Picture source : http://www.designofsignage.com
இன்று எப்படியாவது இந்த பணத்தை கட்டிவிட வேண்டும், இரண்டு நாட்களாக முயன்றும் இந்தப் பக்கம் வரமுடியவில்லை, இன்றைக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியாச்சு, முடித்துவிடலாம்.
வங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள் வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு மூடிடுவாங்களாம்.

அப்போது ஒரு பெரியவர், கையில் மஞ்சல் பையுடன், உள்ளே நுழைந்தார், வரிசையின் நீளத்தைக் கண்டு அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது, பார்வை அங்கேயும், இங்கேயும் ஓடியது, நான் அவரை கூர்ந்து கவனித்ததாலோ என்னவோ, அவர் நேராக என்னிடம் வந்து, ஏதோ சொல்ல எத்தனித்தார், அதற்க்குள், வரிசையின் கடைசியிலிருந்து "அய்யா பெரியவரே, இங்கே இப்படி வந்து நில்லுங்க, நாங்களும் வேலை, வெட்டிய விட்டுட்டுதான் வந்திருக்கோம்", பெரியவர் என்னிடம், தம்பி, இந்த பணத்தை இன்னைக்குள்ள கட்டணும், இல்லாட்டி வட்டி போட்டுருவாங்க, கூட்டமும் அதிகமா இருக்கு, கவுன்ட்டரும் சீக்கிரம் மூடிருவாங்க போல, கொஞ்சம் உதவி செய்வீங்களா?, உதவி செய்தே ஆகவேண்டுமென தோன்றியது "சரி அய்யா, நீங்க அங்கே போய் உட்காருங்க, நான் பணத்தை கட்டிடுறேன்" எனக்கு பின்னாடி இருந்தவர், "ஹலோ, நீங்க பாட்டுக்கு வர்ரவங்க கிட்டே இப்படி சர்வீஸ் செஞ்சுக்கிட்டே இருந்தா நாங்க எப்போ வேலைய முடிக்கிறதாம், உங்க சமூக சேவையை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு உங்க வேலய மட்டும் பார்த்துட்டு போங்க சார்".
வட்டி ஒரு நச்சு, உயிர்க்கொல்லி, ஏன் இந்தப் பெரியவர் தனது பணத்தை அவசியில்லாமல் ஒரு நாள் தாமத்திற்காக இழக்க வேண்டும், நான் இழப்பதோ அரை மணி நேரந்தான், சில வினாடிகள் சிந்தனை ஓடியது, "அய்யா இப்படி வந்து என்னோட இடத்தில் நில்லுங்க, எனக்கு அவசரமா பணம் கட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை, நான் நாளைக்கு கூட வந்து கட்டிக்குவேன், நீங்க அமைதியா நின்னு உங்க பணத்தைக் கட்டிட்டு போங்க". அவரை அங்கே நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியில் அங்கிருந்து அலுவலகம் திரும்பினேன்.
மணி 5 ஆகி விட்டது, இன்றைக்கு புதிய பதிவுலக நண்பர் ரமேஷ் தனது வீட்டிற்க்கு அழைத்திருந்தார், 6 மணிக்கு அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தது, என்னைவிட மூன்று வருடங்கள் மூத்த்வர், நல்ல பண்பான மனிதர்.
சொன்ன சமயத்திற்க்குள் ரமேஷ் வீட்டை அடைந்து விட்டேன், அழைப்பு மணி அடித்து, கதவை திறந்ததும் ஆச்சர்யம், வங்கியில் சந்தித்த அந்தப் பெரியவர் ரமேஷ் வீட்டில்,
"அய்யா நீங்களா?",
"அட வாங்க தம்பி, உள்ளே வாங்க, நாம் இவ்ளோ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை",
அப்போ ரமேஷ்?,
"அவன் என்னோட பையன் தான், உங்களுக்கு அவன தெரியுமா?",
"ஏம்மா இங்க வா யாரு வந்திருக்காங்க பாரு",
"இப்படி உக்காருங்க தம்பி", பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.
