|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!


(அது 1999 இன்டெர்னெட் உபயோகப்படுத்த தொடங்கிய காலம், வழக்கம்போல் நன்பர்கள் சேட்டிங் அது இது என்று அறிமுகப்படுத்தினார்கள், ஆன்லனில் பல நல்ல‌ நன்பர்கள் கிடைத்ததும் உண்டு, ஏடா கூடமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்.. அப்படி ஒன்று நடந்திருந்தால், ஒரு சிறு கற்பனை)

அழுத்தினேன் அறை எண் மூன்று
அட‌டா, அறை முழுதும் அச‌த்த‌ல்கள்

குயில்களின் கூட்டம், மானோடு மயில்க‌ளும்தான்
பாப் அப்பாய் ஒரு பாப்பா, என்னை பார‌ப்பா என்றது

வ‌ய‌து, நிற‌ம், உய‌ர‌ம் இதுவும் வேண்டுமாம்
த‌ட்டிவிட்டேன் ஒரு என்ணை தந்திரமாய், ‌

அவ‌ளுக்கு வ‌ழ‌க்க‌ம்போல் ப‌தினெட்டேத்தானாம்
இத‌னிட‌யே இன்னொருத்தி இங்கே வா என்ற‌ழைத்தால்
ர‌க‌சியமாய் அவ‌ள் சொன்னால் ர‌ஷ்ய‌ப்பெண் தானென்று
ஒன்றா இர‌ன்டா இப்ப‌டியாய் ஒன்ப‌து பேர்

அமேரிக்கா, ஆப்பிரிக்கா இப்ப‌டி ப‌ல‌ க‌ன்ட‌ங்க‌ள்
சிந்தனை சிறகடித்தது சிகாகோ‌வுக்கும், சிங்கைக்கும்

சிறு இடைவெளியில் ஒன்பதில் ஒன்றைக்காணோம்
அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!
தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்

Posted on 10:51 AM

<> 'ம்' என்றால்..

Filed Under () By SUFFIX at 10:51 AM


இதற்க்கு என் எதிர்க்கவிதை


கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான்
அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.

உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன்
கடலை கறியும் கடலாய் மாறியது!!

சில மணி நேரம் சீரியல், சினுங்கமாட்டோம்..
சீரியலால் நீங்கள் சினுங்காதவரை!
விளம்பர இடைவேளை..
மனதைத்திருப்ப மனமில்லை,
விழிகளையுமா?

அழகான புடவைத்தான் நேற்றுவரை
அடுப்பங்கரைக்கு போனது ‍அடுத்தாத்து அம்புஜத்தாள்


என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய்
இன்றைக்கு புதிராய் மொழிபெயர்த்து வைத்தாய்.


இறகு போல் குவ‌ளை, இருப‌து கிலோ ஆன‌து
நானும் புரிந்து கொன்டேன் 'நங்' ச‌த்தத்தால்


திட்டித்தீர்ப்ப‌து கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம்


மீட்ட‌ர் நீள‌ நெக்ல‌ஸ், முழ‌ங்கை வ‌ரை வ‌லைய‌ல்கள்
முன‌க‌ல் நிறக்க‌வில்லை, கடையை மாற்றனுமாம் இவள் பெயருக்கு!


உய‌ர்தினையும் அஃறினையும் மாறி மாறி மாற்றும்
'இந்த' இவ‌ளை மாற்றும் முய‌ற்சியில்.... இவ‌ன்

Posted on 10:17 AM

<>மின்னல்!!

Filed Under () By SUFFIX at 10:17 AM

மின்னல்...இருளடைந்த வானில்

சிதரும் வெளிர் வண்ண கோடுகள்,

சில கனமே தரிக்கும், பார்வையையும் பரிக்கும்
இம்மின்னலோ, மின்னலாய் தான் வந்தாள்,

மின்காந்தமாய் இழுத்தாள்!

பரித்தாள்... பார்வையோடு, மனதையும்தான்

இன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்

இனிதாய்த்தான் இருந்தது இவளிடம்!

காத‌ல் ம‌ழையால் ம‌ன‌தும் ந‌னைந்த‌து

ச‌காரா பாலை, பூஞ்சோலையான‌ மாயம்,

எண்ணம் முழுதும் வர்ணப்பூக்கள் ஜாலம்

அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்

ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்தது...கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால், இதுல நிறைய விஷயம் இருக்குங்கோ.


