|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!



இன்றைக்கு ஒரு சிம்ப்பிள் சமாச்சரத்திற்க்காக‌ ஒரு ட்ராவல் ஏஜன்சிக்கு போன் பன்னினேன். ப‌தில் சொன்ன‌ ந‌ப‌ரோ... நான் பிசி.. நான் பிசி, நேரில் வாங்க‌. காட்டுத்த‌ன‌மாக‌ க‌த்திவிட்டு, இனைப்பை துன்டித்து விட்டார். ஒரு அஞ்சு நிமிஷ‌ம் க‌ழித்து, ம‌றுப‌டியும் அழைத்தேன், அதே குர‌ல், அதே கோப‌ம்.. நான் பிசின்னு சொன்னேன்ல‌, நான் மிக‌வும் ப‌வ்ய‌மாக‌, நீங்க‌ பிசின்னு தெரியுது, ஆனா இந்த‌ சின்ன‌ ஒரு ப‌திலுக்காக‌ உங்க‌ ஆஃபிஸ் வ‌ர‌னும்கிர‌து நியாய‌ம் இல்லை, நானும் இங்கே பிசி தான், "அப்ப‌டியா..அப்பொ வ‌ர‌வேனாம்னு" போனை வைத்து விட்டார். எதுவா இருந்தாலும் மூனு முறை முய‌ற்சி ப‌ன்ன‌னும்னு பெரிய‌வ‌ங்க‌ சொல்லி இருக்காங்க‌. அத‌யும் தான் பார்த்து விட‌லாமே..எதுக்குடா ரிஸ்க்னு நீங்க‌ கேட்கிர‌து புரிகிற‌து, ரிஸ்க் எடுக்கிரதுதான் ந‌ம‌க்கு ர‌ஸ்க் சாப்பிட‌ர‌மாதிரின்னு சொல்லி திரும்ப‌வும் ஒரு முய‌ற்சி...திரும்ப‌வும்..அதே...அதே..."அய்யா நீங்க‌ ரொம்ப‌ பிசின்னு புரியுது, நீங்க‌ எப்போ ஃப்ரீயா இருப்பீங்க‌ன்னு சொல்லுங்க‌", ம‌றுப‌டியும் க‌டு..க‌டு. "நான் எப்போதுமே பிசிதான்" போனை நங் என்று வைத்தார்...உடைத்தார்னு சொல்லனும்.


இவ‌ர் மேல் கோப‌த்தை காட்டிலும், அனுதாப‌மே தோன்றிய‌து, பாவ‌ம் என்ன‌ பிர‌ச்னையோ, தான் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் உள்ள எல்லா பனிகளையும் செய்ய வேன்டிய சூழ்நிழை, இந்த மனிதரை பாடாய் படுத்துகிரது போலும், இல்லைனா ஏதாவது தனது சொந்த பிரச்னை அதனை சமாளிக்க முடியுமானால் தவிக்கிராரோ என்னவோ!! எப்படியோ...

சில வருடங்களுக்கு முன் Lee Iacocca, அது தாங்க இந்த Chrysler கார் தயாரிக்கிராங்களே, அதொட நிறுவனரோட biography படிச்சேன், அவர் சதாரன கூலி வேலையாலாக இருந்து, பின்னர் சிறு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு, பின்னர் படித்து, Ford கம்பெனியில் சேர்ந்து, பின் அதிலிருந்து விலகி, Chrysler கம்பெனியை ஆரம்பிச்சாராம். இவர் ரெஸ்டாரன்ட் நடத்தும்போது ஒரு சர்வர் வருகிர எல்லா கஸ்டமர்களிடம் எறிஞ்சு எறிஞ்சு விழுவாராம். இத கவனிச்ச லீ, அவரை கூப்பிட்டு என்னப்பா நீ எப்போதும் ரொம்ப டென்ஷ்னாவே இருக்கியேன்னு கேட்டாராம், "ஆமா, எனக்கு உள்ள தகுதிக்கு நான் எப்படியோ இருக்க வேன்டிய ஆளு, ஏதோ தலைவிதி இங்கே வந்து சர்வரா வந்து மாட்டிக்கிட்டேன்"