"இவருதான் பேங்க்கில இன்னக்கி உதவி செய்தவர்மா"

"அப்படியாப்பா, உங்கள பத்தி தான் இன்னக்கி முழுசும் பேசிக்கிட்டு இருக்கார்"
"எங்கே ரமேஷ், அவன் இன்னுமா குளிக்கிறான்", அதற்க்குள் ரமேஷ் வந்து விட்டார்,
"டேய் ரமேஷ், இவரு உன்னோட ப்ரென்டா, இவரு தாம்ப்பா இன்னக்கி பேங்க்கில் ஹெல்ப் பண்ணியது"
"ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், அந்த நல்லவன் நீ தானா, நீ மட்டும் ஹெல்ப் பண்ண்லைனா ஆறாயிரம் ரூபாய் தண்டத்திற்க்கு வட்டி கட்டியிருப்போம்".
நான் செய்த அரைமணி நேர தியாகத்திற்கு இத்தனை விளைவுகளா, இவ்வளவு பாராட்டா? நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா? கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
எனது இந்த ஐம்பதாவது இடுகையை எனது அன்பான வலையுலக நண்பர்களுக்கு சமர்ப்பிப்பதில் மன நிறைவுடன் மன மகிழ்வும் அடைகிறேன்.
52 comments
நிஜமாகவே மன நிறைவு கொடுக்கும் ஒரு இடுகைதாங்க.
தன்னலமில்லாமல் பிறர்க்கு செய்யும் உதவிக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது என்பதை நிரூபித்திவிட்டீர்கள்.
முதலில் 50-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷஃபி. பிச்சி உதறிட்டீங்க போங்க
இவ்வுலகில் பெற்ற ஆனந்தத்தை மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்
வட்டியிலிருந்து ஒருவரை காப்பாற்றியுள்ளீர்கள் வல்ல அல்லாஹ் உங்களுக்கு என்ன தருவான் என்று யாராலும் கணிக்க இயலாது.
உங்களை நண்பனாக கொண்டிருப்பதில் சந்தோஷமடைகிறேன் மீண்டும்.
எங்களுக்கும் இதுபோன்றே யாவருக்கும் உதவிடும் மனப்பாங்கை கொடுக்க வல்ல ஏகனை வேண்டிடுங்கள்.
50ஆவது இடுகை மிக அழகானதாக அமைந்துள்ளது.
மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் இந்த மனநிறைவு.
பாராட்டுக்கள் ஷஃபி
இது கதையா, உண்மை நிகழ்வா? (லேபிள் சிறுகதை என்று சொல்கிறது).
எதுவாக இருந்தாலும், பாராட்டுக்கள். உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது.
அப்புறம், ஐம்பதாவது இடுகைக்கும் “மப்ரூக்”!!
நிறைவான இடுகை தான்.
ஆஃப் செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் ஷஃபி..
( எப்படி கூட்டினாலும் என்னோட பதிவுகள் 40 ஆ தாண்ட மாட்டேங்குதே ஏன் ?? )
// அ.மு.செய்யது$ said...
எப்படி கூட்டினாலும் என்னோட பதிவுகள் 40 ஆ தாண்ட மாட்டேங்குதே ஏன் ??//
தப்பாக் கூட்டினாலுமா?
///ஹுஸைனம்மா said...
// அ.மு.செய்யது$ said...
எப்படி கூட்டினாலும் என்னோட பதிவுகள் 40 ஆ தாண்ட மாட்டேங்குதே ஏன் ??//
தப்பாக் கூட்டினாலுமா?