நாம சந்தோஷமா இருக்கும்போது எந்தவிதத்திலும் உத்திரவாதமோ, அத செய்வேன், இத செய்வேன்னு அலப்பரையோ, நிலாவ பிடிச்சு நீ நிற்க்கும் இடத்தில் நிறுத்துவேன் வானத்துக்கு குதிக்கிறதோ, ஏதோ ஒரு மூடில் அடுத்த மாசம் சம்பளம் வரட்டும் என்னோட செல்லத்திர்க்கு அரை கிலோ 'கவுனர் மாலை' வாங்கித்தர்ரேன்னு அலம்பல் பன்னிட்டு...அப்புறம் அடுப்பங்கரை பக்கம் உக்காந்து யோசிக்கக்கூடாதாம்.
அப்புறம் நாம கோவமா இருக்கும்போது, வாயை கம்னு மூடிக்கிட்டு கொஞ்சம் அமைதியா இருந்தால் பல வேன்டாத பின் விளைவுகளை தவிர்க்கலாம்னு சொல்ராங்க. இது இப்போ உள்ள‌ ஈமயில்/SMS உலகத்திர்க்கு உஷாரான ஒரு பரிந்துரை!! கொஞ்சம் 'SEND' க்ளிக்குவதர்க்கு முன்னால் மூனு முரை யோசிங்க. (ஹலோ ரொம்ப டெக்னிக்கலா 'RECALL' அப்படி இப்படீன்னு போவாதீங்கப்பா)
இன்னொன்னு என்னன்னா, ரொம்ப கவலையா இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாதாம், என்னடா இது இப்படி ஆயிடுச்சேன்னு பட்டுன்னு எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஏதாவது செஞ்சுட்டு, அடடா, கொஞ்சம் பொறுத்து இருந்தால் அப்படி ஆயிருக்குமே, அதை மிஸ் பன்னி இருக்கமாட்டோமேன்னு நம்மள நாம்மாளே திட்டி தீர்க்குரதுக்கு பதில், ஏதாவது கவலை நம்மை தாக்கும்போது ‌'This too will pass' இதுவும் கடந்துவிடும்னு சொல்லி பொறுமையாய் இருக்கனுமாம்.


நம்மள்ள சிலபேரை பார்த்திருப்போம், லோலோன்னு ஒருத்தவங்க பின்னாடி அலைவாங்க, ஆனா இந்த பார்ட்டிய இவர் கேர் பன்னவே மாட்டார். ஒருத்தர் சின்சியரா விரும்புவாங்க ஆனா இந்த மன்மதனோ i dont mind தான் (இதை க‌ல்லூரி ப‌ருவ‌த்தில் கண்ணால் க‌ன்ட‌து...சில‌ பேரின் தாடிக‌ள் சொல்லும்).


உங்களை பற்றி லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் எல்லோரிடமும் சொல்லனும்னு தேவையில்லை.
ஒருத்தருக்கு உங்களை பிடிச்சுருச்சுன்னா அவங்களுக்கு அது தேவையில்லை!! அப்படிக்கு பிடிக்கலைனா நீங்க என்ன சொன்னாலும் அதை நம்ப போவது இல்லை!! கால விரயம்தான்.


உறவு என்பது ஒருத்தரை சமமாக புரிஞ்சுக்குற‌தில தான் இருக்காம். நீங்க ஒருத்தரை ஏதோ பெரிய ஆலமரம்னு நினைச்சு பழகுவீங்க, ஆனா அவரோ நீ ஒரு கில்லு கீரை ரேஞ்சுக்குத்தான்னு உங்களை மதிச்சார்னா, சாரி..குட்பை சொல்ரது நலம்.



நேத்து வீட்டு பக்கத்தில் உள்ள சோப்பு, சீப்பு, கண்ணாடி எல்லாம் விற்பாங்கள்ள, அது தான் 'ஃபேன்சி ஸ்டோர்' அந்த கடைக்கு போனேன். நீ ஏன்டா அந்த கடைக்கு போனேன்னு கேட்குறீங்களா? நாம் என்ன தாய்க்குலங்கள் மாதிரி கூடை நிறைய மேக்கப் சாதனங்களா வாங்கப்போறோம்? நமக்குன்னே வச்சுருப்பாங்க ஒரு ரியாலுக்கு use & throw ஷேவிங் மெஷின், அதுவும் கேஷ் கவுன்ட்டர் பக்கத்திலேயே இருக்கும், கடைக்கு உள்ளே போவனும்னு அவசியம் இல்லை, ஒரு ரியால வாங்கிகிட்டு மெஷினை கையில கொடுத்து மொவனே அப்படியே நடைய கட்டுன்னு அனுப்பி வச்சுடுவாங்க.


