கண்டதும் கேட்டதும் (16.12.2009)
வங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள் வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு மூடிடுவாங்களாம்.
வட்டி ஒரு நச்சு, உயிர்க்கொல்லி, ஏன் இந்தப் பெரியவர் தனது பணத்தை அவசியில்லாமல் ஒரு நாள் தாமத்திற்காக இழக்க வேண்டும், நான் இழப்பதோ அரை மணி நேரந்தான், சில வினாடிகள் சிந்தனை ஓடியது, "அய்யா இப்படி வந்து என்னோட இடத்தில் நில்லுங்க, எனக்கு அவசரமா பணம் கட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை, நான் நாளைக்கு கூட வந்து கட்டிக்குவேன், நீங்க அமைதியா நின்னு உங்க பணத்தைக் கட்டிட்டு போங்க". அவரை அங்கே நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியில் அங்கிருந்து அலுவலகம் திரும்பினேன்.
மணி 5 ஆகி விட்டது, இன்றைக்கு புதிய பதிவுலக நண்பர் ரமேஷ் தனது வீட்டிற்க்கு அழைத்திருந்தார், 6 மணிக்கு அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தது, என்னைவிட மூன்று வருடங்கள் மூத்த்வர், நல்ல பண்பான மனிதர்.
சொன்ன சமயத்திற்க்குள் ரமேஷ் வீட்டை அடைந்து விட்டேன், அழைப்பு மணி அடித்து, கதவை திறந்ததும் ஆச்சர்யம், வங்கியில் சந்தித்த அந்தப் பெரியவர் ரமேஷ் வீட்டில்,
"அய்யா நீங்களா?",
"அட வாங்க தம்பி, உள்ளே வாங்க, நாம் இவ்ளோ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை",
அப்போ ரமேஷ்?,
"அவன் என்னோட பையன் தான், உங்களுக்கு அவன தெரியுமா?",
"ஏம்மா இங்க வா யாரு வந்திருக்காங்க பாரு",
"இப்படி உக்காருங்க தம்பி", பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.
"இவருதான் பேங்க்கில இன்னக்கி உதவி செய்தவர்மா"
கண்டதும் கேட்டதும் (10.12.2009)
வானம் 10.12.2009
வானம் 08.12.2009
சரியாக 11:30 மணிக்கு குவைத்திலிருந்து விமானம் புறப்பட்டது, அறிவிக்கும்போது 39,000 அடி உயரத்தில் பறக்கும்னு சொன்னாங்க, ஆனா ஒரு சில நிமிடங்களே அந்த உயரத்தை தக்க வைக்க முடிந்தது, தடாலென 28,000 அடியிலேயே ஓட்டினார்கள், இன்ஜின் திறம் அவ்வளவு தான் போல, அதனால் வேகமும் குறைவாகவே இருந்தது, மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டரே செல்ல முடிந்தது, இதுவே எமிரேடஸாக இருந்தால் வேகத்தை நிச்சயமாக கூட்டி இருப்பார்கள்.
ஏர்லன்ன்காவின் ஸ்பெஷல் மதுவினை அந்த மாதுக்கள் அளவில்லாமல் ஊற்றிக் கொடுப்பது தானாம், எனக்கு பிடிக்காத விடயம், எனக்கு அருகில் இருந்த சக பயண நண்பர் டாக்டர். ராமச்சந்திரன் குடிக்கும் பழக்கம் இல்லாதவர், அதனால் சற்று நிம்மதி, அவரே ஆச்சரயப்பட்டார், "என்னங்க நம்ம மக்கள் இப்படி தண்ணியில நீந்துறாங்க". அதைவிட கொடுமை பாட்டில் பாட்டிலாக விமானத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு விலைக்கு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தான் சீரழிவது மாத்திரமல்லாமல் தனது குடும்பம், நண்பர்களையும் இப்படி அழிக்கிறார்களேன்னு என்னோடு சேர்ந்து ராமச்சந்திரனும் வருத்தப்பட்டார்.
