சென்ற வாரம் சென்னைக்கு ஒரு துரிதப் பயணம், இது வரை சவூதியா அல்லது எமிரேட்ஸில் தான் பயணிப்பது வழக்கம், முதன் முறையாக சிரிலங்க்கன் ஏர்லைன்ஸில் செல்லலாம் என டிக்க்ட் போட்டாச்சு, அதாவது கொழும்பு வழியாக சென்னைக்கு செல்லும். விமானம் மாலை எட்டு மணிக்கு புறப்பட வேண்டும், ஏதோ மின்சாரக் கோளாறாம், ஒரு மணி நேரத்தில் சரியாகி விடும்னு சொன்னாங்க, முன்பு எமிரேட்ஸினால் நிறுவகிக்கப்பட்டது, அப்போ நன்றாக இருந்ததுன்னு இப்போ இப்படி ஆயிடுச்சேன்னு சக பயணிகள் புலம்பித்தள்ளினார்கள், இது போன்று கோளாறுகளுக்கு சரியான Planned Maintenance இல்லைன்னு நினைக்கிறேன்.
மணி 11ம் ஆச்சு, சரியான பசி, ஏர்போர்ட்டில் இருக்கு ரெஸ்டாரன்ட்டில் ஒரு வெஜிடபில் பஃப்ஸ் 8 ரியாலுக்கும், ஒரு டீ 12 ரியாலுக்கும் வயிறு எரிய குடித்தோம், அந்த பாழாபோன டீக்கு எதுக்கு 12 ரியால் (கிட்டத்தட்ட 150 ரூபாய்) கொடுத்தோம்னு எனக்கு இன்னைவரை புரியலைங்க. பத்து நிமிடம் கழிச்சு ஒரு ஆள் வந்து விமான் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம், அதனால எல்லோருக்கும் டின்னர் கூப்பன் கொடுக்கப்போறோம்னு சொன்னாங்க, அடப்பாவிகளா இத கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னா என்னாங்கடா, சும்மா வந்த கூப்பனை ஏன் விடனும்னு அதையும் வாங்கி லபக்கியது சொல்லனுமா என்ன?.
நள்ளிரவு ஒரு மணிக்கு விமானத்தில் ஏறி உட்கார்ந்தாச்சு, விமானத்தில் உள்ளே நுழையும்போது, அயூபவன், அயூபவன்னு அந்தப் பெண் சாவி கொடுத்த பொம்மையைப் போல ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி வணக்கம் சொலவது, எனக்கு என்னவோ தேவையில்லாத ஒரு சடங்காக தோண்றியது. கேப்டன் Ready for take offனு சொல்லிட்டு, தாமத்திற்க்கு மன்னிக்கவும், IATA விதிப்படி, விமான ஓட்டியும் சிப்பந்திகளும் ஒரு சில மணி நேரத்திற்க்கு அதிகமாக வேலையில் அமர்த்தக்கூடாதாம், அதனால் உங்களை குவைத்திற்க்கு அழைத்துச் செல்கிறோம்னு, அங்கிருந்து வேறு ஒரு க்ரூப் இந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்னு ஒரு குண்டை போட்டாங்க, சில பேர் இங்கேயே விமானத்தை நிறுத்து நாங்க இறங்கிடுறோம்னு ஒரே சத்தம், இதற்க்கிடையே விமானம் 18,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.