சரி..சரி மேட்டருக்கு வர்ரேன், அந்த கடையில் சீப்பு, சோப்பு, கண்ணாடியெல்லாம் அழகாக அடுக்கி வச்சிருந்ததை பார்த்ததும் நம்ம புதிய blog மூளைக்கு ஒன்று தோன்றியது. அத தான் இங்கு உஙகளுடன் பகிர்ந்துக்குரேன்:


சோப்பு


சோப்பு போட கத்துக்குங்க...
சலவைக்கு உதவும், பல‌ சலுகைகள் பெறவும் உதவும்.


சீப்பு


காலை வாறும் ச்சீப்பான மனிதரைவிட‌ தலையை வாறும் சீப்பு மேல்.


கண்ணாடி


பொய் சொல்லத்தெரியாது, உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண் என் முன்னாடி!!







வியப்பாகவே இருக்கிறது...இந்த உயர்ந்த புர்ஜ் துபாய் கோபுரத்தை பார்த்து அல்ல, இதனை கட்டி முடித்த என் மனிதப்பிறவியை நினைத்து!!


அத்தனை உயர்ந்த கோபுரத்தின் உச்சியில், தன்னை சார்ந்து இருக்கும் தன் குடும்பத்தை ஒளியூட்ட மெழுகுவருத்தியாய் உருகும் மனிதா...உலகில் இனி எத்தனை கோபுரங்கள் போட்டி போட்டு எழட்டும்..என் பார்வையில் உழைத்து வாழும் நீயே உயர்ந்தவன்.









ஹீ...ஹீ..ஒன்னும் இல்லை, இன்னைக்கு நான் ரொம்ப பிசின்னு சொல்லவந்தேன்!!




Posted on 10:39 AM

<>அவள் விழிகள்

Filed Under () By SUFFIX at 10:39 AM

அவள் விழிகள்.....
பேசாமல் பேசும் பல மொழிகள்
ஆனந்தித்தின் பிரதிபலிப்பு
அகலமாய் சிரிக்கும் அழ‌கு விழிக‌ள்
காத‌லுட‌ன் க‌ல‌ந்து விட்டால்
மின்மினியாய் சிமிட்டும் அந்த‌ க‌ய‌ல் விழிக‌ள்
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்
தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்
உற்சாக‌த்தின் உச்சி,
எவ்ரெஸ்ட்டாய் குளிரும் குமுதவிழிகள்
வெறுத்து வெகுன்டெழுந்தாள் அக்னியாய் அவ்விழிகள்
அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
(ஒரு சிறு முயற்சி...அக்னி லுக் விடாமே, ஆர்க்டிக்கா மாறி பின்னூட்டங்களை அள்ளி போடுங்க‌)

முடி வளர்ந்திருக்கோ இல்லயோ..மாசம் பொறந்து முதல் வாரத்திர்க்குள் தலையை சலூனில் போய் காட்டி விடுறது நம்மளோட பழக்கம்..அது எப்பவோ பிளான் பன்னுனது, அது இப்படியே தொடர்கிறது (எதயுமே நாங்க பிலான் பன்னித்தான் செய்வோம்ல).

இந்த சலூன் கடைக்கு போரதுன்னாலே நமக்கு ஒரு மினி ப்ராஜக்ட் செய்ரமாதிரி, டைம் பாத்து போவனும், நம்மளோட ஃபேவரைட் முடிதிருத்துனர் இருக்காரான்னு பாக்கனும், கூட்டம் எப்படி இருக்குன்னு கன்னோட்டம் இடனும்..அப்பப்பா..

அது என்னமோ தெரியலே, உலகலாவிய சலூன் சங்கத்தினர் ஒருங்கினைத்து ஒரு தீர்மானம் நிறைவேத்திட்டாங்கன்னு நினைக்கிரேன், அது தாங்க.. நீங்க எத்தனை முறை போனாலும் அதே பழைய நியூஸ் பேப்பர், பத்திரிக்கைகள தான் படிக்கனும். அது அதிரையோ, மதுரையோ உலகின் எந்த மூலையோ.