இதற்க்கிடையே எனக்கு பின்னால் இருந்த ஒருவர், தனது கைப்பேசியை குடைந்து கொண்டு இருந்தார், அங்கே வந்த ஏர்ஹோஸ்டஸ் தயவு செய்த ஸ்விட்ச ஆஃப் செய்யுங்கள் என்றார், அவர் இல்லை நான் பிளைட் மோட்ல (Flight mode) தான் வச்சிருக்கேன், இதில எனக்குப் பிடித்த பாட்டுக்கள் இருக்கு அதைத்தான் நான் கேட்கிறேன், அதனால் ஒரு பாதகமும் இல்லைன்னு சொல்ல, உடனே அந்தப் பெண் தனது சூப்பர்வைசரை அழைத்து வந்து, ஒரு வழியாக விவாதித்து அவர் வாயையும், கைப்பேசியையும் மூடி விட்டுச் சென்றனர்.
மாலை 6 மணிக்கு கொழும்பு சென்றைடைந்தது, பச்சைப் பசேலன அருமையான ஊர், விமான நிலையத்தின் அமைப்பு துபாய் விமான நிலையத்தினைப் போலவே இருந்தது, ஒரே ஆள் தான் கட்டியிருப்பாரோ? ரொம்ப யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை, சென்னைக்கு விமானம் புறப்படத்தயார இருக்கு உடனே போங்கன்னு விரட்ட, வேகமாக ஓடி துண்டை போட்டாச்சு, பாவம் திருச்சிக்காரங்க, அவங்களுக்கான இணைப்பு விமானம் அடுத்த நாள் தானாம், அதனால் அவ்ங்க மறுபடியும் கொழும்பில் ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம். எத்தனை உறவினர்கள் அங்கே விமான நிலையத்தில் இவர்களின் வருகைக்காக காத்து கிடக்கிறார்களோ.
விமானம் சென்னை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படது, ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு, அவர் அறிவிப்பு செய்த விதம் அருமையா இருந்ததது, அதாவது விமானம் நகர்ந்து 15 நிமிடம் வரைக்கும், அது போல தரையிறங்கும் முன் 15 நிமிடம் வரைக்கும் தங்களது கைப்பேசிகளை அமர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார், இது விளக்கமான அறிவிப்பு, முன்னர் குவைத் - கொழும்பு பயணத்தில் நடந்த விவாதம் தேவையில்லாதது எனப் புரிந்தது. ஆமா நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.
ஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு 10:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. நமது விமான நிலையத்தில் இருக்கும் ஏர்போர்ட் டேக்ஸி வசதி பாராட்ட்க்கூடியதே, வீட்டிலிருக்கும் யாருக்கும் தொந்தரவு தராமல், அங்கிருந்து மந்தைவெளிக்கு ரூ.450 கொடுத்தால், நல்ல தரமான குவாலிஸ் அல்லது சவேரா ஏ.ஸி. வண்டியில், அழகான முறையில் வீட்டுல கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். அப்பாடா வந்து சேர்ந்தாச்சுப்பா!!
எவ்வளவுதான் வசதியான் நாட்டில் வாழ்ந்தாலும் நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours!! இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே!! அது மருத்துவ வசதியாக இருக்கட்டும், குழந்தைகளின் படிப்பாகட்டும், அவர்களுக்குத் தேவையான பயனுள்ள புத்தகங்களாகட்டும், இந்த துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மைலாப்பூர் குளத்தை சுற்றி இருக்கும் கடைகளை ஒரு வலம் வந்தால் போதும் சவூதியில் கிடைக்காத அனைத்து பொருளும் விலை மலிவாகவும், தரமானதாகவும் வாங்கி விடலாம். (கோணார் நோட்ஸோ, பட்டுப்புடவையோ, கெட்டி உருண்டையோ - everything available).
அதிர்ஷ்டவசமாக சென்னையிலிருந்து திரும்பிய பயணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நன்றாகவே இருந்ததது, ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும், சிரிலங்க்கா விமானத்தில் கொடுக்கும் சாப்பாடு நமதூர் சாப்பாட்டைப்போல காரசாரமாக சுவையாகவே இருந்ததது, அதுக்காக எக்ஸ்டரா மீல்ஸா கேட்க முடியும்!!