விமானம் அதிகாலை 4 மணியளவில் குவைத் சென்றடந்தது, கேப்டன் மறுபடியும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டார், அதாவது ஒரு சிறு மணித்துளிகளில் விமானம் புறப்படும், சரி எத்தனை மணிக்குப்பா புறப்படும், கீழே இறங்கி கொஞ்ச நேரம் காத்திருங்க, நாங்க அறிவிப்போம்னு சொன்னாங்க, எல்லொரும் முனுமுனுத்துக் கொண்டே இறங்கியவுடன், எல்லோருக்கும் ஹோட்டல் தங்குவதற்க்கு கூப்பன் கொடுத்தாங்க, இது எதுக்குப்பா, அப்பொத்தான் சொன்னங்க விமானம் 11 மணிக்குதான் புறப்படுமாம், எனக்கு என்னச் செய்வதன்றேன் புரியவில்லை, செல்வதோ ஒரு வாரப் பயணம் இதில் ஒரு நாள் வீணாகி விட்டதேன்னு வருத்ததுடன் கோபம், எதுவா இருந்தாலும் ஏர்லங்க்கா தலைமையகத்திற்க்கு கம்ப்ளெய்ன்ட்டு பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க, அதுவும் சரியே, பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். விமான நிலையத்திலேயே இருந்தது அந்த ஹோட்டல், அறைக்கு எதிரிலேயே விமானங்கள் அங்கங்கே நிறுத்தி வைத்தது இருந்தார்கள், லைசன்ஸ் இருந்தால் அதனை எடுத்துக்கிட்டு பறந்திடலாம்னு தோண்றியது.
(ஹோட்டல் அறைக்குமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம்)
சரியாக 11:30 மணிக்கு குவைத்திலிருந்து விமானம் புறப்பட்டது, அறிவிக்கும்போது 39,000 அடி உயரத்தில் பறக்கும்னு சொன்னாங்க, ஆனா ஒரு சில நிமிடங்களே அந்த உயரத்தை தக்க வைக்க முடிந்தது, தடாலென 28,000 அடியிலேயே ஓட்டினார்கள், இன்ஜின் திறம் அவ்வளவு தான் போல, அதனால் வேகமும் குறைவாகவே இருந்தது, மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டரே செல்ல முடிந்தது, இதுவே எமிரேடஸாக இருந்தால் வேகத்தை நிச்சயமாக கூட்டி இருப்பார்கள்.
ஏர்லன்ன்காவின் ஸ்பெஷல் மதுவினை அந்த மாதுக்கள் அளவில்லாமல் ஊற்றிக் கொடுப்பது தானாம், எனக்கு பிடிக்காத விடயம், எனக்கு அருகில் இருந்த சக பயண நண்பர் டாக்டர். ராமச்சந்திரன் குடிக்கும் பழக்கம் இல்லாதவர், அதனால் சற்று நிம்மதி, அவரே ஆச்சரயப்பட்டார், "என்னங்க நம்ம மக்கள் இப்படி தண்ணியில நீந்துறாங்க". அதைவிட கொடுமை பாட்டில் பாட்டிலாக விமானத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு விலைக்கு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தான் சீரழிவது மாத்திரமல்லாமல் தனது குடும்பம், நண்பர்களையும் இப்படி அழிக்கிறார்களேன்னு என்னோடு சேர்ந்து ராமச்சந்திரனும் வருத்தப்பட்டார்.
இதற்க்கிடையே எனக்கு பின்னால் இருந்த ஒருவர், தனது கைப்பேசியை குடைந்து கொண்டு இருந்தார், அங்கே வந்த ஏர்ஹோஸ்டஸ் தயவு செய்த ஸ்விட்ச ஆஃப் செய்யுங்கள் என்றார், அவர் இல்லை நான் பிளைட் மோட்ல (Flight mode) தான் வச்சிருக்கேன், இதில எனக்குப் பிடித்த பாட்டுக்கள் இருக்கு அதைத்தான் நான் கேட்கிறேன், அதனால் ஒரு பாதகமும் இல்லைன்னு சொல்ல, உடனே அந்தப் பெண் தனது சூப்பர்வைசரை அழைத்து வந்து, ஒரு வழியாக விவாதித்து அவர் வாயையும், கைப்பேசியையும் மூடி விட்டுச் சென்றனர்.