நம்ம ஊரா இருந்தால், நாம் பிறப்பதுற்க்கு முன்னாடி வெளிவந்த குமுதம், கல்கன்டு, தினத்தந்தி எல்லாம் அழகாக அடுக்கி வச்சுருப்பாங்க‌. பழைய விகடனில் "ஆறிலிருந்து அறுபது வரை" பட விமர்சனமோ, "இன்று ரைட் சகோதரர்கள் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக செலுத்தினர்" மாதிரி செய்தியோ, இன்னும் சில கடைகளில், "ஷாஜகான் இன்று தாஜ்மகாலுக்கு அடிக்கள் நாட்டி, மக்களுக்கு இனிப்பு வழ்ங்கினார்" இது மாதிரி நியூஸ் ஷாக்கிங் கொடுக்கும்.

அதுவே இந்த ஊருல‌ (ஜித்தா) பழைய அரபி பத்திரிக்கைகளா வச்சுருக்காங்க, அது என்னமோ தெரியல, அதிகமான கடைங்கள்ள லேடீஸ்க்கு உள்ள ஃபேஷன் சம்பந்தப்பட்ட 'ஜமீலா', 'சய்யிதாத்தி' யா இருக்கு (இதன் நுட்பம் என்னவோ..சரி சரி இது எல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம்)..உஙக் ஏரியாவுலயும் அப்படித்தானா?

நேத்து இப்படித்தான் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சலூனுக்கு போனேன், பார்த்தால் ஜஸ்ட் ஒருவர் தான், அப்பாடா, இன்னக்கி ஒரு புத்தகத்தோட தப்பிச்சோம். சரி இன்னக்கி வழ்க்கம்போல் மேலே உள்ள புத்தகத்தை எடுக்காமெ, நடுவில் உள்ள ஒரு சஞ்சிகையை சருட்டுன்னு ஸ்டைலாக உருவினால்..அடங்...போன மாசம் பார்த்த அதே மேகஸின் தான், ஆனா கொஞ்சம் வித்யாசம், இன்னும் பழசா இருந்தது (என்ன ஒரு கன்டுபிடிப்பு)

சரி வேறு ஏதாவது இருக்கான்னு கின்டி பார்த்தா..2005ம் ஆன்டு வெளியிட்ட ஒரு சூப்பர் மார்க்கெட்டோட ஆஃபர் பேப்பர் அதுவும் இந்த சலுகை 15 ஏப்ரல் 2005 வரை மட்டுமேன்னு கொட்டை எழுத்தில்...என்ன கொடுமைடா. அப்பொது தான் எனக்கு ஒன்று ஸ்ட்ரைக் ஆனது. நாம் அடுத்த முறை இது போன்ற க்யூ சமாச்சாரத்திற்க்கு வரும்போது ஏதாவது ஒரு உபயோகமான (இது மாதிரி வெட்டிப்பதிவு மாதிரி இல்லாமல்) புத்தகம் கொன்டு வரலாம்னு தீர்மானத்திக்கொன்டேன். எதுவுமே நமக்கு லேட்டாத்தான் புரியுமோ?



