|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 12:30 PM

தீர்வு

Filed Under () By SUFFIX at 12:30 PM


சின்ன வயசு
சிகரெட் ஆசை
சிறிதாய் சீண்ட‌
சுலபமாய் பற்றியது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

மதுப் பழக்கம்
மதி மயக்குமாமே
மெதுவாய்‌ தீண்ட‌
அதுவாக தொடர்ந்தது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

எல்லை மீறிய இன்பம்
பகலும் இரவானது
சிந்தையில்லாமல் சிந்தி
சில்லரையும் கரைந்தது‌
நல்ல வேளை
யாரும் காணவில்லை

சின்ன வயசு
அழுது புலம்பும் அம்மா அப்பா
அசையா உடல் கண்டு
அதிர்ந்தது பலர் நெஞ்சம்

நல்ல வேளை
நான் அங்கு இல்லை!!
---------------------------------------
அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
WISH YOU ALL A HAPPY, HEALTHY & PROSPEROUS NEW YEAR!!


36 comments

நட்புடன் ஜமால் on December 30, 2009 at 9:48 AM  

நல்ல வேலை ...


நட்புடன் ஜமால் on December 30, 2009 at 9:57 AM  

திருந்த தேதி தேடாதீங்க

இக்கணமே ...

இருப்பினும் நல் விடயங்கள் ஷஃபி.


Anonymous on December 30, 2009 at 10:38 AM  

நச்சுன்னு நறுக்கு தெரித்தது போல இருந்தது கவிதை....


இராகவன் நைஜிரியா on December 30, 2009 at 10:58 AM  

அருமை.. அருமை...

கீப் இட் அப்.


பீர் | Peer on December 30, 2009 at 11:03 AM  

:)


Annam on December 30, 2009 at 11:25 AM  

boss ungalukku enna aachu nalla thaana iruntheenga ...orey kavithai mazhaiya irukkey


Annam on December 30, 2009 at 11:26 AM  

sooperuuuu kavithai sooperuuu


Annam on December 30, 2009 at 11:28 AM  

Wishing u also a veryyyyyyyyyyyyyyyyyyyy veryyyyyyyyyyyyyyy happy 2010


Jaleela on December 30, 2009 at 11:49 AM  

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

//நல்ல வேளை நீங்கள் அங்கு இல்லை//


MAK on December 30, 2009 at 1:58 PM  

மிக அருமையான கவிதை. எப்படி......???


S.A. நவாஸுதீன் on December 30, 2009 at 2:46 PM  

ஷஃபி,

ஹ்ம்ம். சரி சரி சரி.........

நானும் இல்லை


அக்பர் on December 30, 2009 at 3:58 PM  

எப்படி இப்படியெல்லாம், முடியலை.

புத்தாண்டு வாழ்த்துகள் ஷஃபி.


நசரேயன் on December 30, 2009 at 7:00 PM  

நல்லா இருக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Mrs.Faizakader on December 30, 2009 at 8:27 PM  

அருமையாக இருக்கு. ஷாபி
"அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"


அபுஅஃப்ஸர் on December 30, 2009 at 9:57 PM  

கடைசிலேதான் ட்விஸ்டே

கலக்கல் தல‌

அனைவருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


ஹுஸைனம்மா on December 31, 2009 at 9:37 AM  

நல்லாருக்கு. ஆனா கடைசி சில வரிகள் புரியலை. (வழக்கம்போல!!)

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

கும்மி ரொம்ப குறைவா இருக்கு? எல்லாரும் புது வருஷ பார்ட்டில பிஸியோ?


அ.மு.செய்யது on December 31, 2009 at 12:38 PM  

நல்ல கவிதை ஷஃபி...தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

கவிதையின் கரு நன்றாக வந்திருக்கிறது.வார்த்தைப் பிரயோகத்தில் கொஞ்சம் சிரத்தையெடுத்தால் இன்னும் மெருகேற்றலாம்.

வாழ்த்துக்கள் !!!


" உழவன் " " Uzhavan " on December 31, 2009 at 12:45 PM  

நல்ல வேளை என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம்.. நன்று
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


ஸாதிகா on December 31, 2009 at 12:50 PM  

அருமை,அருமை.நெஞ்சைதொட்டது கவிதை.