மாலை 6 மணிக்கு கொழும்பு சென்றைடைந்தது, பச்சைப் பசேலன அருமையான ஊர், விமான நிலையத்தின் அமைப்பு துபாய் விமான நிலையத்தினைப் போலவே இருந்தது, ஒரே ஆள் தான் கட்டியிருப்பாரோ? ரொம்ப யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை, சென்னைக்கு விமானம் புறப்படத்தயார இருக்கு உடனே போங்கன்னு விரட்ட, வேகமாக ஓடி துண்டை போட்டாச்சு, பாவம் திருச்சிக்காரங்க, அவங்களுக்கான இணைப்பு விமானம் அடுத்த நாள் தானாம், அதனால் அவ்ங்க மறுபடியும் கொழும்பில் ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம். எத்தனை உறவினர்கள் அங்கே விமான நிலையத்தில் இவர்களின் வருகைக்காக காத்து கிடக்கிறார்களோ.
விமானம் சென்னை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படது, ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு, அவர் அறிவிப்பு செய்த விதம் அருமையா இருந்ததது, அதாவது விமானம் நகர்ந்து 15 நிமிடம் வரைக்கும், அது போல தரையிறங்கும் முன் 15 நிமிடம் வரைக்கும் தங்களது கைப்பேசிகளை அமர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார், இது விளக்கமான அறிவிப்பு, முன்னர் குவைத் - கொழும்பு பயணத்தில் நடந்த விவாதம் தேவையில்லாதது எனப் புரிந்தது. ஆமா நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.
ஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு 10:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. நமது விமான நிலையத்தில் இருக்கும் ஏர்போர்ட் டேக்ஸி வசதி பாராட்ட்க்கூடியதே, வீட்டிலிருக்கும் யாருக்கும் தொந்தரவு தராமல், அங்கிருந்து மந்தைவெளிக்கு ரூ.450 கொடுத்தால், நல்ல தரமான குவாலிஸ் அல்லது சவேரா ஏ.ஸி. வண்டியில், அழகான முறையில் வீட்டுல கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். அப்பாடா வந்து சேர்ந்தாச்சுப்பா!!
எவ்வளவுதான் வசதியான் நாட்டில் வாழ்ந்தாலும் நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours!! இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே!! அது மருத்துவ வசதியாக இருக்கட்டும், குழந்தைகளின் படிப்பாகட்டும், அவர்களுக்குத் தேவையான பயனுள்ள புத்தகங்களாகட்டும், இந்த துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மைலாப்பூர் குளத்தை சுற்றி இருக்கும் கடைகளை ஒரு வலம் வந்தால் போதும் சவூதியில் கிடைக்காத அனைத்து பொருளும் விலை மலிவாகவும், தரமானதாகவும் வாங்கி விடலாம். (கோணார் நோட்ஸோ, பட்டுப்புடவையோ, கெட்டி உருண்டையோ - everything available).
அதிர்ஷ்டவசமாக சென்னையிலிருந்து திரும்பிய பயணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நன்றாகவே இருந்ததது, ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும், சிரிலங்க்கா விமானத்தில் கொடுக்கும் சாப்பாடு நமதூர் சாப்பாட்டைப்போல காரசாரமாக சுவையாகவே இருந்ததது, அதுக்காக எக்ஸ்டரா மீல்ஸா கேட்க முடியும்!!
58 comments
மீ த ஃபஷ்ட்!!
/இது வரை சவூதியா அல்லது எமிரேட்ஸில் தான் பயணிப்பது வழக்கம், முதன் முறையாக சிரிலங்க்கன் ஏர்லைன்ஸில் //
அது கம்பெனி டிக்கட், இது சொந்தக் காசில, அதான?
/கேப்டன் பெயரு ஷஃபி,.... நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.//
ரொம்ப ஓவர்!!
//நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours//
அதுசரிதான், சவூதியில கலர் பாத்தா கண்ணை நோண்டிடுவாங்கல்ல; அதனால் சென்னைதான் பெஸ்ட்!!
//இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே!!//
இக்கரைக்கு அக்கரை பச்சை!! அதென்னவோ என்.ஆர்.ஐ.ஸ்க்கு மட்டும்தான் இந்தியாவின் அருமை தெரிகிறது!!
ரொம்ப சீக்கிரமே அடுத்த பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்!!
