|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!சுன்டல்.......ஆமாம் நீங்கள் நினைக்கும் அதே சுன்டல் தான், பீச்சில் உட்கார்ந்து கடலை பார்த்துக்கொன்டோ, அல்லது கடலை போட்டுக்கொன்டோ சுவைத்து மகிழ்வீர்களே அதே சுன்டல்தான், நமது மெரினா பீச் சுன்டலுக்கு ஈடு இனை வேறு எங்கும் இல்லை, அது மியாமியோ, ஜுமைராவோ அல்லது ஜித்தாவோ உலகில் வேறு எதுவாகவோ இருக்கட்டும்.

ஏன தேசிய ஒருமைபாட்டிற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு சுன்டல் எனக்கூரினால் மிகை ஆகாது! எந்த ஒரு இன அல்லது நிற வேற்றுமை உனர்வும் இன்றி, தக்காளி, வெங்காயம், மல்லி தழை (எதாவது missing?) இன்னும் பல பொருட்களை சேர்த்துக்கொன்டு சுவையை கூட்டி நமக்கு இன்பத்தை தருகிறதே, சற்று சிந்தித்து பாருங்கள், மனித சமுதாயமும் இப்படி வேற்றுமை மறந்து ஓற்றுமையாக இருந்தால்.....(எப்படியெல்லாம் வாதாட வேண்டி இருக்கு...இந்த சுன்டலுக்காக).

சுன்டல்னா கின்டல் இல்லைப்பா...(ஜாலிக்காக உதாரணங்கள் சில)
அடுத்து வரப்போகும் திரைப்பட வரிசைகள் :

‍‍()சுன்டலுடன் காதல்
()சுன்டலுக்கு மரியாதை
()சூடான சுன்டலும் சுவையான பூரியும்

இப்படி சில தலைப்புகளில் 'என் TV' யில் பட்டிமன்றம் நடக்கப்போவதாக‌ கேள்வி:
()சுன்டலுக்கு பூரி அவசியமா? அவசியமில்லையா?
()சுன்டலை ரசிப்பதற்க்கு சிறந்த இடம் : கடற்க்கரையா, வீடா?

சென்ற முறை நான் மெரீனா சென்றபொழுது (சுன்டல் சாப்பிடுவதற்க்காக மட்டும்), சுவைத்து மகிழ்ந்து, இனி எப்பொது நாம் இந்த சுன்டலை சந்திக்கப்போகிறோமோ என்ற ஏக்கத்தில் படம் பிடித்து, தற்பொழுது நம் கடல் மற்றும் கடலை விரும்பி நன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

8 comments

S.A. நவாஸுதீன் on May 19, 2009 at 11:08 AM  

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். அடடடா எச்சில் ஊறுதே. நம்ம போஸ்ட் ஆபீஸ் கடை பக்கத்துல, ஊரில் கால்பந்து மேட்ச் நடக்கும்போது, கந்தூரி கூடு தெருவுல வரும்போது. ஹ்ம்ம் என்னத்த சொல்றது. இப்ப போனால் ஊர்ல கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால் இப்போ, சுண்டல் சாப்பிட்டு சூப்பு குடிக்கிறதுதான் ஊருக்கு போனால் டைம்பாஸ்


Shafi Blogs Here on May 19, 2009 at 11:28 AM  

அய்யோ..மாங்காயை mention பன்ன மறந்துட்டேனே!! ஆமாம் நவாஸ்...என்ன இருந்தாலும் கமால் காக்கா கடை டீ மாதிரி வருமா...அந்த டீக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் தப்பில்லை!!


அபுஅஃப்ஸர் on May 19, 2009 at 1:08 PM  

சுண்டல் என்றவுடன் நினைவுக்கு வருவது சூப்புதான் மற்றும் பீஃப்.

படிக்கும்போதே நாக்கு நம நமங்குது.. ம்ஹூம்

அனைத்து படத்தினெ பேரையும், பட்டிமன்ற தலைப்பப்யும் ரசித்தேன்

நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் ஷஃபி


Shafi Blogs Here on May 19, 2009 at 1:46 PM  

நன்றி நவாஸ் & மாலிக், ஏதோ உங்க்ளை போன்ற பிளாகியல் வல்லுனர்களின் உற்ற துனையுடன்!!....


முத்துலெட்சுமி/muthuletchumi on June 1, 2009 at 2:09 PM  

ஓ இதை முன்பே படித்துவிட்டு .. இதற்க்கு பின் இருந்த இப்படித்தான் கோவம் வந்தது க்கு பின்னூட்டம் போட்டு சென்றேன் என்று நினைக்கிறேன்.... :) சுண்டல்ன்னா சும்மா இல்லவே இல்லை..


Shafi Blogs Here on June 1, 2009 at 2:52 PM  

ந‌ன்றி முத்து, விடுமுறையை ந‌ன்றாக‌ ஜ‌மாய்ச்சுட்டு (தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கிட்டு) வாங்க‌!! அப்பாடா டெல்லி ரொம்ப‌ அமைதியா இருக்குதுடா.


Jaleela on July 11, 2009 at 11:40 AM  

பீச் ஞாபகம் வருது இத்துனூண்டு சுண்டலுக்லுள் இவ்வளவு இருக்கா?
போன தடவை அம்மா அப்பா தங்கைகளுடன் பீச் போய் அரட்டை அடித்து சுண்டல், மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட ஞாபகம் வருது.


ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 11:54 AM  

//Jaleela said...
பீச் ஞாபகம் வருது இத்துனூண்டு சுண்டலுக்லுள் இவ்வளவு இருக்கா?
போன தடவை அம்மா அப்பா தங்கைகளுடன் பீச் போய் அரட்டை அடித்து சுண்டல், மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட ஞாபகம் வருது.//

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து நம்மளோட சுன்டல் பக்கம் வர்ரியலே? சூடா இருக்காதே..ஆனால் சுவையாக இருக்கும்னு நினைக்கிரேன்.