எனக்கும்தான் செய்யதுன்னு சொல்ல வாயெடுத்தேன். அதுக்குள்ள இப்படி சொல்லிட்டியளே நீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
50 போட்டாச்சா.. வாழ்த்துக்கள் தல
நிறைவான இடுக்கை, 50 எப்பவும் மனசுலே நிற்கும்
//பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.
//
நீங்களே ஒரு ????
ஆமாம் நிச்சயமா அவரு இளமையாதான் இருப்பார்
//இராகவன் நைஜிரியா said...
நிஜமாகவே மன நிறைவு கொடுக்கும் ஒரு இடுகைதாங்க.
தன்னலமில்லாமல் பிறர்க்கு செய்யும் உதவிக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது என்பதை நிரூபித்திவிட்டீர்கள்//
அண்ணா தங்களது முதல் பின்னூட்டம், இன்னும் மன் நிறைவை தருகிறது. மிக்க மகிழ்ச்சி.
//S.A. நவாஸுதீன் said...
முதலில் 50-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷஃபி. பிச்சி உதறிட்டீங்க போங்க//
இதன் முழுக்காரணம் நீங்க தான் நவாஸ், நம்மளை இங்கே கொண்டு வந்து விட்டது நீங்க தானே!!
ஷபிக்ஸ் 50 வது பதிவு வாழ்த்துக்கள். நிஜ ஆர்ச்சரியம் ரொம்ப நெகிழ வைக்கிறது. நீங்களும் எதிர் பார்த்து இருக்கமாட்டீஙக அவர் தான் அந்த பெரியவர்.
உங்களுடைய இரக்க மனப்பாண்மையும் தெரிகிறது,
என்ன சிக்கன் ஜிகர் தண்டா போடுவதா சொன்னீர்களே என்ன ஆச்சு......
ஹி ஹி
//நட்புடன் ஜமால் said...
இவ்வுலகில் பெற்ற ஆனந்தத்தை மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்
வட்டியிலிருந்து ஒருவரை காப்பாற்றியுள்ளீர்கள் வல்ல அல்லாஹ் உங்களுக்கு என்ன தருவான் என்று யாராலும் கணிக்க இயலாது.
உங்களை நண்பனாக கொண்டிருப்பதில் சந்தோஷமடைகிறேன் மீண்டும்.
எங்களுக்கும் இதுபோன்றே யாவருக்கும் உதவிடும் மனப்பாங்கை கொடுக்க வல்ல ஏகனை வேண்டிடுங்கள்.//
நன்றி ஜமால், தங்களைப்போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆம், ஜமால் வட்டி ஒரு கொடுமையே, ஒருவரது ஏழ்மையை சுரண்டி மற்றவர் மகிழுறும் அவலம். இதை தவிர்த்தே ஆக வேண்டும்.
//ஹுஸைனம்மா said...
இது கதையா, உண்மை நிகழ்வா? (லேபிள் சிறுகதை என்று சொல்கிறது).
எதுவாக இருந்தாலும், பாராட்டுக்கள். உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது.
மிக்க மகிழ்ச்சி ஹுசைனம்மா.
50-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
anna
//அ.மு.செய்யது$ said...
நிறைவான இடுகை தான்.
ஆஃப் செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் ஷஃபி..
( எப்படி கூட்டினாலும் என்னோட பதிவுகள் 40 ஆ தாண்ட மாட்டேங்குதே ஏன் ?? )//
Here Quantity speaks, there Quality speaks? மிக்க மகிழ்ச்சி செய்யது, நீங்களும் ஒரு தூணாச்சே!!
SUFFIX said...
//ஹுஸைனம்மா said...
இது கதையா, உண்மை நிகழ்வா? (லேபிள் சிறுகதை என்று சொல்கிறது).
எதுவாக இருந்தாலும், பாராட்டுக்கள். உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது.
மிக்க மகிழ்ச்சி ஹுசைனம்மா.
spellingmistake sari pannuga
pechiduven pechi
//அபுஅஃப்ஸர் said...