எல்லாஞ்சரி....ஆமா எதுக்காக கோனார் நோட்ஸ் வாங்கினீங்க..
அருஞ்சொற்பொருள் படிக்கத்தான ?? உண்மையச் சொல்லுங்க..!!!
//ஹுஸைனம்மா said...
அது கம்பெனி டிக்கட், இது சொந்தக் காசில, அதான?//
ஹீ...ஹீ, அங்கேயும் அப்படித்தானுங்களா?
கொடுத்த காசுக்கு குவைத் சும்மா கூட்டிகிட்டு போயிருக்காங்களே. பரவாயில்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// ஹுஸைனம்மா said...
அதுசரிதான், சவூதியில கலர் பாத்தா கண்ணை நோண்டிடுவாங்கல்ல; அதனால் சென்னைதான் பெஸ்ட்!!//
வெளுத்த கலரெல்லாம் பாலுன்னு நினைக்கிற ரகம் நானுங்க!!
எமிரேட்ஸ் நிர்வாகத்தில் இருந்தபோது ஏர்லங்கா நிஜமாக நன்றாகவேதான் இருந்தது
//அ.மு.செய்யது$ said...
எல்லாஞ்சரி....ஆமா எதுக்காக கோனார் நோட்ஸ் வாங்கினீங்க..
அருஞ்சொற்பொருள் படிக்கத்தான ?? உண்மையச் சொல்லுங்க..!!!//
அது என்னுடைய மகனுக்கு வாங்கியது, சிட்டி சென்டரில் இருக்கும் லேன்ட்மார்க் சென்று எனக்கும் சில புத்தகங்கள் வாங்கினேன்.
//S.A. நவாஸுதீன் said...
கொடுத்த காசுக்கு குவைத் சும்மா கூட்டிகிட்டு போயிருக்காங்களே. பரவாயில்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
காலை 4:30 மணி சரியான, சரியான தூக்க கலக்கம், குவைத் ஹோட்டலில் தூங்கியது தான் மிச்சம்
//ஆமா நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.//
அதானே.
என்னோட சாய்ஸும் ஏர்லங்காதான்.
ஆனால் 1 வார லீவுக்கு நேரடி ஃப்ளைட்தான் சரி.
ஒரு வாரப்பயணத்தில் இப்படி ஒரு அவதியா, ஊரு ஊரா சுத்திக்காட்டிருக்கானுங்க
//சில பேர் இங்கேயே விமானத்தை நிறுத்து நாங்க இறங்கிடுறோம்னு ஒரே சத்தம், இதற்க்கிடையே விமானம் 18,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.
//
ஹா ஹா இறக்கிவிட்டால் எப்படி இருக்கும்னு நினைத்து சிரிப்பு வந்துவிட்டது
//ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு//
அவரை பிளாக் எழுதசொல்லிட்டு நீங்க ஓட்டிருக்கலாம்
இந்த கூக்குரலுக்குதான் காசை காசுனு பாக்காம நேரடி விமானத்தில் பயணிக்குறது....
//அக்பர் said...
ஆனால் 1 வார லீவுக்கு நேரடி ஃப்ளைட்தான் சரி//
பாடம் படிச்சாச்சு அக்பர்!!
// அபுஅஃப்ஸர் said...
இந்த கூக்குரலுக்குதான் காசை காசுனு பாக்காம நேரடி விமானத்தில் பயணிக்குறது...//
சான்ஸ் கிடைத்தால் கொழும்பு நகரத்தையும் கொஞ்சம் சுற்றிப் பார்ககலாம்னு நினைச்சுருந்தேன், அதுக்கும் வாய்ப்பு கிடைக்கல.
//அப்போ நன்றாக இருந்ததுன்னு இப்போ இப்படி ஆயிடுச்சேன்னு சக பயணிகள் புலம்பித்தள்ளினார்கள்,//
ஒரு வேளை நீங்க விமானத்தில் ஏறுவதில் விமானத்துக்கு உடன்பாடு இல்லையோ?
அட! எல்லாரும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நல்லா இருக்கும்னுலோ சொன்னாங்க.. நல்ல வேளை!