பதிவுலக நண்பர் மாதவராஜ் துவக்கி வைத்து, உலகமெங்கும் சுற்றும் இந்த தொடர் பதிவில் என்னையும் மாட்டி விட்ட நவாஸ் அவர்களுக்கு நன்றி, இதோட விதிமுறைகள் இப்போ எல்லோருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.
இதோ எனது பத்துக்கு பத்து:
1. அரசியல்
பிடித்தவர்கள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)
பிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு
2. எழுத்து :
பிடித்தவர்கள்: சுஜாதா, பாலகுமாரன் (கல்லூரி நாட்களில் நிறைய படித்ததுண்டு)
பிடிக்காதவர்: அப்படின்னு சொல்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க
3.திரைப்பட பாடலாசிரியர்கள்:
பிடித்தவர்கள் : வைரமுத்து (எப்போதும்), டி. ராஜேந்தர் (அப்போது)பிடிக்காதவர் : குத்துப்பாடல்கள் எழுதும் யாவரும்
4.நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி
5. நடிகர்
பிடித்தவர்: கமல்
பிடிக்காதவர்: சிம்பு
6. நடிகை
பிடித்தவர் : நதியா (அப்போது)
பிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே
7.தொழில் அதிபர்கள்
பிடித்தவர்கள்: இரா. க. சந்திரமோகன் (அருன் ஐஸ் கிரீம்ஸ்), முகமது மீரான் (ரேனால்ட்ஸ் பேணா) உழைப்பாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்தவர்கள்
பிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுரண்டுபவர்கள்
8. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க
9. பதிவுலகம்
பிடித்தது: புதியவர்கள், புதுமைகள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.
பிடிக்காதது: அவசியமில்லாத தனிமனித தாக்குதல்கள், தேவையில்லாத விவாதங்கள்
10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்
ஊர் வழக்கப்படி இதை விட கலக்கலா பதிவினை தொடரும்படி நல்ல நண்பர்கள் சிலரை அழைக்கணுமாம்.
நான் அழைக்கப்போவது:
அன்பின் அண்ணன் இராகவன் நைஜீரியா
சமையலை பிடிபிடின்னு பிடிக்கும் ஜலீலா அக்கா
கோவச்சுக்காம பதிலளியுங்க ப்ளீஸ்.........
ஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:
உலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.
சக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.
எறும்பெ பார்த்தாவது எழும்புங்க!!
ஆமா, நாம எல்லோரும் எறும்பு மாதிரி இருக்கணுமாம், குறுகுறு..துறுதுறுன்னு, இதை நான் சொல்லலை, பிரபல எறும்பியல் வல்லுணர் சொன்னதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். பாருங்க ஒருத்தர் எறும்பு பின்னாடியே போய் அதுக என்ன செய்யுதுன்னு பார்த்து, அதை எல்லாம் நமக்கு விளக்கமா சொல்லி இருக்கிறார். எறும்புங்களுக்கு நான்கு வகையான அபார குணம் இருக்காம். முதலாவது, அதுங்க எல்லாம் மேல ஏறும், கீழ இறங்கும், அப்படி போவும், இப்படி போவும், ஆமா, அது எங்க போகனும்னு நினைச்சுதோ அங்கே போயே தீரும், வச்ச குறி தப்பாது.
இரண்டாவது அதுங்க என்ன செய்யும்னா, கோடை காலத்தில குளிர் காலத்த்ற்க்கான தயாரிப்புகள செய்யும், ஆமா எப்படியோ கோடை முடிஞ்சுறும், அப்புறம் குளிர் காலத்தில அவ்ளோ சுலபமா வெளிய போய் சுற்றித் திரிந்து சாப்பிட முடியாது, அதனால அதுங்க முன் கூட்டியே ரொம்ப சமத்தா யோசிச்சு குளிர் காலத்துக்காக தயார் ஆயிடுமாம்.
மூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம், அட எங்கே தான் இருக்கோ மூளை இதுங்களுக்கு, இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்குதய்யா!! இம்பூட்டு பெரிய மூளைய வச்சு நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கிங்களா? சரி, விஷயத்துக்கு வருவோம், ஆமாங்க, இந்த குளிர் காலம் சீக்கிரம் முடிஞ்சிடும்,அதனால் உள்ளேயே முடங்கி கிடக்காம, அப்ப்போ வெளிய வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போவுமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சா, குளிர் குறஞ்சி இருக்கான்னு ஆய்வு செஞ்சுக்கிட்டே இருக்குமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சது நம்மளுக்கு தெரியுதோ இல்லையோ, நம்ம எறும்புக்கு தெரிஞ்சு, தூங்க்கிட்டு இருக்கிற நம்ம பயபுல்லைங்க காலர்ல இழைஞ்சு வந்து எழுப்பிடும். அவ்ளோ உஷார்!!
