|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

நம்முடைய பதிவு 'நடையை கூட்டுங்க' படித்துவிட்டு டாக்டர் கே.நயன் ஒரே ரப்ச்சர் கொடுத்துட்டு இருக்கார். இவர் யாருமில்லா ஊரில் பிரபல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம் பெற்றவர். டாக்டர். கே.நயன் அவர்களுடன் நம‌து நிருபர் எடுத்த ஒரு சிறு பேட்டி.

நிருப‌ர் : நீங்க‌ள் இந்த பதிவிற்க்கு மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன‌?

கே.ந‌ய‌ன்: ந‌ல்லா இருக்கு உங்க‌ கேள்வி, என்ன‌ எழுதி இருக்கீங்க‌? ஒரு நாளைக்கு 30 நிமிஷ‌ம் வேக‌மாக‌ ஓட‌ வேண்டுமாம், அப்புற‌ம் இத‌யம் என்ன‌த்துக்கு ஆகுற‌து, ஜனங்களோட இத‌ய‌ம் ப‌ட‌ ப‌ட அடிச்சுக்கிர‌துல‌ உங்க‌ளுக்கு அவ்வ‌ள‌வு அலாதி. நீங்க‌ விளையாடுற‌து இத‌யத்தோட‌...சிட்டு குடுவை அல்ல‌.
அப்போ உங்களோட அட்வைஸ் என்ன?
தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிருவோம், அந்த நேரம் போக, மீதி நேரத்திலும் தூங்கனும்.
ஒரு சந்தேகம் டாக்டர், சப்போஸ் வேலைக்கு போறவங்கல்லாம் இந்த மெத்தடை ஃபால்லோ பன்றது கஷ்டமாச்சே.
ஏன் முடியாது, இதற்காக நாங்க பல ஊர்களில் கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடத்திக்கிட்டு இருக்கோம். அலுவலக ஊழியர்களுக்கு என தனியாக ஒரு நாள் பயிற்சி நடத்துகிறோம். சீனியர் ஜூனியர்களுக்கு தெரியாமல் எப்படி தூங்குவது, ஜூனியர்கள் சீனியர்களுக்கு எப்படி டிமிக்கி கொடுத்து குறட்டை விடுவது போன்ற பல டெக்னிக்ஸ் சொல்லித்தர்ரோம். சப்போஸ் உங்க ஆஃபிசில் 50 பேருக்கு மேல் இருந்தா, எங்க டீம் அவங்க சீட்டுக்கே போய் லைவ் டெமோ கொடுப்பாங்க, இது நல்லா ஒர்க் அவுட் ஆவுதுன்னு சொல்ராங்க‌. ஏன்னா பழகிய இடத்தில் பட்டா போடுரது எளிது இல்லயா.
இன்னும் சில பேர் என்ன சொல்ராங்கன்னா, லிஃப்ட் உபயோகபடுத்துரக்கு பதிலா, மாடிப்படியில் ஏறி இறங்குங்கன்னு சொல்ராங்களே?

இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சதி வேலையே இருக்கு, இந்த பிளாட் ஓனருங்க, அலுவலக மேல் அதிகாரிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து பிளான் பன்னி இருக்காங்க, இப்படி எல்லோரும் மாடிப்படியில் ஏறி இறங்கினா, கரன்ட் பில்லை கம்மி பன்னலாம்ல, அது தான் அவங்க திட்டம். என்ன ஒரு வில்லங்கத்தனம் பாருங்க, நீங்க கஷ்டப்பட்டு மூச்சு இறைக்க படியில்...அவங்களோ ஹாயாக ஏசியில் உக்காந்து என்ஜாய் பன்றாங்க.
அப்புறம் டாக்டர் இப்பொ யார பார்த்தாலும் 28, 34, 36னு சொல்லி திரீராங்களே, அத பத்தி..
இங்க தான் நீங்க லாஜிக்கா திங்க் பன்னனனும். நாம் ஒருவரை சிறந்த மாணவன்னு எப்படி சொல்றோம், மதிப்பென் அதிமாக இருந்தால் தானெ? அப்பொ இதற்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு? பரிட்சையில் விடையானாலும், உடம்பு எடையானாலும், என்னோட பார்வயில் அதிக எண்ணெ என்னோட சாய்ஸ்.
வயிறு பானை மாதிரி இருக்குன்னு கின்டல் பன்றவங்கள பத்தி...
அவர்கள் ரசனை அற்றவர்கள், அது நம்ம நாட்டோட குடிசை தொழில் குலத்தொழிலை நையான்டி செய்கிறார்கள். நான் அதனை வன்மையாக கன்டிக்கின்றேன்.
எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம், ஒரு நாளைக்கு 8 டம்ப்லர் தண்ணீர் குடிக்கனும்னு சொல்றாங்களே.
அப்படியா சொர்றாங்க‌
என்ன டாக்டர், உங்களுக்கு தெரியாதா?
நான் தெரியாதுன்னு சொன்னேனா, நீங்க ஏதோ என்னை சந்தேகப்படுரீங்கன்னு நினைக்கிறேன்.
அய்யயோ அப்படி எல்லாம் இல்லை டாக்டர், யாருமில்லாத ஊருக்குத்தான் உங்கள பத்தி நல்லா தெரியுமே.
சரி சரி தண்ணீர் மேட்டருக்கு வர்ரேன், 8 டம்ப்ளல்ர்னு சொன்னாங்களே, என்ன டம்ப்ளர், என்ன கலர், என்ன ஷேப் இது மாதிர் டீடைல் கொடுத்தாங்களா? கொடுக்கமாட்டாங்க...ஏன்னா அவங்கள்ளாம் என்ன மாதிரி விவரமானவங்க இல்லை.
இன்னொரு விஷயம் பெருமயோட சொல்லிக்கொள்கிறேன், எங்க ஊருக்கு யாருமில்லாத ஊருன்னு பேரு வர நான் தான் காரணம்.
சொல்லாமலே நான் தெரிஞ்சுக்கிட்டேன்...ரொம்ப நன்றி எங்களோட பொன்னான் நேரத்தை வீனாக்கியதற்க்கு......ஜூட்......

