|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 3:22 PM

To err is human; to forgive, divine

By SUFFIX at 3:22 PM

"To err is human; to forgive, divine." -Alexander Pope,
இதைதான் மறப்போம், மன்னிப்போம்னு நமது பெரியவங்க சொல்லி இருக்காங்க. இப்பொழுது உள்ள நமது வாழ்க்கை சூழ்நிழையில் நாம் எந்த அளவிற்க்கு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறோம் என ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்கின்றேன். தெரிந்த செய்த குற்றதிர்க்கும், தெரியாமல் செய்த குற்றத்திர்க்கு ஒரே பார்வை, ஒரே தீர்ப்பு, ஏன் நாம் நிதானம் தவறினோம், எல்லாமே 'right now concept' ஆனபோது இந்த விஷயத்திலும் நாம் அவசரப்படுகிறோமா என்று தோன்றுகிறது.
'கோபம் கண்ணை மறச்சிடுச்சு' ன்னு சொல்வாங்க, இப்போ 'புத்தியையும் மறச்சிடுச்சுன்னு' சொன்னாலும் தப்பில்லை. இதற்கு உதாரணங்கள் தர தேவையில்லை, அன்றாட செய்திகளிலோ, அனுபவத்திலோ கண்டு உணர்ந்து இருக்கலாம். அதனாலே அடுத்த முறை வீட்டிற்க்கு வெளியையோ, உள்ளேயோ கோபம் வந்தால் உங்களோட 'Analysing Power'ஐ கொஞம் யூஸ் பன்னுங்க...ப்ளீஸ்.
சரி..சரி இந்த சர்தார் மாதிரி கோவப்படாம, கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க..

இப்ப‌டி ஒரு முத‌லாளிக்கிட்டே வேலை செஞ்சா,யாருக்கும் கோவ‌ம் வ‌ர‌த்தான் செய்யும்:

சர்தார் : டேய் பய‌லே..போய் செடிங்க‌லுக்கு த‌ண்ணீர் ஊத்து.
பைய‌ன் : அய்யா, அது தான் ம‌ழை பெய்யுதுங்க‌ளே.
ச‌ர்தார் : அப்போ குட‌யை எடுத்துட்டு போய் த‌ண்ணீர் ஊத்துப்பா.


இதை படிச்ச அதிகாரிக்கு வெப்பம் எத்தனை செல்ஸியசுக்கு போச்சோ..

சம்பளம் எதிர்பார்ப்பு :_________

நமது சர்தார் : ஆமாம்


இந்த போஸ்ட் மேன் கோவத்தில் வேலையை ராஜினாமா செஞ்சுட்டதா கேள்வி:
போஸ்ட்மேன் : அய்யா இந்த லட்டரை டெலிவெரி செய்ய 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே வர்ரேங்க.
சர்தார் : அட ஏன்யா உனக்கு அறிவில்லை, பேசாம லட்டரை போஸ்ட் பன்னி இருக்கலாம்ல!!

இப்படி ஒரு proposal செய்தால் ஆத்திரம் வரத்தான் செய்திருக்கும்:
சோனி : அய்யோ நான் உஙகளை விட ஒரு வருஷம் மூத்தவள் சர்தார்.
சர்தார் : அதுக்கு என்ன இப்போ, ஒரு வருஷம் கழிச்சு வந்து உன்னை கை பிடிக்கிறேன்.


இது தான் ultimate நம்ம ச்ர்தார்ஜிக்கே வெறுப்பு ஏத்தினது:
சர்தார் : என்னய்யா இது ஒரு படம், எவன் வரஞ்சது? பார்க்கவே சகிக்கலை!!
விற்பனையாளர் : யோவ், நகருய்யா, அது முகம் பார்க்கிர கண்ணாடி

2 comments

S.A. நவாஸுதீன் on May 26, 2009 at 8:37 AM  

கோபம் இயற்கையான உணர்வு. அது கட்டுக்குள் வைத்திருக்கும்போது மனிதன், இல்லையேல் அவன் கைகளும் கால்களாய் மாறிவிடும்.


S.A. நவாஸுதீன் on May 26, 2009 at 8:38 AM  

சர்தார் என்றாலே சுவாரசியம்தான். நல்ல தொகுப்பு