முட்டி மோதியது
திட்டமிட்டே வட்டமிட்டது
வண்டின் கொடிய அம்புகள்!!
காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!
அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!
வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!
பெயர்ந்தது பொழுதும்
குனிந்தது மலரும்
கணிந்தது பார்வை
வண்டது வென்றது
களிப்பினில் குளித்தது
மோக மேகம்
திரண்டது திரளாய்,
கணமழையில் இன்பம்
தேனாய் நனைந்தது!!
(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)
56 comments
(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)
anegama enaku anai ittavangalathan riukumnu nenaikiren
ada anna kavithai fulla ore romancesa iruku so
nalla irukunu mattum sollitu podren
என்னையும் என்ன?
நீங்கள் எழுதாவிட்டால் யார் எழுதுவது..
எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு!
நீங்க அசத்துங்க ஷஃபி.
///காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!///
வேற வழி. சரண்டர் ஆகித்தானே ஆகனும்
ரொம்ப நல்லா இருக்கு ஷஃபி.
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)
அழகின் செருக்கில் மலரின் சிரிப்பு ஆதவன் ஒளியில்மின்னலாய் மிளிர்ந்தது!!
அடடா மலரின் சிரிப்புக்கு ஆதவனை லைட்பாய் ஆக்கிய விதம் அருமை
அட அசத்தல் கவிதை!
/ஜீவன் said...
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
தலைப்பிலேயே வார்த்தை விளையாட்டு.
படம் அழகு
வரிகளுக்கு என்ன அவையும் அழகே :)
வெதும்பிய வண்டுவதங்கா ஆசை துவலா வேட்கை தணியா விருப்பம்!!
என்னமோ போங்க ஷஃபி ...
//ஜீவன் said...
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)//
அதே! அதே!
சூப்பர் கவிதை.
எழுது தம்பி எழுது. நீ எழுதாம வேற யார் கவிதை எழுத முடியும்.
காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!.......................கவிதை எழுத ஆணையிட்டது யாரை இருந்தாலும், நன்றி. நல்ல கவிதை எங்களுக்கு கிடைத்தது.
ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க
எங்கேயா இருந்தீங்க இம்பூட்டு திறமைய வெச்சிக்கிட்டு
ஷஃபி ரசித்தேன் முழு கவிதை வரிகளையும்
//காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!
//
class thala
//டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)//
ஏதாவது புதுசா?????
/வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
வார்த்தைகள் உங்களிடம் சிக்கி திணறி(சந்தோஷத்தில்) பிறந்திருக்கின்றன நல்ல குழந்தையாய்-கவிதையாய்!! வாழ்த்துக்கள் ஷஃபி !!!
sooperuuu kavithai sooperu
டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)
/////////////////
intha kolaverikku kaaranam yaaro athu yaaro:)
சங்க கால கவிதை மாதிரி இருக்கு.....ஒரு வேள அப்படியிருக்குமோ !!! ஒரு வேள இப்படியிருக்குமோ ?!?!?!?!
இங்கயும் கவிதையா? இன்னிக்கு என்னவோ நாள் சரியில்லை போல, போற பிளாக்கிலெல்லாம் கவிதையா இருக்கு. எந்த நேரத்தில நானும் கவித எழுதினேனோ?!
தலைப்பு நல்லாருக்கு. அதுவும் கவிதை. (அதுதான் புரியுது எனக்கு!!)
/அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!/
வரிகள் அத்தனையும் கவிகனியாய் இனித்தது அருமை ஷபியண்ணா..
[டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா]
நல்லவேளை நாந்தான்னு போடலை:)
//என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா?//
நல்ல எழுதிட்டு இப்படி ஒரு டிஸ்கி போட்டு இருக்கீங்க
கவிதை வரிகள் அனைத்தும் அருமை,
எல்லாரும் கவிதையில புலியா இருக்காங்களே எப்படி?
ம்ம் கலக்குங்க கலக்குங்க.
கவிதை வரிகள் அருமை.
(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)//
யாருப்பா அது? அவரு அட்ரசக் குடுங்க...ங்ங்.........................ஏன்னா அவருக்கு நன்றி சொல்லனும் :-)
கவிதையில் தேன் வழிகிறது.
இப்படியெல்லாம் எழுதத் தெரியும் போது. ஏன் எழுதாம இருக்கீங்க.
அட கலக்குங்க!!
//என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!//
விலாசம் இருந்தா கொடுங்க
(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)
ஆணையிட்ட அரசி யாரோ?
அள்ளிக் கொடுங்கள் ஆயிரம் பொற்காசுகளை..... இந்த கவிஞன் அடிக்கடி எடுத்தியம்பட்டும் இப்படிப்பட்ட கவிதை மலர்களை நம்மேல் தொடுக்கட்டும்....
கழுகுப் பார்வை
முட்டி மோதியது திட்டமிட்டே வட்டமிட்டது வண்டின் கொடிய அம்புகள்!!
கொடிய அம்புகள் முட்டி முறியடிக்கப்பட்டதா? மலரின் மகரந்ததிடம்....
காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!
மண்டியிட்டது மானுட வேடம்...மிக்கச் சரியே மண்டியிட்டது மானிடனின் வேடமே...
