|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

முடி வளர்ந்திருக்கோ இல்லயோ..மாசம் பொறந்து முதல் வாரத்திர்க்குள் தலையை சலூனில் போய் காட்டி விடுறது நம்மளோட பழக்கம்..அது எப்பவோ பிளான் பன்னுனது, அது இப்படியே தொடர்கிறது (எதயுமே நாங்க பிலான் பன்னித்தான் செய்வோம்ல).

இந்த சலூன் கடைக்கு போரதுன்னாலே நமக்கு ஒரு மினி ப்ராஜக்ட் செய்ரமாதிரி, டைம் பாத்து போவனும், நம்மளோட ஃபேவரைட் முடிதிருத்துனர் இருக்காரான்னு பாக்கனும், கூட்டம் எப்படி இருக்குன்னு கன்னோட்டம் இடனும்..அப்பப்பா..

அது என்னமோ தெரியலே, உலகலாவிய சலூன் சங்கத்தினர் ஒருங்கினைத்து ஒரு தீர்மானம் நிறைவேத்திட்டாங்கன்னு நினைக்கிரேன், அது தாங்க.. நீங்க எத்தனை முறை போனாலும் அதே பழைய நியூஸ் பேப்பர், பத்திரிக்கைகள தான் படிக்கனும். அது அதிரையோ, மதுரையோ உலகின் எந்த மூலையோ.

நம்ம ஊரா இருந்தால், நாம் பிறப்பதுற்க்கு முன்னாடி வெளிவந்த குமுதம், கல்கன்டு, தினத்தந்தி எல்லாம் அழகாக அடுக்கி வச்சுருப்பாங்க‌. பழைய விகடனில் "ஆறிலிருந்து அறுபது வரை" பட விமர்சனமோ, "இன்று ரைட் சகோதரர்கள் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக செலுத்தினர்" மாதிரி செய்தியோ, இன்னும் சில கடைகளில், "ஷாஜகான் இன்று தாஜ்மகாலுக்கு அடிக்கள் நாட்டி, மக்களுக்கு இனிப்பு வழ்ங்கினார்" இது மாதிரி நியூஸ் ஷாக்கிங் கொடுக்கும்.

அதுவே இந்த ஊருல‌ (ஜித்தா) பழைய அரபி பத்திரிக்கைகளா வச்சுருக்காங்க, அது என்னமோ தெரியல, அதிகமான கடைங்கள்ள லேடீஸ்க்கு உள்ள ஃபேஷன் சம்பந்தப்பட்ட 'ஜமீலா', 'சய்யிதாத்தி' யா இருக்கு (இதன் நுட்பம் என்னவோ..சரி சரி இது எல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம்)..உஙக் ஏரியாவுலயும் அப்படித்தானா?

நேத்து இப்படித்தான் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சலூனுக்கு போனேன், பார்த்தால் ஜஸ்ட் ஒருவர் தான், அப்பாடா, இன்னக்கி ஒரு புத்தகத்தோட தப்பிச்சோம். சரி இன்னக்கி வழ்க்கம்போல் மேலே உள்ள புத்தகத்தை எடுக்காமெ, நடுவில் உள்ள ஒரு சஞ்சிகையை சருட்டுன்னு ஸ்டைலாக உருவினால்..அடங்...போன மாசம் பார்த்த அதே மேகஸின் தான், ஆனா கொஞ்சம் வித்யாசம், இன்னும் பழசா இருந்தது (என்ன ஒரு கன்டுபிடிப்பு)

சரி வேறு ஏதாவது இருக்கான்னு கின்டி பார்த்தா..2005ம் ஆன்டு வெளியிட்ட ஒரு சூப்பர் மார்க்கெட்டோட ஆஃபர் பேப்பர் அதுவும் இந்த சலுகை 15 ஏப்ரல் 2005 வரை மட்டுமேன்னு கொட்டை எழுத்தில்...என்ன கொடுமைடா. அப்பொது தான் எனக்கு ஒன்று ஸ்ட்ரைக் ஆனது. நாம் அடுத்த முறை இது போன்ற க்யூ சமாச்சாரத்திற்க்கு வரும்போது ஏதாவது ஒரு உபயோகமான (இது மாதிரி வெட்டிப்பதிவு மாதிரி இல்லாமல்) புத்தகம் கொன்டு வரலாம்னு தீர்மானத்திக்கொன்டேன். எதுவுமே நமக்கு லேட்டாத்தான் புரியுமோ?

30 comments

S.A. நவாஸுதீன் on June 8, 2009 at 11:54 AM  

அது என்னமோ தெரியலே, உலகலாவிய சலூன் சங்கத்தினர் ஒருங்கினைத்து ஒரு தீர்மானம் நிறைவேத்திட்டாங்கன்னு நினைக்கிரேன், அது தாங்க.. நீங்க எத்தனை முறை போனாலும் அதே பழைய நியூஸ் பேப்பர், பத்திரிக்கைகள தான் படிக்கனும். அது அதிரையோ, மதுரையோ உலகின் எந்த மூலையோ.