அதற்கு லீ, அய்யய்யோ என்கிட்டே ச்ர்வர் வேலை தவிர வேற ஒன்னும் இல்லையேனுட்டு அவருக்கு அட்வைஸ் பன்ன ஆரம்பிச்சாராம். “நீ இப்படி நடந்துக்குறதினாலே, மூனு விதத்தில் பாதிக்கப்டுகிறோம். முதல்ல நீ, உனக்கு தகுதிக்கு குறைவான இடத்தில் வேலை செய்ரதுனாலே, உன்னொட எதிர்காலத்தை வீனாக்கிக்கிட்டு இருக்கிரது மட்டுமில்லாமல், இப்படி அடிக்க்டி டென்ஷன் ஆகிரதினால் உன்னோட ஆரோக்கியமும் கெடுகிறது. இரன்டாவது, என்னோட பிசினஸ், இங்க வர்ர கஸ்டமர் வச்சு தான், நான் பிசினஸ் நடத்த முடியும், இங்கு வேலை செய்ர எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க முடியும், ஆனால் நீ என்னடான்னா எல்லொரயும் விரட்டி அடிச்சுடுவெ போரிருக்கே. மூன்றாவது, இந்த சர்வர் வேலையாவது கிடைக்காதான்னு ஆயிரக்கனக்கான பேர் காத்துக்கிட்டு இருக்காங்க, அவங்களோட எதிர்காலத்திற்க்கு நீ தடையா இருக்கே” அப்படின்னாராம் - இதுக்கு பேர் தான் லீ பன்ச்!!.

நம்மளோட லைஃப்லேயும் இது மாதிரி சவால்கள் அப்பொப்போ எட்டிப்பார்க்கும். அப்பொவெல்லாம் லீயே வந்து நம்ம முன்னாடி வந்து இது மாதிரி மிரட்டுரமாதிரி இருக்கும். கொஞ்சம் சுதாரிச்சு...(ஏதாவது சொல்லி எஸ்டாபிளிஷ் பன்னிருவோம்ல...இதுக்கு மேலயும் விளக்கமா சொல்லனுமா...ஹீ..ஹீ)

இந்த பதிவை இங்கே இடுவதினால், வேலை பிடிக்கலனா சீட்டை காலி பன்னுங்கன்னு அர்த்தம் இல்லை, கொஞ்சம் புரிஞ்சு, அட்ஜஸ்ட் பன்னி நடந்துக்கோங்க, அம்புட்டுதேன்.

16 comments

S.A. நவாஸுதீன் on June 6, 2009 at 4:24 PM  

பயனுள்ள பதிவு Shafi.

Lee Iacocca, பற்றிய தகவல்கள் சிந்திக்கத் தூண்டியவை.

உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க.


SUFFIX on June 6, 2009 at 4:50 PM  

உங்க்ள் ஊக்கத்திர்க்கு மிக்க நன்றி நவாஸ்...


நட்புடன் ஜமால் on June 6, 2009 at 5:50 PM  

புச்சு புச்சா ஏதோ ஏதோ சொல்லுதியள்

நன்றிங்கோ


rose on June 6, 2009 at 6:22 PM  

நட்புடன் ஜமால் said...
புச்சு புச்சா ஏதோ ஏதோ சொல்லுதியள்

நன்றிங்கோ

\\
நானும் கூவிக்குறேன்


SUFFIX on June 7, 2009 at 8:37 AM  

நன்றி ஜமால் & ரோசம்மா, ஏதோ, நமக்கு கிடைத்த பிஸ்ஸாவில் ஆளுக்கு ஒரு பீஸ்னு சொல்ற மாதிரி, தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துக்குரேனுங்க.


அப்துல்மாலிக் on June 7, 2009 at 10:52 AM  

ஒரே டென்ஷன்ப்பா


அப்துல்மாலிக் on June 7, 2009 at 10:55 AM  

லீ பஞ்ச் சூப்பருங்கோ

அருமையான பதிவு

நல்லா நிறையா நல்லதா பதிவிடுங்கோ


SUFFIX on June 7, 2009 at 11:44 AM  

வருகைக்கு நன்றி, நீங்க வருவீக, கருத்தை சொல்லுவீகன்னு எனக்கு தெரியும், நேத்து நீங்க வரலியேன்னு கொஞ்சம் டென்ஷனாத்தேன் இருந்தச்சு!!


