம் கூடுதலா வெளிச்சம் கிடைக்கிறதுக்காக இப்ப்டி வடிவமைச்சு இருக்காங்க, பல லட்சம் டாலர்கள் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்காங்க, இதுல குடியிருக்கிற ஜோடி (பிங்க்கி & பாங்க்கின்னு வச்சுக்கலாம்), ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்காம். நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். ஆனா இந்த தெருவுக்கு வருகிற போஸ்ட்மேன், பால் கொண்டு வருகிறவங்களுக்கு வாசல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கிறது குழப்பமா இருக்கும். (Reference : www.greendiary.com)
சிக்னல் சிக்கல்
எங்க அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது ஒரு சிக்னல் இருக்கு, சில மாதங்களுக்கு முன் அதுல கவுன்ட்டிங் முறை, அதாவது சிவப்பு நிறம் வந்தா 90 வினாடிகளும், பச்சை நிறம் மாறும் போது 30 வினாடிகளும் இருக்கும், சிறிது நாட்களாக பச்சை நிறம் மாறினால் அது 01 லேயே நிக்கும், நாம பாட்டுக்கு இப்ப மாறுமோ, அப்போ மாறுமோன்னு வண்டிய உருட்டிக்கொண்டு போகணும். ஆனா நேற்றிலிருந்து பாருங்க சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து எரிவதால் இன்னும் பிரச்ணை கூடுதலா ஆயிடுடச்சு. ஒரே டென்ஜன்...
வருடம் 2010
இன்னும் இரண்டு வாரத்தில் புது வருடம் 2010 பிறக்கபோகுது, அதை இரண்டாயிரத்து பத்துன்னு (Two thousand and ten))சொல்வதா இருபது (Twenty Ten))பத்துன்னு சொல்வதான்னு ஒரு சர்ச்சை பல நாடுகளில் கிளம்பி இருக்கு, யாருப்பா அது, கொண்டு வாங்க சொம்பையும், ஜமுக்காலத்தையும், கூட்டுங்கடா பஞ்சாயத்தை, நீங்க எப்புடி வேணும்னாலும் சொல்லுங்க ஆனா அமைதியா அடிச்சுக்காம எங்கள வாழ விட்டா சரி.
53 comments
என்ன, இப்பல்லாம் பதிவுகள் அடிக்கடி போடற மாதிரி இருக்குது. ஆணி அதிகமில்லையோ?
ஷஃபி ஒரு முடிவோடுதான் கிளம்பிருக்கீங்க
நீங்க எப்படிவேனும்னா சொல்லுங்க ஆனா மாசம் 1ம் தேதி சம்பளத்தை ஒழுங்கா கொடுத்தா சரி
//ஹுஸைனம்மா said...
என்ன, இப்பல்லாம் பதிவுகள் அடிக்கடி போடற மாதிரி இருக்குது. ஆணி அதிகமில்லையோ
//
ஆணியெல்லாம் புடுங்கி போரடிச்சிடுச்சாம், அதான் பதிவெழுதுறார்
//சுழலும் வீடு
//
பேஸ்மென்ட்லே பெரிய மோட்டார் வெச்சிருக்காங்களோ
//ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது //
நம்மாட்கள் பெட்லேர்ந்து கீழே விழுந்து வடமேற்குகிழவடக்கு பக்க எழுந்திருக்கிறாங்க அவுங்களை என்ன செய்வது, அப்போ வீடு தழைகீழா சுத்துதோ???? ஆஆஅவ்வ்வ்வ்வ்
//சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து //
நீங்க இடது பக்கம் இன்டிகேட்டர் போட்டுக்கிட்டு, வலது பக்கமா கைய காமிச்சி நேரே போய்டுங்க
ஹுஸைனம்மா said...
என்ன, இப்பல்லாம் பதிவுகள் அடிக்கடி போடற மாதிரி இருக்குது. ஆணி அதிகமில்லையோ?