அவங்க என்ன பண்ணுவாங்க பாவம். அவங்களுக்கு தலைக்கு மேல வேலை இருக்கும்போது இதையெல்லாம் கவனிக்க நேரமிருக்காதோ என்னமோ.


S.A. நவாஸுதீன் on June 8, 2009 at 11:55 AM  

நம்ம ஊரா இருந்தால், நாம் பிறப்பதுற்க்கு முன்னாடி வெளிவந்த குமுதம், கல்கன்டு, தினத்தந்தி எல்லாம் அழகாக அடுக்கி வச்சுருப்பாங்க‌. பழைய விகடனில் "ஆறிலிருந்து அறுபது வரை" பட விமர்சனமோ, "இன்று ரைட் சகோதரர்கள் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக செலுத்தினர்" மாதிரி செய்தியோ, இன்னும் சில கடைகளில், "ஷாஜகான் இன்று தாஜ்மகாலுக்கு அடிக்கள் நாட்டி, மக்களுக்கு இனிப்பு வழ்ங்கினார்" இது மாதிரி நியூஸ் ஷாக்கிங் கொடுக்கும்.

சும்மா சரளமா நகைச்சுவையா எப்படி எழுத முடியுது உங்களால. கலக்குறீங்க போங்க.


S.A. நவாஸுதீன் on June 8, 2009 at 11:58 AM  

அதுவே இந்த ஊருல‌ (ஜித்தா) பழைய அரபி பத்திரிக்கைகளா வச்சுருக்காங்க, அது என்னமோ தெரியல, அதிகமான கடைங்கள்ள லேடீஸ்க்கு உள்ள ஃபேஷன் சம்பந்தப்பட்ட 'ஜமீலா', 'சய்யிதாத்தி' யா இருக்கு (இதன் நுட்பம் என்னவோ..சரி சரி இது எல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம்)..உஙக் ஏரியாவுலயும் அப்படித்தானா?

ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. புக்ல உள்ள விளம்பரங்கள் பார்க்குறதுக்கு நல்லாத்தான் இருக்கும் (இதுல உள் அர்த்தம் ஏதும் இல்லைங்கோ).


S.A. நவாஸுதீன் on June 8, 2009 at 12:00 PM  

அடங்...போன மாசம் பார்த்த அதே மேகஸின் தான், ஆனா கொஞ்சம் வித்யாசம், இன்னும் பழசா இருந்தது (என்ன ஒரு கன்டுபிடிப்பு)

ஹா ஹா. Nice Timing


S.A. நவாஸுதீன் on June 8, 2009 at 12:03 PM  

நாம் அடுத்த முறை இது போன்ற க்யூ சமாச்சாரத்திற்க்கு வரும்போது ஏதாவது ஒரு உபயோகமான (இது மாதிரி வெட்டிப்பதிவு மாதிரி இல்லாமல்) புத்தகம் கொன்டு வரலாம்னு தீர்மானத்திக்கொன்டேன். எதுவுமே நமக்கு லேட்டாத்தான் புரியுமோ?

நல்லவேளை முடி எல்லாம் கொட்டிப் போறதுக்கு முன்னாடியாவது யோசனை வந்துச்சே!. (சவுதிக்கு வேலைக்கு வந்தாலே தலை பாரம் குறையும்னு சும்மாவா சொன்னாங்க).


Shafi Blogs Here on June 8, 2009 at 12:20 PM  

S.A. நவாஸுதீன் said...
//ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. புக்ல உள்ள விளம்பரங்கள் பார்க்குறதுக்கு நல்லாத்தான் இருக்கும் //

இதுல கொடுமை என்னன்னா..சில வில்லன்ங்கள், முக்கியமான பக்கங்களை கிழிச்சுட்டு போய்விடுராங்கப்பு, உங்களை போன்ற தன்னார்வத்துடன் அறிவை வளர்த்துக்கிடரவங்கல்லாம் எப்படி அப்செட் ஆவீங்கன்னு இப்பொ புரியுது.


Shafi Blogs Here on June 8, 2009 at 12:23 PM  

மிக்க நன்றி நவாஸ்..ஏதோ நடைமுறை வாழ்வில் நடக்கும் விடயங்கள் தான், கொஞசம் நகைச்சுவயுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Shafi Blogs Here on June 8, 2009 at 12:35 PM  

S.A. நவாஸுதீன்
//நல்லவேளை முடி எல்லாம் கொட்டிப் போறதுக்கு முன்னாடியாவது யோசனை வந்துச்சே!.//

இப்பொ மட்டும் என்னவாம்? சன் சில்க் விளம்பரத்தில் வர்ர பொன்னு மாதிரி நீன்ட கூந்தலுடனா இருக்கோம். By force நாங்க 'கஜினி' ஸ்டைலுக்கு மாறிட்டோம்ல.