//மணி 11ம் ஆச்சு, சரியான பசி, ஏர்போர்ட்டில் இருக்கு ரெஸ்டாரன்ட்டில் ஒரு வெஜிடபில் பஃப்ஸ் 8 ரியாலுக்கும், ஒரு டீ 12 ரியாலுக்கும் வயிறு எரிய குடித்தோம், அந்த பாழாபோன டீக்கு எதுக்கு 12 ரியால் (கிட்டத்தட்ட 150 ரூபாய்) கொடுத்தோம்னு எனக்கு இன்னைவரை புரியலைங்க.//
உனக்கு எப்பத்தான் பசியில்லை சொல்...ஆமாம் எப்பவும் ஆபிஸ் செலவில் சாப்பிட்டு பழகிபோன இப்படித்தான்..அடிக்கடி நம்ம காசும் செலவு பண்ணனும் அப்பு....
//இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம், அதனால எல்லோருக்கும் டின்னர் கூப்பன் கொடுக்கப்போறோம்னு சொன்னாங்க, அடப்பாவிகளா இத கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னா என்னாங்கடா, சும்மா வந்த கூப்பனை ஏன் விடனும்னு அதையும் வாங்கி லபக்கியது சொல்லனுமா என்ன?.//
அதான நீங்க யாரு? சிரிலங்கன் விமானத்தையே ஓடவிடாமல் செய்தவர் ஆயிற்றே...
அங்கிருந்து வேறு ஒரு க்ரூப் இந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்னு ஒரு குண்டை போட்டாங்க, சில பேர் இங்கேயே விமானத்தை நிறுத்து நாங்க இறங்கிடுறோம்னு ஒரே சத்தம், இதற்க்கிடையே விமானம் 18,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.
நல்லாவே பழி வாங்கியிருக்காங்க போல...
எனக்கு பிடிக்காத விடயம், எனக்கு அருகில் இருந்த சக பயண நண்பர் டாக்டர். ராமச்சந்திரன் குடிக்கும் பழக்கம் இல்லாதவர், அதனால் சற்று நிம்மதி, அவரே ஆச்சரயப்பட்டார், "என்னங்க நம்ம மக்கள் இப்படி தண்ணியில நீந்துறாங்க". அதைவிட கொடுமை பாட்டில் பாட்டிலாக விமானத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு விலைக்கு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தான் சீரழிவது மாத்திரமல்லாமல் தனது குடும்பம், நண்பர்களையும் இப்படி அழிக்கிறார்களேன்னு என்னோடு சேர்ந்து ராமச்சந்திரனும் வருத்தப்பட்டார்.
இதையெல்லாம் போதை யோசிக்கவிடாதுப்பா...
இதற்க்கிடையே எனக்கு பின்னால் இருந்த ஒருவர், தனது கைப்பேசியை குடைந்து கொண்டு இருந்தார், அங்கே வந்த ஏர்ஹோஸ்டஸ் தயவு செய்த ஸ்விட்ச ஆஃப் செய்யுங்கள் என்றார், அவர் இல்லை நான் பிளைட் மோட்ல (Flight mode) தான் வச்சிருக்கேன், இதில எனக்குப் பிடித்த பாட்டுக்கள் இருக்கு அதைத்தான் நான் கேட்கிறேன், அதனால் ஒரு பாதகமும் இல்லைன்னு சொல்ல, உடனே அந்தப் பெண் தனது சூப்பர்வைசரை அழைத்து வந்து, ஒரு வழியாக விவாதித்து அவர் வாயையும், கைப்பேசியையும் மூடி விட்டுச் சென்றனர்.
படித்திருந்தால் போதுமா? அதை ஏன் வேண்டாம் என தடுக்கிறார்கள் என்ற சாதாரண விஷயம் கூடவா புரியாது என்னவோ பாட்டு இல்லைன்னா வாழவே முடியாது மாதிரி இல்லை கைப்பேசியோட பிறந்தவர் மாதிரி...
ஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு 10:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. நமது விமான நிலையத்தில் இருக்கும் ஏர்போர்ட் டேக்ஸி வசதி பாராட்ட்க்கூடியதே, வீட்டிலிருக்கும் யாருக்கும் தொந்தரவு தராமல், அங்கிருந்து மந்தைவெளிக்கு ரூ.450 கொடுத்தால், நல்ல தரமான குவாலிஸ் அல்லது சவேரா ஏ.ஸி. வண்டியில், அழகான முறையில் வீட்டுல கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். அப்பாடா வந்து சேர்ந்தாச்சுப்பா!!
எவ்வளவுதான் வசதியான் நாட்டில் வாழ்ந்தாலும் நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours!! இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே!! அது மருத்துவ வசதியாக இருக்கட்டும், குழந்தைகளின் படிப்பாகட்டும், அவர்களுக்குத் தேவையான பயனுள்ள புத்தகங்களாகட்டும், இந்த துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
இதுதாங்க இந்தியா...
சிரிலங்க்கா விமானத்தில் கொடுக்கும் சாப்பாடு நமதூர் சாப்பாட்டைப்போல காரசாரமாக சுவையாகவே இருந்ததது, அதுக்காக எக்ஸ்டரா மீல்ஸா கேட்க முடியும்
நீங்க இன்னும் திருந்தலையா?
சொல்லிட்டு போய் இருந்தா நான் நாலு புத்தகம் வாங்கிட்ட வர சொல்லி இருப்பேனே ?
பயணக்கட்டுரை ஜோர்.
ஷஃபி அண்ணா!!!!!!!!!!!
லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரை படித்தது போன்ற உணர்வு.அருமை நண்பா.
//தமிழரசி said...
ஒரு வேளை நீங்க விமானத்தில் ஏறுவதில் விமானத்துக்கு உடன்பாடு இல்லையோ?//
விமானத்தில் ஏற விடலைன்னா, இறக்கலையாவது உட்கார்ந்து வந்துருவோம்ல.
தமிழரசி said...
//மணி 11ம் ஆச்சு, சரியான பசி, ஏர்போர்ட்டில் இருக்கு ரெஸ்டாரன்ட்டில் ஒரு வெஜிடபில் பஃப்ஸ் 8 ரியாலுக்கும், ஒரு டீ 12 ரியாலுக்கும் வயிறு எரிய குடித்தோம், அந்த பாழாபோன டீக்கு எதுக்கு 12 ரியால் (கிட்டத்தட்ட 150 ரூபாய்) கொடுத்தோம்னு எனக்கு இன்னைவரை புரியலைங்க.//
//ஆமாம் எப்பவும் ஆபிஸ் செலவில் சாப்பிட்டு பழகிபோன இப்படித்தான்..அடிக்கடி நம்ம காசும் செலவு பண்ணனும் அப்பு....//
ஹலோ ஆபிஸ்ல மீட்டிங் இருந்தா தான் சாப்பாடு, ஆனா தினமும் மீட்டிங் இருக்கும், இல்லாட்டி வச்சுருவோம்ல, அதுவும் சரியா 12:30 ம்ணிக்கு!!
//நல்லாவே பழி வாங்கியிருக்காங்க போல..//
இந்த நேரத்தில மிஸ்டர் பீன்ஸ் படத்தை வேறு பெரிய திரையில் போட்டு காட்டி, அங்கே இருந்த எல்லொரையும் காமடியன்களா ஆக்கிட்டாங்க, நம்ம மக்களும் அத பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இடுக்கண் வருங்கால் நகுக, சரியான பழமொழிதான்.
//இதுதாங்க இந்தியா...//
அப்பா தமிழ் டீச்சர் கூல் டவுன் ஆயிட்டாங்க!!
//நாஸியா said...
அட! எல்லாரும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நல்லா இருக்கும்னுலோ சொன்னாங்க.. நல்ல வேளை//
இப்பவும் நன்றாகவே இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க, ஆனா என்னோட பேவரைட் எமிரேட்ஸ் தான்!!