நாலாவதும், முக்கியமானதும், இதையாவது கவனமா படிங்க, கோடை காலத்தில் எவ்ளோதான் அதுங்க சேர்த்து வைக்கும்? "எவ்ளோ கூடுதுலா முடியுமோ அவ்ளோ" ஆமா "All that possible they can".
பாருங்க ஒரு சின்ன எறும்பு சின்ன மூளைய வச்சு என்னனென்ன டகாலகடி வேலையெல்லாம் செய்யுது. நீங்க என்ன செய்யப் போறீங்க, ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு!!
டிஸ்கி : NEVER GIVE UP, LOOK AHEAD, STAY POSITIVE AND DO ALL YOU CAN!!
சில கணம்
விலகியும் விடாமல்
படரும்
வியப்பு!!
கண்களில் பட்ட
கணப் பொழுதினில்
மின்னி மறைந்ததில்
ஏதோ
தவிப்பு!!
சில்லரையாய்
வந்த செவ்வொலி
கேட்டு சட்டென
எங்கும்
சிலிர்ப்பு!!
கண்டும் காணாமலும்
கனவிலறங்கி
குளிர்ச்சியாய்
பல
கணிப்பு!!
தித்திக்கும் நினைவு
திகட்டாத
இன்பத்தேண்
அதன்
இனிப்பு!!
மனத்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!
உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!
அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!
இந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா? அப்படின்னா இத படிக்காதீங்க!!
- நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
- ஏதாச்சும் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்!!
- நீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.
- நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு!!
- நீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா? ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.
- பாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.
- நீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.
- நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!
- நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
- நீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.
சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?, வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:
- வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).
- எதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).
- தலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).
- தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).
- நான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).
- தனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).
- ஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பணியினைச் செய்வார் (Appreciation).
- திறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).
- தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும் (Share the goals).
- சலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).
ஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு. GOOD LUCK!!
அப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று சிந்திப்போமே!!
- வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.
- எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.
- மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.
- புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.
- தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.
- கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.
- வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.
- காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.
- நேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம்!! பணப்புழக்கம் காரணமோ? அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.
- பிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல்? நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.
என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த சகோதரிகள் திருமதி. பாய்ஜா அவர்களுக்கும், ஜலீலா அவர்களுக்கும் நன்றி, இதோ தங்களுடன் பகிர்ந்து கொள்ள அ முதல் ஃ!!
அன்பு - ஆக்சிஜன்
ஆரோக்கியம் - மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என்றும் முழுமையாக நிலைத்திட ஆவல், பிராத்தணைகள்.
இன்றியமையாதது - படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.
ஈகை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.
உழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை
ஊர்வம்பு - கால விரயம்
எதிர்பார்ப்பினை குறைத்து ஏமாற்றத்தினை தவிர்க்கலாம்.
ஐங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து
ஒற்றுமை எப்பொழுதும் எவருடனும்.
ஓய்வு - உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது.
ஒளடதம் : அழகிய புன்னகை
ஷஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!
இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.
அயல் நாடு சென்று, இந்தியா நாட்டில் நீங்கள் இழந்தது என்ன? அங்கு அடைந்தது என்ன?
அடிக்கடி எனக்குள் கேட்டு விடை தெரிந்தும் தெரியாதது போல் பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.
இந்தக் கேள்விக்கான விடையை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோழி தமிழ் அரசியின் விண்ணப்பம். தமிழரசி, தீக்குள் விரல் வைத்து, மகா கவி பாரதியுடன் விவாதித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியதை போல என்னால் முடியாவிட்டாலும், முயற்சி செய்து இருக்கின்றேன், படித்து பாருங்களேன்.