அபுஅஃப்ஸர் on June 8, 2009 at 1:35 PM  

நானெல்லாம் சலூன் கடையிலேதான் குடும்பமலர், தினதந்தி (கிழிந்த) மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் அனைத்தும் படிப்பது வழக்கம், ஒரு புக் வாங்குற காசுக்கு ஊருலே 1 வருஷம் சந்தாதாரம் ஆகிடலாம்....


அபுஅஃப்ஸர் on June 8, 2009 at 1:37 PM  

எனக்கு இந்த பதிவை படிக்கும்போது விவேக் டீக்கடையிலே சொல்லும் ஒரு ஜோக்தான் ஞாபகம் வருதுப்பா..(அமெரிக்க போவதுக்கு சுத்திக்கிட்டு இருப்பாருலெ)

இருந்தாலும் பழைய நியூஸ் படிக்கும்போது சிரிப்பாகதான் வரும், அதுவும் அரசியல் வாதிகளின் கருத்துக்கள்


நல்ல காமெடியுடன் கூடிய எழுத்துநடை ரசிச்சேன் ஷஃபி


Shafi Blogs Here on June 8, 2009 at 1:48 PM  

வருகைக்கு நன்றிங்க அபுஅஃப்ஸர்....ஒரு சலூனுக்கு பின்னால் தான் எத்தனை சமாச்சாரம்!!


நட்புடன் ஜமால் on June 8, 2009 at 4:01 PM  

சலூன் மேட்டர் அருமையப்பூ

நமக்கும் ஒரு மேட்டர் இருக்கு ஆனா இவ்வளவு சுவாரஸ்யமா சொல்ல இயலாது.


நட்புடன் ஜமால் on June 8, 2009 at 4:03 PM  

Please change your commenting style

Please change to Full page commenting.

This type of commenting I am not able to comment from Office.


Shafi Blogs Here on June 8, 2009 at 4:08 PM  

நன்றி ஜமால்,

//நட்புடன் ஜமால் said...நமக்கும் ஒரு மேட்டர் இருக்கு//

அந்த பதிவே இப்புடி போட்டு விட்டுருங்க... நீங்கள் தான் பிலாக் கடலில் வெற்றிகரமாக பயனிக்கும் வாஸ் கோடகாமாவாச்சே.. நாங்களும் உங்க கப்பல்ல ஏறி ஜமாய்ச்சுடுவோம்.


Shafi Blogs Here on June 8, 2009 at 4:11 PM  

Dear Jamal, I have changed the comment style. Thanks


rose on June 8, 2009 at 7:48 PM  

(எதயுமே நாங்க பிலான் பன்னித்தான் செய்வோம்ல
\\
ஆமா ஆமா


rose on June 8, 2009 at 7:50 PM  

இந்த சலூன் கடைக்கு போரதுன்னாலே நமக்கு ஒரு மினி ப்ராஜக்ட் செய்ரமாதிரி, டைம் பாத்து போவனும், நம்மளோட ஃபேவரைட் முடிதிருத்துனர் இருக்காரான்னு பாக்கனும், கூட்டம் எப்படி இருக்குன்னு கன்னோட்டம் இடனும்..அப்பப்பா..
\\
இவ்லோ சமாச்சாரம் இருக்கா


rose on June 8, 2009 at 7:53 PM  

அது என்னமோ தெரியலே, உலகலாவிய சலூன் சங்கத்தினர் ஒருங்கினைத்து ஒரு தீர்மானம் நிறைவேத்திட்டாங்கன்னு நினைக்கிரேன், அது தாங்க.. நீங்க எத்தனை முறை போனாலும் அதே பழைய நியூஸ் பேப்பர், பத்திரிக்கைகள தான் படிக்கனும். அது அதிரையோ, மதுரையோ உலகின் எந்த மூலையோ.
\\
லண்டனா இருந்தாலும் இப்படிதானோ?


நட்புடன் ஜமால் on June 9, 2009 at 6:13 AM  

\\நீங்கள் தான் பிலாக் கடலில் வெற்றிகரமாக பயனிக்கும் வாஸ் கோடகாமாவாச்சே.. \\

டைட்டானிக் என்று சொல்லாமல் வீட்டீர்கள்

எல்லாம் மாயை ஷஃபி.


SUMAZLA/சுமஜ்லா on June 9, 2009 at 7:22 AM  

///"ஷாஜகான் இன்று தாஜ்மகாலுக்கு அடிக்கள் நாட்டி, மக்களுக்கு இனிப்பு வழ்ங்கினார்" இது மாதிரி நியூஸ் ஷாக்கிங் கொடுக்கும்.///

இதைப் படிச்ச எனக்கே ரொம்ப ஷாக்கிங்கா இருந்ததுன்னா....