SUFFIX on June 7, 2009 at 11:48 AM  

ஒரு வழியா நம்ம பிலாகில் ஒரு சகனுக்கு ஆளு சேர்ந்துருச்சுப்பா!! ஆரம்பிச்சுடவேன்டியது தான்!! என்ன சரிதானே? நவாஸ், அபூ ஆஃப்ச்ர், ஜமால்?


SUFFIX on June 7, 2009 at 11:55 AM  

//அபுஅஃப்ஸர் said...
லீ பஞ்ச் சூப்பருங்கோ//
ஆமாம் நம்ம இது வரை புரூஸ் லீ பன்ச் தான் கேள்வி பட்டிருக்கோம், இப்பொதான் எல்லொரும் பன்ச்ராங்களே.. நமக்கு என்ன லீ அய்கோக்கா சொன்னா என்ன, சாவன்னா காக்கா சொன்னா என்ன, நல்லது யாரு சொன்னாலும் போட்டு வாங்கிக்க வேன்டியது தான்


அப்துல்மாலிக் on June 7, 2009 at 2:37 PM  

//Shafi Blogs Here said...
ஒரு வழியா நம்ம பிலாகில் ஒரு சகனுக்கு ஆளு சேர்ந்துருச்சுப்பா!! ஆரம்பிச்சுடவேன்டியது தான்!! என்ன சரிதானே? நவாஸ், அபூ ஆஃப்ச்ர், ஜமால்?
//

சகனுக்கு மூனு பேருதானே.. அப்போ நீங்க சப்ளையரா (நான் லீ கடைய சொல்லவரலே), மாப்பிள்ளை சகனாக்கும் நன்னா பேஷா கவனிக்கனும்.. சரியா...


SUFFIX on June 7, 2009 at 2:44 PM  

//சகனுக்கு மூனு பேருதானே.. அப்போ நீங்க சப்ளையரா//
விருந்தோம்பல்னு டீசன்டா சொல்லுங்கப்பா...என்னாது சகனுக்கு மூனா? எப்பொப்பா இந்த பாலிசி திருத்தப்பட்டது? அலப்பரைக்கு அளவு இல்லையா...


SUMAZLA/சுமஜ்லா on June 7, 2009 at 8:05 PM  

M.B.A. பட்டதாரியா நீங்க?! இந்த போடு போடறீங்களே?

நானும் போட்டாச்சு போட்டிக்கு சிறு கதை. நேரம் இருக்கப்ப, எட்டிப் பாருங்க!


SUFFIX on June 8, 2009 at 8:03 AM  

நன்றி சுமா...இப்பொ தான் M.B.A. படித்துக்கொன்டிருக்கும் மானாக்கன், 15 வருடத்திர்க்கு அப்புறம் புத்தகத்தை எடுத்து படிப்பதென்பது, கொஞ்ச்ம் சேலஞ்சாத்தேன் இருக்கு.. நமக்குத்தான் சேலஞ்சுன்னாலே..TV சேனல் மாத்துரமாதிரியில்ல..கலக்கிடுவோம்ல.


Jaleela Kamal on June 9, 2009 at 9:31 AM  

ஹா ஹா யார் பா கண்டுபிடிச்சது இந்த டென்ஷனை, அதுக்கு என்ன தமிழில் அர்த்தம்...

அய்யோ அவரா? அவர் சரியான டென்ஷன் பார்ட்டி பா, உடனே என்னவோ பட்டம் கிடைத்த மாதிரி ஒரு அலட்டல் வேறு..

ஆனால் அவ்வளவு டென்ஷனும் உடம்பில் உள்ள வியாதிக்கு அறிகுறி. ஹி ஹி


SUFFIX on June 9, 2009 at 9:38 AM  

Jaleela said...
//ஹா ஹா யார் பா கண்டுபிடிச்சது இந்த டென்ஷனை, அதுக்கு என்ன தமிழில் அர்த்தம்...

அய்யோ அவரா? அவர் சரியான டென்ஷன் பார்ட்டி பா, உடனே என்னவோ பட்டம் கிடைத்த மாதிரி ஒரு அலட்டல் வேறு..

ஆனால் அவ்வளவு டென்ஷனும் உடம்பில் உள்ள வியாதிக்கு அறிகுறி. ஹி ஹி//

வருகைக்கு நன்றி, டென்ஷனாவமே படிச்சதிர்க்கு!!