அழகின் செருக்கில் மலரின் சிரிப்பு ஆதவன் ஒளியில்மின்னலாய் மிளிர்ந்தது!!
அழகின் செருக்கு....அற்புதம் இந்த வரிகள்
மலரின் செருக்கென சொல்லி மெருகேற்றியது மலருக்கு பெருமையும் சேர்த்தது....ஆதவனின் ஒளியில் மின்னலாய் மின்னியது...
அற்புதம் ஷஃபி..
கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது
தேனியில் ஊறிய தேவாமிர்தமாய்.....
உங்கள் கவிதைகளில் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மிகவும் என்னை கவர்ந்தது இந்த கவிதை...
கவிதை எழுதுவது திறமை என்றாலும்
அதை யாருக்காக எழுதறமோ அவங்க தாங்க அதிர்ஷடசாலி பெருமைக்குரியவர்களும் கூட.... இங்கு கவிதையை விட எழுதப்பட்டது யாருக்கோ என தேடுது விழிகள்...
sooooooooooosweeeeeeeeeeeeeeetttttttt shafi..................unga kavithai.....அடிக்கடி இப்படி எழுதுங்க நானும் கத்துகிறேன்..
ஜீவன் said...
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)
வழி மொழிகிறேன் எங்க இருந்தாரு இந்த கவிஞர்....
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
படபடக்கும் வரிகள் அருமை.
என்ன பிரதர் அழகான கவிதையை வடித்து விட்டு இப்படி ஒரு டிஸ்கி???
Romba Nalla Kavithai. Arumai!!!
Merry Christmas and happy Holidays:)
Hi,
Kindly accept my award
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
நன்றி @ gayathri (உங்களையுமா?)
நன்றி @ பா.ராஜாராம் (மிக்க மகிழ்ச்சி அண்ணா)
நன்றி @ நவாஸுதீன் (நீங்கதான் இருக்கியளே அசத்திடுவோம்)
நன்றி @ ஜீவன் (ஹா ஹா, அப்போப்போ கவிதை வரும் தலைவரே)
நன்றி @ goma (நல்ல வேளை லைஃப் பாய் சோப்புன்னு சொல்லாம இருந்தீங்களே)
நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)
நன்றி @ நட்புடன் ஜமால் (என்னத்த சொல்றது ஜமால்)
நன்றி @ ஜெஸ்வந்தி (வாங்க ஜெஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிங்க)
நன்றி @ இராகவன் நைஜிரியா (அண்ணனே சொல்லியாச்சி அப்புறம் என்ன)
நன்றி @ Chitra (நல்லபடியா கிருஸ்துமஸ் கொண்டாடிட்டு வாங்க)
நன்றி @அபுஅஃப்ஸர் (அப்படியெல்லாம் ஒன்னும் புதுசு இல்லை தலைவரே..ஹீ..ஹீ)
நன்றி @ Annam (வாம்மா வந்திட்டியா)
நன்றி @ அ.மு.செய்யது (அப்பா..தெம்பு வந்திருச்சு)
நன்றி @ ஹுஸைனம்மா (உங்கள் தன்னடக்கம் புரிகிறது, ரொம்ப நல்லவங்க)
நன்றி @ பூங்குன்றன்.வே (மிக்க மகிழ்ச்சி நண்பரே)
நன்றி @ அன்புடன் மலிக்கா (சந்தோசம், நல்ல பிள்ளையா இது மாதிரி வந்து கருத்து சொல்லிப்புடணும்)
நன்றி @ Jaleela (ஹூசைனம்மா கவிதைய படிச்சும் உங்களுக்கும் ஒரு கவிதை எழுதணும்னு தோணலையா?)
நன்றி @ ஸாதிகா
நன்றி @ உழவன் (ரொம்பவே புகழுகிறீர்கள் நண்பரே, மிக்க மகிழ்ச்சி)
நன்றி @ அக்பர் (இருந்தாலும் தாங்களின் எழுத்து நடை போல வராது அக்பர்)
நன்றி @ suvaiyaana suvai (கலக்கிடுவோம், ஒரு அகப்பை கொடுங்க)
நன்றி @ நசரேயன் (நீங்களே கண்டு பிடிங்க தலைவரே)
நன்றி @ தமிழரசி (அரசியின் அதிரட் அட்டாக், அழகான பின்னூட்டங்கள், அருமை)
Thanks a lot Mythreyi Dilip
Thank you Aruna Manikandan.
நன்றி @ சிங்கக்குட்டி (மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன் நண்பரே)
கலக்குங்க!!ஷஃபி.
Hi Shafi,
Wishing you and your family a very Happy and Prosperous New Year!!!!!
Annanukul irukum kavinganai adaiyalam kaatiya Anniku nandri....
"என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??"
Anniyin Annamandri verennavaga iruka mudiyum.... he he.....
keep up the good work bro...
நன்றி @ malarvizhi (கலக்கிடிவோம்)
Thanks @ Mythreyi Dilip (Wish you as well a very Happy New Year!!!!!)
நன்றி @ Najim
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
/ SUFFIX said...
நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)/
Theriyalai:)
Post a Comment