50 போட்டாச்சா.. வாழ்த்துக்கள் தல
நிறைவான இடுக்கை, 50 எப்பவும் மனசுலே நிற்கும்//
மிக்க மகிழ்ச்சி, நானும் ஐம்பதைத் தொட்டு விட்டேனா? நம்ப முடியலை தலைவரே, கை கொடுத்த நல்ல உள்ளங்களில் நீங்கள் முதல்வராச்சே!!
//Jaleela said...
ஷபிக்ஸ் 50 வது பதிவு வாழ்த்துக்கள். நிஜ ஆர்ச்சரியம் ரொம்ப நெகிழ வைக்கிறது. நீங்களும் எதிர் பார்த்து இருக்கமாட்டீஙக அவர் தான் அந்த பெரியவர்.
உங்களுடைய இரக்க மனப்பாண்மையும் தெரிகிறது,
என்ன சிக்கன் ஜிகர் தண்டா போடுவதா சொன்னீர்களே என்ன ஆச்சு......
ஹி ஹி//
மிக்க மகிழ்ச்சி சகோதரி, என்னுடைய எல்லா இடுகைகளுக்கும் பின்னூட்டங்கள் போட்டு ஊக்கம் அளிப்பவர்களில் நீங்களும் ஒருவர். சிக்கன் ஜிகர்தன்டா ஹா..ஹா, இன்னுமா இந்த உலகம் நம்மளை இந்த உலகம் நம்புது?!!
//gayathri said...
50-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
anna//
நன்றி தங்கச்சி!!
முதல்பாதி பதிவை படித்த போது பெரியவருக்கு இடத்தை தியாகம் செய்ததின் மூலம் கவுண்டரில் நின்றவர்களின் சுயநல சிந்தனையை என்கவுண்டர் செய்தீர்கள் என்று நினைத்தேன், பிற்பாதியில் தமிழ்பட கிளைமாக்ஸ் சுபம் போல நடந்த இன்பத் திருப்பம் எதிர்பாராத ஆனால் ரசிக்க மற்றும் சிந்திக்க தூண்டும் திருப்பமாக அமைந்தது.
இது மன நிறைவை தரும் பதிவுதான்.
50 எல்லாம் சும்மா
உங்களுக்காக 1000 காத்திருக்குமா.....
வாழ்த்துகள்
இதைப் படித்ததில் எங்களுக்கும் மனநிறைவு இருக்கிறது. அருமை
50க்கும் வாழ்த்துக்கள்!
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷஃபி
நிறைவு எங்களுக்கும்..
ஒரு நல்ல கருத்தை முன் வைத்து மனதில் நிற்கும் படி செய்திட்டீங்க
உதவி செய்வதும் ஒரு நல்ல பண்பே.. அதன் அவசியத்தை சம்பந்தபட்டவங்க மட்டுமல்ல நாமும் அறியனும் என்பதை நல்லா அழகா தெளிவா சொல்லிட்டீங்க...வாழ்த்துக்கள் நிறைவோடு...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ!!
தன்னலம் கருதாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் போது வரும் சந்தோஷமே தனிதான்.அதை நீங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிங்க.உங்களின் நல்ல மனசுக்கு பாராட்டுக்கள் சகோ...
//அருள்மொழியன்//
தங்களது விளக்கமான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி அருள்மொழியன். வாழ்த்தியமைக்கு நன்றி.
// " உழவன் " " Uzhavan " said...
இதைப் படித்ததில் எங்களுக்கும் மனநிறைவு இருக்கிறது. அருமை
50க்கும் வாழ்த்துக்கள்!//
மிக்க மகிழ்ச்சி நண்பரே!!
//தமிழரசி said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷஃபி//
எங்கேடா அவைக்கு அரசியை காணவில்லைன்னு பார்த்தேன், வந்து வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி, தொடர வேண்டும் தங்களைப் போன்றோர்களின் ஊக்கம்.