அது என்னைக்கு இருந்திருக்கு....இருந்தாலும் இவர் என்னைக்கு செய்திருக்கார்...
தலை தனியா கால் தனியா வராத வரை நல்லதே... வாழ்க பிங்கியும் பாங்கியும்..
தலை சுத்தும் போது இந்த சுழலும் வீட்ல இருந்தா என்னாவும்?
சிக்னல் சிக்கல் அங்கேயுமா?
இங்க இந்த கஷ்டம் இல்லீங்க.. ஏன் தெரியுமா... சிக்னலே ஒர்க் செய்யாது.
சண்டை வந்தாகூட ரெண்டு பேரும் சும்மா சுத்தி சுத்தி அடிச்சிப்பாங்கல்ல ஷஃபி.
கலர்ஃபுல்லான சிக்னலா ஷஃபி. (நேரடி அர்த்தம் மட்டும் எடுத்துக்கிட்டா போதும்)
//ஹுஸைனம்மா said...
என்ன, இப்பல்லாம் பதிவுகள் அடிக்கடி போடற மாதிரி இருக்குது. ஆணி அதிகமில்லையோ?//
முதல் பின்னூட்டம் போட்டு தாங்களும் நமது அணியென அறிந்து ஆனந்தம் அடைந்தோம் ஹூசைனம்மா!!
// அபுஅஃப்ஸர் said...
//ஹுஸைனம்மா said...
என்ன, இப்பல்லாம் பதிவுகள் அடிக்கடி போடற மாதிரி இருக்குது. ஆணி அதிகமில்லையோ
//
ஆணியெல்லாம் புடுங்கி போரடிச்சிடுச்சாம், அதான் பதிவெழுதுறார்//
வீக்கெண்டு மூடு தலைவரே....
// அபுஅஃப்ஸர் said...
//சுழலும் வீடு
//
பேஸ்மென்ட்லே பெரிய மோட்டார் வெச்சிருக்காங்களோ//
சுத்தினது நின்னதும் தான் எதுவுமே சொல்லமுடியும்.
//அபுஅஃப்ஸர் said...
//சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து //
நீங்க இடது பக்கம் இன்டிகேட்டர் போட்டுக்கிட்டு, வலது பக்கமா கைய காமிச்சி நேரே போய்டுங்க//
சரி தல நேரே போய்டுறோம்!!
//தமிழரசி said...
ஹுஸைனம்மா said...
என்ன, இப்பல்லாம் பதிவுகள் அடிக்கடி போடற மாதிரி இருக்குது. ஆணி அதிகமில்லையோ?
அது என்னைக்கு இருந்திருக்கு....இருந்தாலும் இவர் என்னைக்கு செய்திருக்கார்..//
ஆணி இருந்தாலும் நாங்க சத்தம்போட்டு அடிக்கமாட்டோம், மெதுவா, பக்குவமாத்தேன் அடிப்போம்.
//இராகவன் நைஜிரியா said...
தலை சுத்தும் போது இந்த சுழலும் வீட்ல இருந்தா என்னாவும்?//
அப்போ தலை மட்டும் தான் சுத்திச்சு, இப்போ காலும் சேர்ந்து சுத்தும். உங்க கேள்விக்கூர்மையை பாராட்டுகிறேன் அண்ணே.
// இராகவன் நைஜிரியா said...
சிக்னல் சிக்கல் அங்கேயுமா?
இங்க இந்த கஷ்டம் இல்லீங்க.. ஏன் தெரியுமா... சிக்னலே ஒர்க் செய்யாது.//
அப்படியா அப்போ ரோடு இருக்கும்ல அண்ணே?
// S.A. நவாஸுதீன் said...
சண்டை வந்தாகூட ரெண்டு பேரும் சும்மா சுத்தி சுத்தி அடிச்சிப்பாங்கல்ல ஷஃபி.//
யப்பா கவிஞா, யோசிக்க சண்டை மட்டும் தான் கிடைச்சுதா..சுழலாளின்னு ஒரு கவிதை தோணலையா...அவ்வ்வ்வ்வ்.