சரி வேலைக்கு போக வேண்டியது தான், அப்ப்டியே மேற்க்கொண்டு படிப்பதானால் பிறகு படித்துக் கொள்வோம் என வேலை தேடும் படலம் தொடங்கியது.
நாட்கள் உருண்டோடியது, ஒரு நாள் என் நெருங்கிய நண்பனிடமிருந்து அழைப்பு, அவனுக்கு திருமணமாம், எப்படியாவது வந்து கலந்துக்கொள் என பிடவாதமான வேண்டுகோள், ஆம், சோழனிலும், பல்லவனிலும் ஒன்றாய் சுற்றித்திரிந்து, வீட்டிலிருக்கும் நேரம் போக இது போன்ற நட்புக்களுடேனேயே கழித்த நாட்கள் மறக்க முடியுமா என்ன? வாழ்வின் முக்கியமான நிகழ்வு, மாப்பிள்ளைத் தோழனாய் நான் இருந்திருக்க வேண்டும், ஆனால் எனை அறியாமல் அவனது திருமணமும் நடந்தது, அவனும் சில மாதங்களில் அமேரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பயணம், ஆக அவனை கல்லூரி நாட்களில் சந்தித்தது.
அடுத்த சில மாதங்களில் என்னை அருமையோடு, அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்த தாத்தா, பாட்டி இவ்வுலகத்திலிருந்து பிரிந்தது, அவர்கள் எனக்காக செய்த பிராத்தணைகள், தியாகங்கள் இவையெல்லாம் இனி கிடைக்குமா? பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.
இதனை அடுத்து பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது.
தமிழரசி கொடுத்த தலைப்பினை, எனது மனைவியிடத்திலும் காட்டினேன், அவர்களும் தன் பங்குக்கு கூறிய பல விடயங்களில், சில:
குழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.
மருத்துவ வசதிகள், நாம் நாட்டைப்போல திறமையான மருத்துவ வசதியை வேறு எங்கும் பெற முடியுமா?
ஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!!
இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!
இன்னும் வளர்க்க விரும்பவில்லை, ஏற்கனவே தாமதம் என தமிழ் டீச்சர் கோபத்தில் இருக்காங்க, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இது போதுமென்று நினைக்கின்றேன்.
மிக்க நன்றி அரசி!!
நன்றிகள் நட்புக்களே!!
எண்ணங்களில் கண்டு மகிழ்ந்து
தேன்மொழிகள் உண்டு களித்து
தேடுதலில் தீண்டி உணர்ந்து
காடு, கடல், மலை கடந்து
காற்றில் வரும் அவள் சுவாசம் நுகர்ந்து
ரகசியமாய் அகமகிழ்ந்து
சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து
அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!
இதோ,
மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
'அவள்' செய்த
மற்றுமொரு மாயையிது!!
Think before Ink - கொஞ்சம் யோசிப்போமே
இயற்க்கையென்றாலே பசுமையல்லவா? ஏன் நமது வலைப்பூவே நாம் நினைத்த நல்ல கருத்தை நமது நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, என சிந்தித்ததே இந்த பசுமை நிறமும், பக்கத்தில் காணும் சிறு படங்களும், குறுந்தகவல்களும். (ரொம்பவே யோசிக்கிறாங்கய்யா).
இது என்ன ஒரு தாள் தானேன்னு நினைத்து நாம இஷ்டத்திற்க்கு அடித்தும், கிழித்தும் தள்ளுகிறோம், ஆனால் இதன் பின்னனியில் நமது நிறுவனத்திற்க்கு விழைவிக்கும் நஷடங்களையோ, நமது சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதகங்களையோ நாம் சிந்திப்பதேயில்லை.
சிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் சர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள். இதனால் எத்தனை நஷ்டம், என்ன நம்ம வீட்டு பணமா போகப்போகிறது என அவர்களுக்கு நினைப்பு!! (இனிமேலாவது திருந்துங்களேன்...)
சமீபத்தில் அமேரிக்காவில் எடுத்த ஆய்வினில் கண்ட சில புள்ளி விவரங்கள்:
- ஒரு காகித்தின் விலை ஒரு ரூபாய் என்றால் அதனை அச்சிடுதல், நகல் எடுத்தல், வினியோகித்தல், பத்திரப்படுத்துதல் போன்ற சங்கிலித்தொடர்பான செலவுகளே முப்பது மடங்கு ஆகிறதாம்.