நவாஸுதீன், சும்மா கமெண்ட் எண்ணிக்கையை கூட்டுவதற்காகவே பதிவு போடுகிறாரோ? இது போன்ற நண்பர்கள் அமைவது அபூர்வம். தக்க வெச்சிக்குங்க!


Shafi Blogs Here on June 9, 2009 at 8:36 AM  

இன்னக்கி காலைல ஆஃபிஸ் வந்து முதல் வேலையா நம்மளோட வலப்பூவை திறந்து பார்த்தா..அம்மாடியோ இத்தனை பின்னூட்டங்கள். அண்ணே...புல்லரிக்குதுண்ணே!!


Shafi Blogs Here on June 9, 2009 at 8:40 AM  

//rose said...
லண்டனா இருந்தாலும் இப்படிதானோ?//

ஆமாம்...லன்டன்லயும் அப்படித்தானாம்!! போன் போட்டு கன்ஃபர்ம் பன்னியாச்சு, தினத் தந்திக்கு பதிலா.."Daily Telegrapஹ்". இங்கே கல்கன்டு...அங்கே.."Sugar Cube".


Shafi Blogs Here on June 9, 2009 at 8:45 AM  

SUMAZLA/சுமஜ்லா said...
நவாஸுதீன், // இது போன்ற நண்பர்கள் அமைவது அபூர்வம். தக்க வெச்சிக்குங்க!//

மிக்க நன்றி சுமா.. ஆமாம் இந்த வலைப்பூ தோட்டர்த்திர்க்குள் என்னை அழைத்து வந்ததே நவாஸ் தான்.. நல்ல ஒரு நன்பர், நீங்கள் கூறியது போல்.


Shafi Blogs Here on June 9, 2009 at 8:47 AM  

நட்புடன் ஜமால் said...
\\டைட்டானிக் என்று சொல்லாமல் வீட்டீர்கள்//

வாஸ்கோடகாமா ஒரு சாதனையாளர் அல்லவா, அவரோடு தங்களை ஒப்பிடுவதுதான் மிகச்சரி.


Shafi Blogs Here on June 9, 2009 at 8:52 AM  

rose said... //இவ்லோ சமாச்சாரம் இருக்கா//

ச‌லூன்..ஒரு சாலையோர‌ ப‌ள்ளிக்கூட‌ம்னு சொன்னாலும் த‌ப்பில்லை ரோஸ். அதுனால‌தேன் அங்கே சீட் பிடிக்க‌ அவ்ளோ போட்டி!! கை தேர்ந்த (க‌த்தி தேய்ந்த அல்ல) வல்லுனர்கள் இருந்தால் இன்னும் காம்பெட்டிஷன் ஓவரா இருக்கும்.‌


அ.மு.செய்யது on June 10, 2009 at 12:17 AM  

ஹா..ஹா...ர‌சித்து சிரித்தேன் ஷ‌ஃபி.

ச‌லூன் க‌டைக்கு போற‌தும் ஒரு சுவார‌ஸ்ய‌மான‌ அனுபவ‌ம் தான்.வித்தியாச‌மா எழுத‌றீங்க‌ பாஸ்.


அ.மு.செய்யது on June 10, 2009 at 12:18 AM  

ந‌ல்ல‌ த‌மிழ் பெய‌ரா உங்க‌ வ‌லைப்பூவுக்கு வைங்க‌ த‌ல‌...


Shafi Blogs Here on June 13, 2009 at 2:52 PM  

நன்றி அ.மு.செ!! ஒரு வழியா யோசிச்சு...பேரை மாத்தியாச்சு. எப்படி இருக்கோ..


அ.மு.செய்யது on June 13, 2009 at 8:24 PM  

ஷ்ஃபி உங்களில் ஒருவன்.

சூப்பர் பேரு ஷஃபி....கலக்கிட்டீங்க...தொடர்ந்து அடிச்சி ஆட ஆரம்பிங்க...

உங்க வலைப்பூவையும் தொடர்ந்தாச்சு..இனிமே பாருங்க...


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 13, 2009 at 9:57 PM  

//அ.மு.செய்யது said...
ஷ்ஃபி உங்களில் ஒருவன்.

உங்க வலைப்பூவையும் தொடர்ந்தாச்சு..இனிமே பாருங்க...//

அய்யயோ, பசங்க ஃபால்லோ பன்ன ஆரம்பிச்சுடாங்களா, இனிமே சாக்கிரதையாத்தேன் யோசிச்சு எழுதனும்...( ரொம்ப டேங்க்ஸ் அ.மு.செ)