|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கராங்களோ

தென்னாப்பிரிக்காவில் ஒரு குக்கிராமம் (நம்ம பாரதி ராஜா சொல்ரமாதிரி அதே profile), இந்த சிறு குழந்தைகள் குதூகலத்துடன், ரிங்கா..ரிங்கா..ரோசா ஆடி, பாடி, இந்த வளையத்தினை சுற்றி வருகிறார்கள்.

அவர்களுக்கு அறியாமலேயே அந்த சுத்துப்பட்டு கிராமத்திற்க்கு தேவையான தண்ணீரை இரைத்து அதை சேமிக்கவும் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த விளையாட்டு வளையத்திர்க்கு சில மீட்டர்களுக்கு கீழ் ஒரு பம்ப் வைத்துள்ளனர். இந்த சிறார்கள் சுற்ற சுற்ற பம்பிர்க்கு தேவையான மின் சக்தி உருவாக்கபட்டு, அதன் மூலம் அருகில் உள்ள 2,500 லிட்ட்ர் கொள்ளலவு உள்ள டேங்கினில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது (ஒரே கல்லில் ரென்டு மாங்காய்...வேறு ஏதாவது புதுசா சொல்லுப்பா)


Playpumps (http://www.playpumps.org/) அப்படிங்கர நிறுவனம், விளயாட்டாய் இல்ல, சீரியஸா இந்த பிசினஸ்ஸை வெற்றிகரமா ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இவர்கள் உதவியால் லட்ச கனக்கான மக்களுக்கு தண்ணீர் மிக சுலபமாக கிடைப்பதாக தென்னாப்பிர்க்க உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இது எப்படி செயல்படுகிறதுன்னு கீழே உள்ள சிறு வரைபடத்தின் மூலம் விளக்கி உள்ளார்கள்.

சரி...சரி.. ரொம்ப யோசிக்காதிங்க, புரியுது உஙகளின் சாதிக்கத்துடிக்கும் தன்னார்வம் (அப்படின்னா...?) வருகிர ஜூன் 5, உலக சுற்றுப்புற சூழ்ல் தினமாம் (உடனே SMS கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்களே). ஏதாவது உருப்படியான காரியம் செய்யலாமே.

The simple solution is the best one.

7 comments

S.A. நவாஸுதீன் on June 1, 2009 at 4:58 PM  

விளையாட்டு (நல்ல) வினையாப்போச்சு.


S.A. நவாஸுதீன் on June 1, 2009 at 4:59 PM  

ஐடியா நல்லாத்தான் இருக்கு.


Shafi Blogs Here on June 1, 2009 at 5:13 PM  

நம்ம கில்லி, கிட்டி பில், கிளி தட்டு போன்ற வீர விளையாட்டுகளுடன் இந்த மாதிரி டெக்னாலஜி டெவலப் பன்ன முடியுமான்னு ஆபீசில் வழக்கம்போல் தூங்காமெ யோசிங்க‌


அபுஅஃப்ஸர் on June 2, 2009 at 11:50 AM  

நல்ல பகிர்வு

நம்ம நாடாயிருந்தா அரசியல் வாதிங்க அதை காசாக்கி ஒரு வழிபண்ணிருப்பானுங்க‌


Shafi Blogs Here on June 2, 2009 at 12:29 PM  

ரொம்ப நன்றி அபூ, வந்ததற்க்கும் பகிர்ந்ததற்க்கும்...


Anonymous on June 27, 2009 at 1:14 PM  

Still namma ooruleh,

kakka, jaadi, kallu, thaani....

kathai sollikittu kaaalathai oturom..


Feroz on February 24, 2010 at 1:26 PM  

Rumba nalla yosanai..

Vilaiyatta sonnalum nalla seidhi solli irukeenga.