இன்றைக்கு ஒரு சிம்ப்பிள் சமாச்சரத்திற்க்காக‌ ஒரு ட்ராவல் ஏஜன்சிக்கு போன் பன்னினேன். ப‌தில் சொன்ன‌ ந‌ப‌ரோ... நான் பிசி.. நான் பிசி, நேரில் வாங்க‌. காட்டுத்த‌ன‌மாக‌ க‌த்திவிட்டு, இனைப்பை துன்டித்து விட்டார். ஒரு அஞ்சு நிமிஷ‌ம் க‌ழித்து, ம‌றுப‌டியும் அழைத்தேன், அதே குர‌ல், அதே கோப‌ம்.. நான் பிசின்னு சொன்னேன்ல‌, நான் மிக‌வும் ப‌வ்ய‌மாக‌, நீங்க‌ பிசின்னு தெரியுது, ஆனா இந்த‌ சின்ன‌ ஒரு ப‌திலுக்காக‌ உங்க‌ ஆஃபிஸ் வ‌ர‌னும்கிர‌து நியாய‌ம் இல்லை, நானும் இங்கே பிசி தான், "அப்ப‌டியா..அப்பொ வ‌ர‌வேனாம்னு" போனை வைத்து விட்டார். எதுவா இருந்தாலும் மூனு முறை முய‌ற்சி ப‌ன்ன‌னும்னு பெரிய‌வ‌ங்க‌ சொல்லி இருக்காங்க‌. அத‌யும் தான் பார்த்து விட‌லாமே..எதுக்குடா ரிஸ்க்னு நீங்க‌ கேட்கிர‌து புரிகிற‌து, ரிஸ்க் எடுக்கிரதுதான் ந‌ம‌க்கு ர‌ஸ்க் சாப்பிட‌ர‌மாதிரின்னு சொல்லி திரும்ப‌வும் ஒரு முய‌ற்சி...திரும்ப‌வும்..அதே...அதே..."அய்யா நீங்க‌ ரொம்ப‌ பிசின்னு புரியுது, நீங்க‌ எப்போ ஃப்ரீயா இருப்பீங்க‌ன்னு சொல்லுங்க‌", ம‌றுப‌டியும் க‌டு..க‌டு. "நான் எப்போதுமே பிசிதான்" போனை நங் என்று வைத்தார்...உடைத்தார்னு சொல்லனும்.


இவ‌ர் மேல் கோப‌த்தை காட்டிலும், அனுதாப‌மே தோன்றிய‌து, பாவ‌ம் என்ன‌ பிர‌ச்னையோ, தான் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் உள்ள எல்லா பனிகளையும் செய்ய வேன்டிய சூழ்நிழை, இந்த மனிதரை பாடாய் படுத்துகிரது போலும், இல்லைனா ஏதாவது தனது சொந்த பிரச்னை அதனை சமாளிக்க முடியுமானால் தவிக்கிராரோ என்னவோ!! எப்படியோ...

சில வருடங்களுக்கு முன் Lee Iacocca, அது தாங்க இந்த Chrysler கார் தயாரிக்கிராங்களே, அதொட நிறுவனரோட biography படிச்சேன், அவர் சதாரன கூலி வேலையாலாக இருந்து, பின்னர் சிறு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு, பின்னர் படித்து, Ford கம்பெனியில் சேர்ந்து, பின் அதிலிருந்து விலகி, Chrysler கம்பெனியை ஆரம்பிச்சாராம். இவர் ரெஸ்டாரன்ட் நடத்தும்போது ஒரு சர்வர் வருகிர எல்லா கஸ்டமர்களிடம் எறிஞ்சு எறிஞ்சு விழுவாராம். இத கவனிச்ச லீ, அவரை கூப்பிட்டு என்னப்பா நீ எப்போதும் ரொம்ப டென்ஷ்னாவே இருக்கியேன்னு கேட்டாராம், "ஆமா, எனக்கு உள்ள தகுதிக்கு நான் எப்படியோ இருக்க வேன்டிய ஆளு, ஏதோ தலைவிதி இங்கே வந்து சர்வரா வந்து மாட்டிக்கிட்டேன்"

அதற்கு லீ, அய்யய்யோ என்கிட்டே ச்ர்வர் வேலை தவிர வேற ஒன்னும் இல்லையேனுட்டு அவருக்கு அட்வைஸ் பன்ன ஆரம்பிச்சாராம். “நீ இப்படி நடந்துக்குறதினாலே, மூனு விதத்தில் பாதிக்கப்டுகிறோம். முதல்ல நீ, உனக்கு தகுதிக்கு குறைவான இடத்தில் வேலை செய்ரதுனாலே, உன்னொட எதிர்காலத்தை வீனாக்கிக்கிட்டு இருக்கிரது மட்டுமில்லாமல், இப்படி அடிக்க்டி டென்ஷன் ஆகிரதினால் உன்னோட ஆரோக்கியமும் கெடுகிறது. இரன்டாவது, என்னோட பிசினஸ், இங்க வர்ர கஸ்டமர் வச்சு தான், நான் பிசினஸ் நடத்த முடியும், இங்கு வேலை செய்ர எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க முடியும், ஆனால் நீ என்னடான்னா எல்லொரயும் விரட்டி அடிச்சுடுவெ போரிருக்கே. மூன்றாவது, இந்த சர்வர் வேலையாவது கிடைக்காதான்னு ஆயிரக்கனக்கான பேர் காத்துக்கிட்டு இருக்காங்க, அவங்களோட எதிர்காலத்திற்க்கு நீ தடையா இருக்கே” அப்படின்னாராம் - இதுக்கு பேர் தான் லீ பன்ச்!!.