//S.A. நவாஸுதீன் said...
கலர்ஃபுல்லான சிக்னலா ஷஃபி. (நேரடி அர்த்தம் மட்டும் எடுத்துக்கிட்டா போதும்)//
இதில் பின் நவீனத்துவம் இல்லையா?
2010ளும் சர்ச்சையா?????
ரூம் போட்டு படுத்துகிட்டு பெட்சீட் போத்தி யோசிப்பாய்ங்களோ...
அவுங்கதான் அப்படின்னா
இதுக்கு நீங்க வேற ஏன்ணே பஞ்சாயத்த கூட்ரீக???
இந்த சுழலும் வீட்டுக்கு எஸ்டிமேட் எவ்வளவாம்? எப்படி நம்ம அரசியல்வாதிகள், சினிமாக்காரங்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோணாமப் போச்சு?
இங்க துபாயிலயும், அபுதாபிலயும் “ஹயாத் ரீஜன்ஸி” ஹோட்டலின் மேலே உள்ள ரெஸ்டாரண்ட் மட்டும் சுழலும். ஒருமணி நேரத்திற்கு ஒரு முழு சுழற்சியாம். சொன்னாங்க.
அப்புறம் துபாயில் இத மாதிரி முழுசும் சுழலும் கட்டிடம் ஒண்ணு கட்ட ப்ப்ப்ளான் (மட்டும்) போட்டாங்க.
உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு சிக்னல்!! இதெல்லாம் நம்மூர்ல இருக்க வேண்டியது!! (சிக்னலச் சொன்னேன்).
2010 - இதை ட்வெண்டி - ட்வெண்டி மாதிரி ட்வெண்டி-டென்னுன்னு சொல்லிக் கேக்கத்தான் அழகா இருக்கு.
எப்படிச் சொன்னா என்ன, A rose is a rose is a rose is a rose...
அதாவது, கன்னியாகுமரி பக்கம் சொல்வாங்க: பூவை (புஷ்பம்!!) புப்பம்னுஞ்செல்லலாம், மலருன்னுஞ்செல்லலாம், (flower) புளவரின்னுஞ்செல்லலாம்!!
(சொல்லலாம்கிறதைத்தான் ”ச்செல்லலாம்” னு சொல்லுவாங்க)
//அருள்மொழியன் said...
2010ளும் சர்ச்சையா?????
ரூம் போட்டு படுத்துகிட்டு பெட்சீட் போத்தி யோசிப்பாய்ங்களோ...
அவுங்கதான் அப்படின்னா
இதுக்கு நீங்க வேற ஏன்ணே பஞ்சாயத்த கூட்ரீக??//
ஏதாச்சும் கிடைக்காதான்னு தானே இருக்காங்க.
//ஹுஸைனம்மா said...
இந்த சுழலும் வீட்டுக்கு எஸ்டிமேட் எவ்வளவாம்?//
நான்கு லட்சம் டாலர்கள்னு சொல்லிக்கிறாங்க, ஏன் நீங்க சுழல் வீடு கட்டப்போறீங்களா? டிசைன் நானே, நானே போட்டுத்தருகிறேன் அக்கா.
//ஹுஸைனம்மா said...
இங்க துபாயிலயும், அபுதாபிலயும் “ஹயாத் ரீஜன்ஸி” ஹோட்டலின் மேலே உள்ள ரெஸ்டாரண்ட் மட்டும் சுழலும். ஒருமணி நேரத்திற்கு ஒரு முழு சுழற்சியாம். சொன்னாங்க.//
சென்னையில் அண்ணா நகரில் ஒரு ரெஸ்டார்ன்டில் இருக்காம், அது இப்போ சுத்துதான்னு தெரியலை, என்னோட ஃப்ரென்ட் சொன்னான்.