- சராசரியாக ஒரு ஊழியர் ஒரு வருடத்திற்க்கு பத்தாயிரம் காகிதங்கள் உபயோக்கின்றாராம்.
- அமேரிக்காவில் மட்டும் வருடத்திற்க்கு 3.7 மில்லியன் டன் காகிதங்கள் அலுவலகங்களில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது.
- காகித் தொழிற்ச்சாலைகளுக்கு மட்டும் 12 சதவிகதம் எரிபொருள் செலவு செய்யப்படுகிறதாம்.
- ஒரு காகிதம் தயாரிக்க ஒரு குவளை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.
- சிட்டி குரூப் நிறுவனம், இனி பிரின்ட் அல்லது நகல் எடுப்பவர்கள், தாளின் இரண்டு பக்கங்களிலுமே அச்சிட வேண்டும் என்று ஒரு சுற்றரிக்கை விட்டதாம், இந்த ஒரு சிறு முயற்சியால் அவர்கள் சேமித்த தொகை ஆண்டிற்க்கு ஏழு லட்சம் டாலர்கள்!!
அலுவலகங்களில் காகிதங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாதென்றாலும், இயன்ற வரை குறைவாக பயன்படுத்த முயற்சிப்போமே!!
அனைவருக்கும் தெரிந்தவை தான் இந்த குறிப்புகள், சற்று நினைவூட்டுவதற்க்காக்:
- எப்பொழுதும் தாளின் இரண்டு பக்கங்களிலும் (double sided) பிரின்ட் செய்யுங்கள்.
- பெரும்பாலும் மின்னஞ்சல்கள் பிரின்ட் எடுக்க வேண்டிய அவசிய்ம் இருக்காது, அப்படியே வேண்டுமென்றால் தேவையான பகுதியை மட்டும் எடுக்கலாம்.
- பழைய பிரின்ட் எடுத்து, தேவையில்லாத ஆவனங்களை, வேறு பல உபயோகத்திற்க்காக் பயன்படுத்தலாம் (கிறுக்குவது, நோட்ஸ் எழுதுவது, கவிதை எழுத..?)
- பிரின்ட் எடுப்பதற்க்கு முன், மானிட்டேரிலேயே லேஅவுட், மற்றும் ஃபார்மேட்டுகளை (Print preview) சரி பார்த்து பின்னர் பிரின்ட் எடுக்கலாம்.
- எழுத்துக்களின் அளவை (Font size) குறைத்து, பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
- முடிந்தால் ஒவ்வொருவரும் Electronic Filing System வைத்துக் கொளவது நல்லது. ஏதாவது ஆவணம் தேவைப்பட்டால் உடனே தேடி எடுத்து, மின்னஞ்சல் மூலம் அனுப்பவதற்க்கும் இலகுவாக இருக்கும்.
"THINK BEFORE YOU INK"
இந்த டைட்டுல பார்த்துட்டு இது என்னமோ மென்ஹட்ட்ன் மொக்காசினோ ரெஸ்ட்டாரன்ட்டோ, இல்லாட்டி புர்ஜ் துபாய் முப்பதாவது மாடியில உள்ள ஹோட்டல் மெனுவோன்னு திகச்சு நிக்காதிங்க. இது உங்க வீட்டு அம்மனீஸ அசத்தி நீங்களும் சமையல்ல கில்லி தான்னு சொல்ல வைக்கப் போற "கிரி..கிரி..கிரிஸ்ப்பி உங்கள் சாய்ஸ்" ஸ்டைல்ல ஒரு ஸ்னாக்ஸ்.
பிரட் - 4 pcs
தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க.அப்புறம் இது தொட்டுக்க சட்னி மாதிரி, கீழ்க்கண்டவைகளை மிக்ஸ் பன்னி ஒரு கோப்பையில் வச்சுக்குங்க, அப்படி இல்லைனாஜலீலா அக்கா இது மாதிரி சட்னி வகைகள் போட்டு இருப்பாங்க, அதுவும் ஒ.கே. தான்.
சவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா!!