நம்மளோட லைஃப்லேயும் இது மாதிரி சவால்கள் அப்பொப்போ எட்டிப்பார்க்கும். அப்பொவெல்லாம் லீயே வந்து நம்ம முன்னாடி வந்து இது மாதிரி மிரட்டுரமாதிரி இருக்கும். கொஞ்சம் சுதாரிச்சு...(ஏதாவது சொல்லி எஸ்டாபிளிஷ் பன்னிருவோம்ல...இதுக்கு மேலயும் விளக்கமா சொல்லனுமா...ஹீ..ஹீ)

இந்த பதிவை இங்கே இடுவதினால், வேலை பிடிக்கலனா சீட்டை காலி பன்னுங்கன்னு அர்த்தம் இல்லை, கொஞ்சம் புரிஞ்சு, அட்ஜஸ்ட் பன்னி நடந்துக்கோங்க, அம்புட்டுதேன்.

நம்முடைய பதிவு 'நடையை கூட்டுங்க' படித்துவிட்டு டாக்டர் கே.நயன் ஒரே ரப்ச்சர் கொடுத்துட்டு இருக்கார். இவர் யாருமில்லா ஊரில் பிரபல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம் பெற்றவர். டாக்டர். கே.நயன் அவர்களுடன் நம‌து நிருபர் எடுத்த ஒரு சிறு பேட்டி.

நிருப‌ர் : நீங்க‌ள் இந்த பதிவிற்க்கு மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன‌?

கே.ந‌ய‌ன்: ந‌ல்லா இருக்கு உங்க‌ கேள்வி, என்ன‌ எழுதி இருக்கீங்க‌? ஒரு நாளைக்கு 30 நிமிஷ‌ம் வேக‌மாக‌ ஓட‌ வேண்டுமாம், அப்புற‌ம் இத‌யம் என்ன‌த்துக்கு ஆகுற‌து, ஜனங்களோட இத‌ய‌ம் ப‌ட‌ ப‌ட அடிச்சுக்கிர‌துல‌ உங்க‌ளுக்கு அவ்வ‌ள‌வு அலாதி. நீங்க‌ விளையாடுற‌து இத‌யத்தோட‌...சிட்டு குடுவை அல்ல‌.
அப்போ உங்களோட அட்வைஸ் என்ன?
தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிருவோம், அந்த நேரம் போக, மீதி நேரத்திலும் தூங்கனும்.
ஒரு சந்தேகம் டாக்டர், சப்போஸ் வேலைக்கு போறவங்கல்லாம் இந்த மெத்தடை ஃபால்லோ பன்றது கஷ்டமாச்சே.
ஏன் முடியாது, இதற்காக நாங்க பல ஊர்களில் கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடத்திக்கிட்டு இருக்கோம். அலுவலக ஊழியர்களுக்கு என தனியாக ஒரு நாள் பயிற்சி நடத்துகிறோம். சீனியர் ஜூனியர்களுக்கு தெரியாமல் எப்படி தூங்குவது, ஜூனியர்கள் சீனியர்களுக்கு எப்படி டிமிக்கி கொடுத்து குறட்டை விடுவது போன்ற பல டெக்னிக்ஸ் சொல்லித்தர்ரோம். சப்போஸ் உங்க ஆஃபிசில் 50 பேருக்கு மேல் இருந்தா, எங்க டீம் அவங்க சீட்டுக்கே போய் லைவ் டெமோ கொடுப்பாங்க, இது நல்லா ஒர்க் அவுட் ஆவுதுன்னு சொல்ராங்க‌. ஏன்னா பழகிய இடத்தில் பட்டா போடுரது எளிது இல்லயா.
இன்னும் சில பேர் என்ன சொல்ராங்கன்னா, லிஃப்ட் உபயோகபடுத்துரக்கு பதிலா, மாடிப்படியில் ஏறி இறங்குங்கன்னு சொல்ராங்களே?

இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சதி வேலையே இருக்கு, இந்த பிளாட் ஓனருங்க, அலுவலக மேல் அதிகாரிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து பிளான் பன்னி இருக்காங்க, இப்படி எல்லோரும் மாடிப்படியில் ஏறி இறங்கினா, கரன்ட் பில்லை கம்மி பன்னலாம்ல, அது தான் அவங்க திட்டம். என்ன ஒரு வில்லங்கத்தனம் பாருங்க, நீங்க கஷ்டப்பட்டு மூச்சு இறைக்க படியில்...அவங்களோ ஹாயாக ஏசியில் உக்காந்து என்ஜாய் பன்றாங்க.
அப்புறம் டாக்டர் இப்பொ யார பார்த்தாலும் 28, 34, 36னு சொல்லி திரீராங்களே, அத பத்தி..
இங்க தான் நீங்க லாஜிக்கா திங்க் பன்னனனும். நாம் ஒருவரை சிறந்த மாணவன்னு எப்படி சொல்றோம், மதிப்பென் அதிமாக இருந்தால் தானெ? அப்பொ இதற்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு? பரிட்சையில் விடையானாலும், உடம்பு எடையானாலும், என்னோட பார்வயில் அதிக எண்ணெ என்னோட சாய்ஸ்.
வயிறு பானை மாதிரி இருக்குன்னு கின்டல் பன்றவங்கள பத்தி...
அவர்கள் ரசனை அற்றவர்கள், அது நம்ம நாட்டோட குடிசை தொழில் குலத்தொழிலை நையான்டி செய்கிறார்கள். நான் அதனை வன்மையாக கன்டிக்கின்றேன்.
எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம், ஒரு நாளைக்கு 8 டம்ப்லர் தண்ணீர் குடிக்கனும்னு சொல்றாங்களே.
அப்படியா சொர்றாங்க‌
என்ன டாக்டர், உங்களுக்கு தெரியாதா?
நான் தெரியாதுன்னு சொன்னேனா, நீங்க ஏதோ என்னை சந்தேகப்படுரீங்கன்னு நினைக்கிறேன்.
அய்யயோ அப்படி எல்லாம் இல்லை டாக்டர், யாருமில்லாத ஊருக்குத்தான் உங்கள பத்தி நல்லா தெரியுமே.
சரி சரி தண்ணீர் மேட்டருக்கு வர்ரேன், 8 டம்ப்ளல்ர்னு சொன்னாங்களே, என்ன டம்ப்ளர், என்ன கலர், என்ன ஷேப் இது மாதிர் டீடைல் கொடுத்தாங்களா? கொடுக்கமாட்டாங்க...ஏன்னா அவங்கள்ளாம் என்ன மாதிரி விவரமானவங்க இல்லை.
இன்னொரு விஷயம் பெருமயோட சொல்லிக்கொள்கிறேன், எங்க ஊருக்கு யாருமில்லாத ஊருன்னு பேரு வர நான் தான் காரணம்.
சொல்லாமலே நான் தெரிஞ்சுக்கிட்டேன்...ரொம்ப நன்றி எங்களோட பொன்னான் நேரத்தை வீனாக்கியதற்க்கு......ஜூட்......

Posted on 11:52 AM

<>திருமணம்

Filed Under () By SUFFIX at 11:52 AM


இவை இரன்டும், சற்றுமுன் தோன்றியவைகள், பல பதிவுகளை படித்ததன் விளைவுன்னு நினைக்கிரேன்...சிறு பிள்ளைத்தனமா இருந்தால் சான்றோர்கள் மன்னிப்பார்களாக...(போதும் பில்டப்)


என்ன தலைப்பு வைக்க்லாம்னு தெரியவில்லை

(திருமணம் அல்லது மனைவி)


கண்டவுடன் காதல்....இது பொய்.

கண்டவளை வென்றவுடன் காதல்...இதுவே மெய்.

--------------------------------------
அவள்...வாழ்க்கை துணை
வாழ்வில் வ‌ழுக்கும்பொழுதும் துணை
வாழ்வின் வளத்திலும் துணை
நான் வ‌ழுக்கையானாலும் துணை
எனை இந்த பூமி விழுங்கும்போதும்...அவளே

-------------------------------------




If a daily fitness walk could be put in a pill, it would be one of the most popular prescriptions in the world.