//அப்புறம் துபாயில் இத மாதிரி முழுசும் சுழலும் கட்டிடம் ஒண்ணு கட்ட ப்ப்ப்ளான் (மட்டும்) போட்டாங்க.//
ப்லேன்னோட நிறுத்திக்க சொல்லுங்க, இப்போ சூழலில் சுழல் கட்டிடம் வரும்கிறீங்களா?
//ஹுஸைனம்மா said...
2010 - இதை ட்வெண்டி - ட்வெண்டி மாதிரி ட்வெண்டி-டென்னுன்னு சொல்லிக் கேக்கத்தான் அழகா இருக்கு//
நானும் அத தான் யோசிச்சேன், பீட்டர் விடும்போது டுவென்ட்டி டெவென்ட்டின்னும், உங்கள மாதிரி ஆளுங்க கிட்டே பேசும்போது இரண்டாயிரத்து பத்துன்னு சொல்லலாம்னு இருந்தேன்.
எப்படிச் சொன்னா என்ன, A rose is a rose is a rose is a rose...
அதாவது, கன்னியாகுமரி பக்கம் சொல்வாங்க: பூவை (புஷ்பம்!!) புப்பம்னுஞ்செல்லலாம், மலருன்னுஞ்செல்லலாம், (flower) புளவரின்னுஞ்செல்லலாம்!!
(சொல்லலாம்கிறதைத்தான் ”ச்செல்லலாம்” னு சொல்லுவாங்க)
சொல்ல்ராய்ச்சி கண்டு நெகிழ்ந்துவிட்டோம்.
நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். ...............super comment!
நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும்
பாத்து வயித்தெரிச்சல் பட தான்!!!
அடி ஆத்தி பெரிய கும்மி நடந்து முடிஞ்சிரிச்சி போல
பதிவு சுவாரஸ்யமும் பதில்கள் சுவாரஸ்யமும் கூடுதலாகவே இருக்கு.
----------------
நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சா - தினம் ஒரு வாஸ்து வச்சிக்கலாம்.
நாம் இருக்கும் வீடும் கிழக்கிலிருந்து மேற்காலே சுத்துதே....
சுத்துவது தெரியாமல் சுத்துறோம்...
கடவுள் கட்டிக் கொடுத்த வீடு இது.
படுக்கும் போது ராத்திரின்னு சொல்லணும் எழுந்திருக்கும் போது விடிஞ்சாச்சுன்னு சொல்லணும்...சூப்பரா சுத்துற வீடு
//கொண்டு வாங்க சொம்பையும், ஜமுக்காலத்தையும், கூட்டுங்கடா பஞ்சாயத்தை//
நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு !!!
பிங்கி பாங்கி வீடு செம்ம ரசனையா கட்டியிருப்பாங்க போல
படிச்சதும் ஆச்சரியமும் நகையும் வந்தது சஃபி
பகிர்வுக்கு நன்றிப்பா...!
//நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். //
:-)))
எனக்கு அந்த வீடு வேணும்.
ரொம்ப ஜாலியா இருக்கும்
பால்காரன் மாறி வரதும், போஸ்ட் மேன் மாறி வரதும்
சூப்பர் போங்க!!
2010 சர்ச்சை நல்லா இருக்கு, ஜமக்காளமும் சொம்பும் ரெடி.
ம்ம்... பேசி ஒரு முடிவு பண்ணுங்க...
Very interesting posts Shafi!!!
@Chitra
நன்றி சித்ராம்மா
@Susri
நன்றிங்க (ஹா.ஹா.ஏன்..ஏன்)
//@நட்புடன் ஜமால் said...
அடி ஆத்தி பெரிய கும்மி நடந்து முடிஞ்சிரிச்சி போல//
ஆமா அமீரக புரட்சித்தலைவி ஹூசைனம்மா இனிப்பு வழங்கி தொடங்கி வச்சாங்க.
@goma said...
அட்டா அருமையான தத்துவம் அக்கா...
@அ.மு.செய்யது
எந்த மொழியில சொல்லணும், ட்ரான்ஸ்லேட் பண்ணிடுவோம்.
@பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்
நன்றி உழவர் நண்பரே
RAMYA said...
எனக்கு அந்த வீடு வேணும்.
//ஒகே. பின்கி & பாங்க்கி கிட்டேயிருந்து வாங்கி தந்துடுறேன் ரம்யா.//
ரொம்ப ஜாலியா இருக்கும்
பால்காரன் மாறி வரதும், போஸ்ட் மேன் மாறி வரதும்
சூப்பர் போங்க!!
//ஹீ ஹீ//
@Mythreyi Dilip
Thank you for passing by!!
vareen naaLai vareen.
uuriliruwthu paiyan vawthuLLaan aakaiaal weerru fulla busy
சுழலும் வீடு சூப்பர் , அருமையோ அருமை.
பால்காரர்கள் ஓவ்வொரு நாள் வரும் போது ஓவ்வொரு வாசல்.
வடிவேலு மாதிரி... எங்க போச்சு நேத்து இங்க தானே பார்த்தோம் பே பே தான்//
அந்த வெளிச்சம், எங்க ஊர் லைட் ஹவுஸ் மாதிரி இருக்கு
சிக்னல் அது ரொம்ப ஜாக்க்கிரதையா கவனிக்க வேண்டிய விஷியம். அப்பறம் எப்படி தான் போய் சேர்ந்தீங்க
சிக்னல் என்றூ சொன்னதும், எங்க வீட்டிலிருந்து ஆபிஸ் போகும் போது இன்னொருவரை பிக்கப் பண்ணும் போது குறுக்கு வழி எமர்ஜென்சி எக்சிட் வழியா போவோம், அங்கு
நாம் எழுந்து போய் பட்டனை அமுக்கினால் தான் தான் கிரீனே ஆகுமாம், இது தெரியாமல் முதல் முறை அந்த வழி போகும் போது ரொம்ப நேரம் டிரவர் நின்றூ கொண்டு இருந்தார், பிறகு அந்த வழியே போன ஒரு சீதேவி அந்த பட்டனை அழுத்தி விட்டுட்டு போனாஙக், பிறகு சிக்னல் விழ்ந்து 15 நிமிடமா வெயிட் பண்ணிட்டு பிறகு அவஙக் அந்த பட்டனை அழுத்தியதும் கிரீனாச்சு.
அப்பறம் போனோம். பிறகு தினம் அந்த சிக்னல் வந்ததும்,,, யாராவது இறங்கி போய் அமத்திவிட்டுட்டு வரனும்.
2010, நாட்டம யார் இதுல என்ன தீர்ப்பு தான் சொல்ல போறாங்க.. எப்படி சொன்னாலும் ஏற்று கொள்ள தான் வேணும்.
// நீங்க எப்படிவேனும்னா சொல்லுங்க ஆனா மாசம் 1ம் தேதி சம்பளத்தை ஒழுங்கா கொடுத்தா சரி//
2010, இரண்டாயிரத்து பத்து, இருபது பத்து ,நீங்க எப்படி வேண்டுமாலும் சொல்லுங்க,
இதான் பா இதான்
//மின்னல் ஹபீப்// டான்னு வந்துட்டா போதும்.
//தலை சுத்தும் போது இந்த சுழலும் வீட்ல இருந்தா என்னாவும்//
தலை சுற்றுவதும் வீடு சுத்துவதும் ,சரியா போய் விடும் இரண்டும் ஒன்று தான் .ஏன்னா ஒரே இடத்தில் இருந்தால் தான் தலை சுற்றுது என்பது தெரியும்...
@Jaleela
மிக்க மகிழ்ச்சி
சிக்னலில் 15 நிமிடம் நின்னிங்களா? ரொம்ப பொறுமைசாலி தான் நீங்க.
அவிங்க எப்போதும அப்படித்தான்.நாம ஜாக்கிரதையா இருக்க வேணுமப்பா.
Post a Comment