//நசரேயன் said...
சொல்லிட்டு போய் இருந்தா நான் நாலு புத்தகம் வாங்கிட்ட வர சொல்லி இருப்பேனே ?//
அடுத்த முறை போகும் முன் தபால் போடுறேன் தலைவரே!!
// அன்புடன் மலிக்கா said...
பயணக்கட்டுரை ஜோர்.
ஷஃபி அண்ணா!!!!!!!!!!//
அப்படியா அக்கா, நன்றி!!
// பேனாமுனை said...
லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரை படித்தது போன்ற உணர்வு.அருமை நண்பா.//
பாராட்டுக்கு நன்றி நண்பரே, நான் அவ்ளோ பெரிய ஆள் இல்லைங்க, சிறிய மாணாக்கன், கற்க வேண்டியவை நிறைய இருக்கு.
//கேப்டன் பெயரு ஷஃபி//
ஏன் வரும் வழியெல்லாம் மொக்கை போட்டு கொண்டே வந்தாரா ? ஹ ஹ ஹா...சும்மா :-)
நல்ல பகிர்வு, எனக்கும் அரபு நாடுகளை விடுமுறைக்கு குறிப்பாக துபாய் சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை!
வயிறு எரிய குடித்தோம்,]]
ஹா ஹா ஹா
வயிறு எரிக்க தானே குடிக்கிறீங்க ...
அதுசரிதான், சவூதியில கலர் பாத்தா கண்ணை நோண்டிடுவாங்கல்ல; அதனால் சென்னைதான் பெஸ்ட்!]]
நீங்க நல்லவங்களா
ரொம்ப நல்லவங்களா ஹூஸைனம்மா
//நட்புடன் ஜமால் said...
நீங்க நல்லவங்களா
ரொம்ப நல்லவங்களா ஹூஸைனம்மா //
என் ப்ரொஃபைல் படத்தைப் பாத்தீங்கள்ல, வாத்துப்படம்.. ரொம்ப அப்பாவிங்க நானு!!
ஹுஸைனம்மா said...
என் ப்ரொஃபைல் படத்தைப் பாத்தீங்கள்ல, வாத்துப்படம்.. ரொம்ப அப்பாவிங்க நானு!
குவா குவான்னு கத்திக்கிட்டே இருக்குமே அந்த வாத்தா?
ஒரு வேளை நீங்க விமானத்தில் ஏறுவதில் விமானத்துக்கு உடன்பாடு இல்லையோ?
//////
double repatuuu
//கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு, அவர் அறிவிப்பு செய்த விதம் அருமையா இருந்ததது//
Self Govindha SUPER
But very interesting Post
//சிங்கக்குட்டி said...
நல்ல பகிர்வு, எனக்கும் அரபு நாடுகளை விடுமுறைக்கு குறிப்பாக துபாய் சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை!//
ட்ரான்ஸிட் விசா இலகுவாக கிடைக்கும் நண்பரே.
//ஹா ஹா ஹா//
சிரிப்பை சிந்திட்டிங்க ஜமால், நன்றி!!
//Annam said...
//////
double repatuuu//
இதைக் கேட்டு தமிழ் டீச்சருக்கு மகிழ்ச்சியா இருக்குமே!!
//அருள்மொழியன் said...//
Self Govindha SUPER
But very interesting Post//
வருகைக்கும் ரசித்தற்கும் நன்றி அருள்!!
// சென்ற வாரம் சென்னைக்கு ஒரு துரிதப் பயணம், //
துரிதப் பயணமா... இந்த இடுகையைப் படிச்சபின்னாடி அது துரிதப் பயணமில்லை, துயரப் பயணம்.
// முன்பு எமிரேட்ஸினால் நிறுவகிக்கப்பட்டது //
எமிரேட்ஸ் ? நான் பட்ட கஷ்டம் எனக்குத்தாங்க தெரியும்...
சென்னை - துபாய் - லாகோஸ் - டெக்னிக்கள் ப்ராப்ளம் அப்படின்னு சொல்லி, மறு நாள்தான் கிளம்ப முடிஞ்சது..