வாரத்திலே மூனு இல்லாட்டி நாலு வாட்டி குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடந்தீங்கன்னா உடல் ஆரோக்கியத்திர்க்கு மிகவும் நல்லதுன்னு மருத்துவ வல்லுனர்கள் சொல்ராங்க. இந்த மேட்டர் எற்கனவே பல முறை படிச்சும், கேட்டும் இருக்கோம், இது சும்மா ஒரு ரீப்பீட்டுதானுங்கோ.


இதனால் மன அழுத்தத்தினால்(Stress)வரக்கூடிய இரத்த அழுத்தம் குறைகிறதுன்னு ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சு இருக்காங்க. இன்னும் Type II வகை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வச்சுருக்க‌ உதவுதுன்னும் சொல்றாங்க. அட.. நடந்துதான் பாருங்களேன், உச்சி முதல் உல்லங்கால் வரை வித்யாசத்தை உனர்வீர்கள்.


இந்த மெஸ்ஸேஜை ஜொஹென்னஸ்பெர்கில் இருக்கும் என்னோட ஃப்ரென்டுக்கு அனுப்பினேன், மாப்ளே நீ சொன்னேன்னு நானும் போனேன்டா, அதுவும் இங்கே summer வேர, இந்த பொன்னுங்க தொல்லை தாங்கலைடா, கன்ட மாதிரி ட்ரெஸ் பன்னிக்கிட்டு (பன்னாமெ) நம்ம முன்னாடி ஒடுதுங்க, அத பார்த்து நானும் ஓட, முட்டி மோதி, விழுப்புன்னுடன் வீரமாக வேகமாக வீட்டிர்க்கு வந்துட்டேன்டா, இது தேவையா? (பேசிக் தெரியாத பேரிக்காயா இருக்கானே).


இந்த மாதிரி ரிஸ்க் இருந்துச்சுன்னா ஹெல்மேட் போட்டு ஒடுரது தான் சிறந்த வழி (வேறு ஏதாவது சிறந்த வழி இருந்தால் வல்லுனர்கள் அட்வைஸ்களை அள்ளி தெளியுங்கள்).


சரி... நடயை கட்டுஙக......சாரி கூட்டுங்க.

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கராங்களோ

தென்னாப்பிரிக்காவில் ஒரு குக்கிராமம் (நம்ம பாரதி ராஜா சொல்ரமாதிரி அதே profile), இந்த சிறு குழந்தைகள் குதூகலத்துடன், ரிங்கா..ரிங்கா..ரோசா ஆடி, பாடி, இந்த வளையத்தினை சுற்றி வருகிறார்கள்.

அவர்களுக்கு அறியாமலேயே அந்த சுத்துப்பட்டு கிராமத்திற்க்கு தேவையான தண்ணீரை இரைத்து அதை சேமிக்கவும் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த விளையாட்டு வளையத்திர்க்கு சில மீட்டர்களுக்கு கீழ் ஒரு பம்ப் வைத்துள்ளனர். இந்த சிறார்கள் சுற்ற சுற்ற பம்பிர்க்கு தேவையான மின் சக்தி உருவாக்கபட்டு, அதன் மூலம் அருகில் உள்ள 2,500 லிட்ட்ர் கொள்ளலவு உள்ள டேங்கினில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது (ஒரே கல்லில் ரென்டு மாங்காய்...வேறு ஏதாவது புதுசா சொல்லுப்பா)


Playpumps (http://www.playpumps.org/) அப்படிங்கர நிறுவனம், விளயாட்டாய் இல்ல, சீரியஸா இந்த பிசினஸ்ஸை வெற்றிகரமா ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இவர்கள் உதவியால் லட்ச கனக்கான மக்களுக்கு தண்ணீர் மிக சுலபமாக கிடைப்பதாக தென்னாப்பிர்க்க உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இது எப்படி செயல்படுகிறதுன்னு கீழே உள்ள சிறு வரைபடத்தின் மூலம் விளக்கி உள்ளார்கள்.

சரி...சரி.. ரொம்ப யோசிக்காதிங்க, புரியுது உஙகளின் சாதிக்கத்துடிக்கும் தன்னார்வம் (அப்படின்னா...?) வருகிர ஜூன் 5, உலக சுற்றுப்புற சூழ்ல் தினமாம் (உடனே SMS கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்களே). ஏதாவது உருப்படியான காரியம் செய்யலாமே.

The simple solution is the best one.