அக்பர் on December 31, 2009 at 10:30 PM  

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


goma on January 2, 2010 at 1:26 PM  

நச்சினை விட்டு விடச் சொல்லி நச்சுன்னு ஒரு கவிதை எழுதீட்டீங்க...
அருமை


எம்.எம்.அப்துல்லா on January 2, 2010 at 7:58 PM  

இந்த புத்தாண்டு எல்லாவகையிலும் உங்களுக்குச் சிறக்க என் துவா.


Mythreyi Dilip on January 2, 2010 at 8:46 PM  

Thats a good one, appreciated.....


Adirai Express on January 3, 2010 at 9:36 AM  

அஸ்ஸலாமு அழைக்கும்,
நான் மன்சூர், தொடர்ந்து மூன்று நாளாக இந்த பிளாகை படித்து ரசித்து கொண்டிருக்கிறேன், மூணு நாளைக்கு முன்னாடிதான் உங்களோட வலைப்பதிவை பற்றி M .A .K யின் வலைப்பதிவின் மூலமாக தெரிந்துக்கொண்டேன், மிக நன்றாகஉள்ளது


SUFFIX on January 3, 2010 at 11:12 AM  

நன்றி @ நட்புடன் ஜமால் (உண்மையே)

நன்றி @ தமிழரசி (அப்படியா)

நன்றி @ இராகவன் நைஜிரியா (ஓ.கே. அண்ணே)

நன்றி @ பீர் :)

நன்றி @ Annam (டேங்க்சூ)

நன்றி @ Jaleela (மிக்க மகிழ்ச்சி)


SUFFIX on January 3, 2010 at 11:15 AM  

நன்றி @ MAK

நன்றி @ S.A. நவாஸுதீன் (நம்பிட்டேன்)

நன்றி @ அக்பர்

நன்றி @ நசரேயன்


SUFFIX on January 3, 2010 at 11:25 AM  

நன்றி @ Mrs.Faizakader

நன்றி @ அபுஅஃப்ஸர் (மகிழ்ச்சி தல‌)

நன்றி @ ஹுஸைனம்மா (தன்னடக்கம்னா உங்க கிட்டே தான் கத்துக்கணும்)

நன்றி @ அ.மு.செய்யது (ஆமாம் செய்யது, இன்னும் முயற்சி செய்து இருக்கலாம்)

கருத்துக்கு நன்றி @ உழவன்

நன்றி @ ஸாதிகா

நன்றி @ goma (தங்களது கவிதைகளும் பதிவுகளில் ஜொளிக்கிறதே, கீப் இட் அப்)

நன்றி @ எம்.எம்.அப்துல்லா (மகிழ்ச்சி நண்பரே)


SUFFIX on January 3, 2010 at 11:28 AM  

Thanks @ Mythreyi Dilip (Appreciate your visit)


SUFFIX on January 3, 2010 at 11:31 AM  

நன்றி @ Adirai Express (வலைக்குமுஸ்ஸலாம் மிக்க மகிழ்ச்சி மன்சூர்)


அன்புடன் மலிக்கா on January 3, 2010 at 1:43 PM  

"அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நல்ல வேலை:
அருமை.. அருமை...


அன்புடன் மலிக்கா on January 4, 2010 at 1:49 PM  

http://fmailkka.blogspot.com/

இதையும் கொஞ்சம் பாருங்கள் ஷபியண்ணா


Chitra on January 5, 2010 at 9:22 AM  

கலக்கல் கருத்து உள்ள கவிதை. அருமையாய் எழுதி இருக்கீங்க, நண்பா..... follow பண்றேன்.


சிங்கக்குட்டி on January 5, 2010 at 5:05 PM  

அ..ஆ...ஆ....அபிராமி அபிராமி கவிதை கவிதை சூப்பர் :-)


SUFFIX on January 6, 2010 at 3:51 PM  

நன்றி @ அன்புடன் மலிக்கா (தாங்களின் புதிய வலைதளம் அருமை, தொடருங்கள்)

நன்றி @ Chitra (சங்கத்தில் சேர்ந்ததற்கு ஸ்பெஷல் டேன்க்ஸ்)

நன்றி @ சிங்கக்குட்டி (யாருங்க அந்த அபிராமி)


பா.ராஜாராம் on January 10, 2010 at 1:48 PM  

அருமையான கவிதை!

புத்தாண்டு வாழ்த்துக்கள் சபி!


SUFFIX on January 11, 2010 at 4:39 PM  

//பா.ராஜாராம் said...
அருமையான கவிதை!

புத்தாண்டு வாழ்த்துக்கள் சபி!//

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்!!