// இது போன்று கோளாறுகளுக்கு சரியான Planned Maintenance இல்லைன்னு நினைக்கிறேன். //
விமானத்தில் ஏறி, போய் சேரவேண்டிய இடத்தில் பத்திரமாக போய் சேர்ந்தால், நாம் செய்த புண்ணியம் அப்படின்னு சொல்லலாம்.
// பத்து நிமிடம் கழிச்சு ஒரு ஆள் வந்து விமான் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம், அதனால எல்லோருக்கும் டின்னர் கூப்பன் கொடுக்கப்போறோம்னு சொன்னாங்க, அடப்பாவிகளா இத கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னா என்னாங்கடா, //
எத்தன வருஷமா விமான பயணம் செய்யறீங்க... விமானம் லேட்டானா, கூப்பன் கொடுப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?
// அறிவிக்கும்போது 39,000 அடி உயரத்தில் பறக்கும்னு சொன்னாங்க, ஆனா ஒரு சில நிமிடங்களே அந்த உயரத்தை தக்க வைக்க முடிந்தது, தடாலென 28,000 அடியிலேயே ஓட்டினார்கள்,//
நீங்க சொல்வதைப் பார்த்தால் ஓசியில கொடுத்தாலும், ஸ்ரீலங்கா விமானத்தில் பயண செய்யவே பயமா இருக்கு.
ஹை.. மீ த 50
// இராகவன் நைஜிரியா said...
எமிரேட்ஸ் ? நான் பட்ட கஷ்டம் எனக்குத்தாங்க தெரியும்...
சென்னை - துபாய் - லாகோஸ் - டெக்னிக்கள் ப்ராப்ளம் அப்படின்னு சொல்லி, மறு நாள்தான் கிளம்ப முடிஞ்சது..//
அப்படியா, எல்லாப் பசங்களும் இப்புடிதானுஙகளா?
//எத்தன வருஷமா விமான பயணம் செய்யறீங்க... விமானம் லேட்டானா, கூப்பன் கொடுப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?//
இது வரை இப்படி ஒரு அனுபவம் இல்லைங்க, ஆனால் ஏர்லைன்ஸ் அலுவலர்களுக்கே தெளிவா எப்போ நிலமை சரியாகும் சொல்லத்தெரியாமல், இன்னும் அரை மணி நேரம், ஒரு மணி நேரமுனு சொல்லி காலத்தை கடத்தினாங்க...(ஸ்ஸ்ஸ்...அப்பா)
//இராகவன் நைஜிரியா said...
ஹை.. மீ த 50//
நன்றி அண்ணே!! வந்து நாலு போடு போட்டதுக்கு.
Nalla enjoy panniyirukkingka!!!!!
/கேப்டன் பெயரு ஷஃபி,.... நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.//
இதெல்லாம் ரொம்ப ஓவர்.ஹி...ஹி..!!
நல்லா எஞ்சாய் பண்ணிங்களா...
மந்தவெளி போகும் வழியில் என் வீட்டைத் தாண்டி சென்றிருக்கிறீர்கள்
கோமா அக்கா வீட்டில் தலையைக் காட்டியிருக்கலாமே
ஓகே அடுத்த தபா வரப்போ சொல்லுங்க.
//ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு
இது சரியான காமடி hi hi
ஷபிக்ஸ் நீங்கள் சென்னை மந்த வெளியிலா இருக்கீங்க.
ரொம்ப அருமையான அனுபவ பகிர்வு, படிக்க படிக்க ரொம்ப ஸ்வாரஸியமா இருந்தது.
@Suvaiyaana Suvai
மிக்க மகிழ்ச்சி சாருஸ்ரி
@Mrs.Menagasathia said...
ஹி...ஹி..!! நன்றி
@goma said...
அடுத்த முறை நர்சுஸ் காபி போட்டு குடிச்சுட்டு போறேன்மா.
@Jaleela said...
வந்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றி, ஆமாம் மந்தைவெளி.
Post a Comment