22 comments

S.A. நவாஸுதீன் on June 3, 2009 at 11:49 AM  

நீங்க‌ விளையாடுற‌து இத‌யத்தோட‌...சிட்டு குடுவை அல்ல‌.

ஹா ஹா ஹா. அடேங்கப்பா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாளாச்சு. சூப்பர்


S.A. நவாஸுதீன் on June 3, 2009 at 11:51 AM  

இவர் உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம் பெற்றவர்.

Prospectus இருக்கா. அஞ்சல் வழிக் கல்வில சேரலாம்னுதான். கொஞ்ச நாளைக்கு டாக்டர் வேலை பார்க்கணும்போல இருக்கு. மக்கள் தொகை ஜாஸ்தி ஆயிடுச்சு அதான்


S.A. நவாஸுதீன் on June 3, 2009 at 11:53 AM  

தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிருவோம், அந்த நேரம் போக, மீதி நேரத்திலும் தூங்கனும்.

ஆத்தாடி! இவர் தூக்கத்துல பேசுற டாக்டர்ஆ?


S.A. நவாஸுதீன் on June 3, 2009 at 11:57 AM  

இங்க தான் நீங்க லாஜிக்கா திங்க் பன்னனனும். நாம் ஒருவரை சிறந்த மாணவன்னு எப்படி சொல்றோம், மதிப்பென் அதிமாக இருந்தால் தானெ? அப்பொ இதற்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு? பரிட்சையில் விடையானாலும், உடம்பு எடையானாலும், என்னோட பார்வயில் அதிக எண்ணெ என்னோட சாய்ஸ்.

இப்பதான் இவர் உண்மையான டாக்டர்னு நான் ஒத்துக்கிறேன்.


SUFFIX on June 3, 2009 at 11:58 AM  

//சிட்டு குடுவை//
ஞாபகம் இருக்கா நவாஸ்...கலர் கலரா ஒரு ஓலையில் நெய்த பெட்டியில் வருமில்லயா? இப்பொ எங்கே..குழந்தைகள் ஜாய் ஸ்டிக்கும், பிளே ஸ்டேஷனும் கேட்குறாங்க‌


SUFFIX on June 3, 2009 at 12:00 PM  

//S.A. நவாஸுதீன் said...
ஆத்தாடி! இவர் தூக்கத்துல பேசுற டாக்டர்ஆ?//

தூக்கத்தில் பேசினா பரவாயில்லை...சிகிச்சை செய்யாமல் இருந்தால் சரி


SUFFIX on June 3, 2009 at 12:04 PM  

//S.A. நவாஸுதீன் said... கொஞ்ச நாளைக்கு டாக்டர் வேலை பார்க்கணும்போல இருக்கு//

நீங்க இப்போ இருக்கிற வேலையே கன்டினியூ பன்னுங்க... வேகன்சி வந்தால் சொல்றேன்..ஹீ..ஹீ


S.A. நவாஸுதீன் on June 3, 2009 at 12:06 PM  

எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம், ஒரு நாளைக்கு 8 டம்ப்லர் தண்ணீர் குடிக்கனும்னு சொல்றாங்களே.