// Mrs.Menagasathia said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ!!//
மனம் நிறைந்த சந்தோஷம் சகோதரி!
நல்ல மனநிறைவு தரும் இடுகை, பாராட்டுக்கள்.
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
நன்றி@சிங்கக்குட்டி
நன்றி@Susri
நல்ல காரியம்.ஆத்ம திருப்தியைத்தரும் விஷயம்.ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உதவின்னா என்னன்னு கேக்குற இந்த காலத்தில் தங்களைப்போன்ர நற்பண்பு பெற்றோரை நண்பராக அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி சஃபி
நிஜமாவே அந்த பெரியவரின் அந்த சந்தோச சிரிப்பு போதும் நீங்க செய்த உதவிக்கு...
ஐம்பதாவது இடுகை மனநிறைவான இடுகை வாழ்த்துக்கள் சஃபி...
உங்கள் உதவியால் அந்த பெரியவரின் குடும்பத்தில் மட்டும் அல்ல
எங்கள் மனதிலும் உயர்ந்து விட்டீர்கள்
50 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷஃபி
சதம் அடிக்க வாழ்த்துகள்.
நல்ல மனசு உங்களுக்கு.
கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். ......
இப்படி ஒவ்வொருவரும் தனக்கு வரும் வாய்ப்பை நழுவ விடாமல் நன்மை செய்தால்? நல்ல பகிர்வு.
மிக்க மகிழ்ச்சி @ பிரியமுடன்...வசந்த் - தங்களைப்போன்ற நணபர்களது தொடரும் ஊக்கமே எனக்கு டானிக்!!
மிக்க மகிழ்ச்சி @ கருவாச்சி
மிக்க மகிழ்ச்சி @ஸாதிகா
தொடர்ந்து வருகை தாருங்கள்.
மிக்க மகிழ்ச்சி @அக்பர், தங்களது வெற்றிக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி @Chitra, தொடர்ந்து வாங்க, கருத்தை சொல்லுங்க.
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள். இது போல் உதவ எனக்கும் வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உங்கள் பதிவை படித்து முடித்தேன்.

ஷபிக்ஸ் நான் உஙக்ளை தான் சொல்லனும் நீங்கள் என்னை சொல்கிறீர்கல். நீங்களும் நாவாஸும் எனக்கு ஆதரவு தரவில்லை என்றால் நான் இந்த அளவிற்கு பிரபலம் ஆகி இருக்க முடியாது. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.
@MAK
மிக்க மகிழ்ச்சி MAK.
@Jaleela
கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கு, என்னை பதிவுலகத்திற்கு கொண்டு வந்தவரே நண்பர் நவாஸ் தான்.
ஓ அப்படியா. சகோதரர் நவாஸுக்கு தான் நாம் நன்றி சொல்லனும், இவ்வளவு நல்ல விஷியஙகள் எல்லோரையும் சென்றடைகிறது.
50-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷபியண்ணா. மனநிறைவான இடுகை
எல்லோருக்கும் வாய்திடாது இதுபோன்றொரு மனது..
எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக...
@Jaleela said...
ஆமாம் சீக்கிரம் ஒரு விருந்து போட்டுவிடுவோம் அவருக்கு.
@அன்புடன் மலிக்கா
தங்களின் வாழ்த்திற்கும், பிராத்தணைகளுக்கும் நன்றிகள்.
//நான் செய்த அரைமணி நேர தியாகத்திற்கு இத்தனை விளைவுகளா, இவ்வளவு பாராட்டா? நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா? கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.//
இங்கிருக்கிறார்,இந்த சபி!
மிக அருமையான நடை சபி!
//பா.ராஜாராம் said...
மிக அருமையான நடை சபி!//
அண்ணன் பா.ரா. 51!! வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும். மனசு நிறைஞ்சுருக்குன்னு இப்போ சொல்லலாம்.
Post a Comment