எந்தத் தண்ணின்னு சொல்லலையே (இது நான் இல்லைங்க மின்னாரப்பா கேக்குறாரு)


SUFFIX on June 3, 2009 at 12:09 PM  

//S.A. நவாஸுதீன் said...
எந்தத் தண்ணின்னு சொல்லலையே (இது நான் இல்லைங்க மின்னாரப்பா கேக்குறாரு)//

மின்னாரப்பா........இது மினரல் வாட்டரப்பா


S.A. நவாஸுதீன் on June 3, 2009 at 12:11 PM  

இன்னொரு விஷயம் பெருமயோட சொல்லிக்கொள்கிறேன், எங்க ஊருக்கு யாருமில்லாத ஊருன்னு பேரு வர நான் தான் காரணம்.

சூப்பர்


அப்துல்மாலிக் on June 3, 2009 at 12:54 PM  

ஹா ஹா நல்ல சோக்குப்பா

டாக்டர்ஸ் இவ்வளோ பணம் கொடுத்து படிச்சிட்டு வாரானுவோ உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சு


அப்துல்மாலிக் on June 3, 2009 at 12:55 PM  

//உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம் பெற்றவர்//

ஹா ஹா அப்ளிகேஷன் இருந்தா அனுப்பிவையுங்க‌


அப்துல்மாலிக் on June 3, 2009 at 12:56 PM  

//தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிருவோம், அந்த நேரம் போக, மீதி நேரத்திலும் தூங்கனும்.
///

ஆவ்வ்வ்வ் எனக்கு ரொம்ப புடிச்சது


அப்துல்மாலிக் on June 3, 2009 at 12:57 PM  

//நீங்க‌ விளையாடுற‌து இத‌யத்தோட‌...சிட்டு குடுவை அல்ல‌.
//

நாங்க சிட்டுக்குடுவையோடுதான் விளையாடுவோம்.. ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னா நாங்க தெருப்பக்கம் யுனிவர்சிடிலே படிச்சவங்களாக்கும் ஹேங்ங்


அப்துல்மாலிக் on June 3, 2009 at 12:58 PM  

நல்ல மொக்கை ச்சே கற்பனை வளம் வாழ்த்துக்கள்


SUFFIX on June 3, 2009 at 1:02 PM  

அபுஅஃப்ஸர் said... //தூங்கனும்....
ஆவ்வ்வ்வ் எனக்கு ரொம்ப புடிச்சது//

அலுவலகத்தில் zzzzzzz அந்த ட்ரய்னிங்குக்கு நீங்க ரெஜிஸ்டர் பன்னலயா...இல்லாட்டி அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கா..


SUFFIX on June 3, 2009 at 1:05 PM  

அபுஅஃப்ஸர்// என்ன நவாஸ் ரொம்ப சைலன்ட் ஆயிட்டாரு...ஒரு வேளை நம்மளோட பதிவு படிச்சு அதை ஃபால்லோ பன்ன ஆரம்பிச்சுட்டாரோ?


SUMAZLA/சுமஜ்லா on June 3, 2009 at 3:19 PM  

ஹா ஹா! வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு என்ன ஒரு நகைச்சுவையான கற்பனை! இத பள்ளி மாணவர்கள் மோனோ ஆக்டிங்கா செய்தா கூட நல்லா இருக்கும் போல.

ப்ளாகிங்குக்கு புதுசு, அதான் என்ன எழுதியிருக்கப் போறார்னு அசால்ட்டா படிச்சா, கிரேட்! ஆனந்த விகடன் நையாண்டியின் தரத்துக்கு இணையா இருக்கு; கீப் இட் அப்!


SUFFIX on June 3, 2009 at 3:26 PM  

//SUMAZLA/சுமஜ்லா said...
ஹா ஹா! வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு என்ன ஒரு நகைச்சுவையான கற்பனை!//

வருகைக்கும் ரசித்ததிற்க்கும் மிக்க நன்றி, நான் உங்களுடைய ஹஜ் பயன கட்டுரைகளை மிகவும் ரசித்து படித்து கொன்டு இருக்கின்றேன்.


நட்புடன் ஜமால் on June 6, 2009 at 4:42 AM  

சுமஜ்லா சொல்லியது போல் மோனோ ஆக்டிங் முயற்சி செய்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஹாஸ்யம் நிறம்பி வழியுது.

டொக்டர்கள் பாவம்

இப்படியா கலாய்ப்பாங்க


SUFFIX on June 6, 2009 at 9:18 AM  

ரொம்ப நன்றி ஜமால்..என்ன செய்ய, லொள்ளு சும்மா இருக்கமாட்டாகளே..கூட கூட வந்துருவாகளே.


Jaleela Kamal on July 11, 2009 at 11:36 AM  

ஷபி லொள்ளு நா லொள்ளு நிஜ லொள்ளு இது தான்